கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 4, 2024
பார்வையிட்டோர்: 380 
 
 

(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“சிவன் சக்தியைப் பார்த்தான். சக்தி சிவனைப் பார்த்தாள். மீண்டும் ஒரு வரேயான அர்த்தநாரீஸ்வரராயினர்!’ 

அர்த்தநாரீஸ்வரனின் விளையாட்டு நள்ளல். நடன உந்தலில் கால்கள் அபிநயத்துடன்… சக்திக்கும் சிவனுக்கு மிடையில் கலை வித்துவம் தொற்றிக் காழ்ப்பின் முனைப்பு. ஒன்றே இரண்டாகியது. சிவனும் சக்தியும் வேறாகிய நிலை. 

 ஓருடலில் ஓருயிராகவே இருந்தபொழுது நன்மை என்ற சிருஷ்டி சக்தி மட்டுமே இருந்தது. அம்மை அப்பன் விரோதத்தில் தீமை என்ற புதிய சிருஷ்டி சக்தியும் தோன்றியது. 

மலைகளையும், நதிகளையும், கடல்களையும் அவற்றில் வசிப்பதற்கு விலங்குகளையும் புள்ளினங்களையும் – மச்சங் களையும் ஊர்வனவற்றையும் நன்மை படைத்தது. சில மலைகளின் வயிற்றில் எரிமலைக் குழம்பையும், நதிகளிலே வெள்ளப் பெருக்கையும் – கடல்களிலே கோரப் புயல்களையும் – உயிரினங்கள் பலவற்றிற்குக் கொலை வெறியையும் தீமை படைத்தது. 

ஆனால், மனிதன் இன்பமுடன் வாழ்ந்தான். அவன் நன்மையையே சேவித்தான். 

தீமை கர்வியது. மனிதன் தன்னையே சேவித்தல் வேண்டுமென்ற போட்டியில் தீமை முழுமூச்சாக இறங்கியது. 

மனிதன் அநுபவிப்பதற்குப் பலளிதமான செல்வங் களை நன்மை படைத்திருந்தது. தீமை பொன்னை மண்ணுடன் கலந்தது; ரத்தினக் கற்களைப் பூமிக்கடியிற் பதுக் கியது; முத்துக்களைக் கடலின் ஆழத்திலே கொட்டியது. மனிதன் இன்பமுடன் வாழ்ந்தான். அவன் நன்மை யையே சேவித்தான். 

பழவர்க்கங்களை நன்மை படைத்தது. தீமை சிலவற் றிலே மதுவை ஒளித்து வைத்து அதனை வடிக்கும் இரகசியத்தை மனிதனுக்குக் கற்றுக்கொடுத்தது. மனிதன் இன்பமுடன் வாழ்ந்தான். அவன் நன்மையையே சேவித்தான். 

நட்பைப் படைத்தது நன்மை. விரோதத்தைப் படைத்தது. தீமை. அன்பைப் படைத்தது நனமை அழுக்காறினைப் படைத்தது தீமை, அறிவையும், அதனை நல்ல முறையிற் கையாளும் வகையையும் நன்மை கற் பித்தது. ஆணவத்தையும் அதர்ம வழிகளையும் தீமை கற்பித்தது. இப்படி எத்தனையோ போட்டிகள்! மனிதன் இன்பமுடன் வாழ்ந்தான். அவன் நன்மையையே சேவித்தான். 

தோல்விக்குப் பின் தோல்வியாக சங்கிலித் தொடரிலே ஏற்பட்ட தோல்விகளைத் தீமையினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அது நன்றாக யோசித்தது. தன் கருங்கூந்தல் பஞ்சுத் திரளாகும் வரை யோசித்தது. 

ஈற்றில், தீமை மோகத்தையும் தற்பற்றையும் மனித உள்ளத்திலே படைத்தது…. 

….மனிதன் தீமையை வணங்கத் தொடங்கினான்.

சிவன் சக்தியைப் பார்த்தான். 

சக்தி சிவனைப் பார்த்தாள். 

மீண்டும் ஒருவரேயான அர்த்தநாரீஸ்வரராயினர். 

இந்த இணைப்பிலே கூடத் தீமை சாகவில்லை. 

அந்த ஒளவைப் பாட்டி பாடத் தொடங்கினாள்! 

‘பண்டு முளைப்பதரிசியே யானாலும் விண்டும் போனால் முளையாதாம்….’

– கீதை நிழலில், முதற் பதிப்பு: அக்டோபர் 1975, கலைஞன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *