அகணி என்ற புனைபெயரில் எழுதி வரும் சி.அ.சுரேஸ் என்ற எழுத்தாளர் கனடாவில் வாழ்ந்து வருகின்றார்.
இவர் அறிவியல் கட்டுரைகள், விமர்சனக் கட்டுரைகள், மரபுக்கவிதை, புதுக்கவிதை, சிறுகதைகள் என்பவற்றை எழுதி வருகின்றார்.
இவர் கவிச்சாரல்(புதுக்கவிதைத் தொகுதி), சாயி அமுதம்(மரபுக் கவிதைத் தொகுதி), நினைவாற்றல்(அறிவியல் நூல்) ஆகிய நூல்களைக் கனடாவில் வெளியிட்டுள்ளார். அத்துடன் கனடாவில் “பொதிகைப் புதுமலர்கள்” என்ற மரபுக்கவிதைத் தொகுதியை உருவாக்கிய கவிஞர் எண்மரில் இவரும் ஒருவராவர்.
இவரது சில தெய்வீகப் பாடல் வரிகள் இந்தியக் கலைஞர்களால் பாடப்பட்டு “ஸ்ரீ சத்திய சாயி போற்றி” என்ற இசைத்தட்டாக இந்தியாவில் உருவாக்கப்பட்டது.
இவரது ஆக்கங்கள் கனடாவில் இருந்து வெளிவரும் விளம்பரம் பத்திரிகை, தமிழ் மிரர் பத்திரிகை, முரசொலிப் பத்திரிகை, உதயன் பத்திரிகை, தூறல் சஞ்சிகை, ஈழநாடு பத்திரிகை போன்றவற்றில் வெளிவந்துள்ளன.