பீமனின் பராகரமம்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: January 11, 2014
பார்வையிட்டோர்: 34,550 
 
 

ஆதௌ கீர்த்தனாரம்பத்திலே மகாபாரதத்திலே பாதி மனுஷராகவும், பாதி மிருகமாகவும் காட்சி அளிக்கும் சிறந்த சிவபக்தரான புருஷமிருகத்தின் உதவி யுதிஷ்டிரருக்கு ஒரு முக்கியமான யாகத்தை முடிக்க தேவைப்பட்டதாம்..

மாயக் கண்ணனின் அறிவுரையின் பெயரில் யுதிஷ்டிரர் பீமனை இந்த வேலையை செய்ய நியமனம் செய்தாராம்..

வனமாலி கதீ சார்ங்கீ சங்கீ சக்ரீ ச நந்தகி

ஸ்ரீமான் நாராயணோ விஷ்ணுர்வாசுதேவோபிரக்ஷது

ஸ்ரீ வாசுதேவோபிரக்ஷது ஓம் நம இதி

விஷ்ணுசகஸ்ரநாமத்தின் சாரமான முக்கிய ஸ்லோகத்தினால் சாரங்கபாணியைத் தொழுத பீமனிடத்தில் 12 ருத்ராக்ஷங்கள் அத்துடன் சில குறியீடுகள் கொடுத்து காட்டில் தன்னுடைய உதவி கிடைக்காது. இவற்றின் உதவியோடு பீமனின் வேலையை முடித்துக் கொண்டு வரவேண்டும். எப்போது உதவி தேவைப் படுகின்றதோ அப்போது ஒரு ருத்ராக்ஷமும் ஒரு குறியீடு பேப்பர்துண்டும் சேர்த்து கீழே போடு என அருளினாராம் …ஸ்ரீமான் நாராயணன் ஆன மஹாவிஷ்ணு…

குறியீடு என்று இருந்த அதன் பொருள் என்ன என்று பீமன் பணிவுடன் கேட்க, அதன் பொருள் சொல்லிவிட்டால் மந்திரம் பலிக்காது. எனவே கேட்காதே என்று மந்திரப் புன்னகையுட்ன் மாயவன் கூறிவிட்டாராம்..

பூவுலகில் அதர்மம் தலைதூக்கும் போதெல்லாம் அவதாரம் எடுக்கும் கடமை தனக்கிருப்பதால் மஹாவிஷ்ணுவின் அவதாரமாக சாரங்கபாணி எஸ். பி. கோகுலாக பூவுலகம் வந்தாராம்…..

Sir,
எஸ்.பி கோகுலிடம் நான் தவறான குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன்..
கவலை வேண்டாம்… விஷ்ணு…

என்கிற குறிப்பு அவரது மேஜையில் வரவேற்றதாம்…

அதே நேரத்தில் விஷ்ணுவிடமிருந்து அழைப்பும்..

நாரதர் இந்த இக்கடான நேரத்தில் வழக்கம் போலத்தோன்றி

நாராயண !நாராயண!! என்ன சாரங்கபாணியாக கோகுலத்தில் லீலைகள் புரிந்த தங்களுக்கு விஷ்ணு இன்பார்மர் என செய்தி வருகிறதே என கேட்டாராம்.
பரவாசுதேவராகிய மஹாவிஷ்ணு எப்போது என்ன அவதாரம எடுக்கவேண்டும் என இன்பார்ம் பண்ணுவார்.. -மந்தாரமலையைத் தாங்க கூர்ம அவதாரமா, வேதங்களைக்காக்க ஹயக்கிரீவ அவதாரமா, இராவணனை வதைக்க இராம அவதாரமா, நரகாசுரனை அழிக்க கிருஷ்ண அவதாரமா, ஹிரண்யனைக் கொல்ல நரசிம்ம அவதாரமா என்பதை இன்பார்ம் செய்வதால் விஷ்ணு இன்பார்மர் — என விளக்கினாராம்.. எஸ். பி. கோகுல்!

புருஷாமிருகத்தின் சிவபக்தியின் பெருமையை உலகோர் அறிந்துகொள்ளவும், பீமனின் கர்வம் அடங்கவும், தர்மரின் நீதிநெறிதவறாத தீர்ப்பை வெளிகொணரவும் தான் மஹாவிஷ்ணுவான தான் இந்த
அவதாரத்தில் தவறான மந்திரப்பிரயோகம் கொடுக்கச் செய்தேன். கவலை வேண்டாம். சரியான குறியீடு பேப்பரில் தோன்றும்… என்று கூறினாராம் செல்போனில் விஷ்ணு இன்பார்மர்..

பீமனும் காட்டிற்கு உள்ளே புருஷாமிருகம் இருக்கும் இடத்திற்கு சென்று ஒரு போட்டி அறிவித்தானாம்…

தன் எல்லையான காட்டின் எல்லையை விட்டு பீமன் வெளி வந்தால் அவனுக்கு வெற்றி, நடுவில் பிடிபட்டால் அவன் புருஷாமிருகத்துக்கு இரையாவதாக ஒப்பந்தமாம்..

பீமன் முழு பலத்தை கொண்டு ஓடியும் அதற்குள் மிருகம் அருகில் வந்துவிட்டதாம்…

உடனே கோகுல் கொடுத்த ஒரு ருத்ராக்ஷமும் மந்திரக்குறியீடு எழுதிய பேப்பரையும் கீழே போட சிவன் கோயிலாக மாறியதாம்….

சிவபக்தி மிக்க புருஷாமிருகமும் ஆச்சரியம் அடைந்து அந்தக் கோயிலில் ஈசனை வழிபடச் சென்றுவிட பீமன் விடாமல் ஓடுகிறானாம் ..-
nபூஜையை முடித்துவிட்டு புருஷாமிருகம் பீமனைத் துரத்துகிறதாம்…

இப்படியே 12 குறியீடுகளும் ருத்ராஷங்களும் பீமன் போட்டுவிட்டுக் காட்டை விட்டு வெளியே வந்து விடும் வேளையில், ஒரு கால் நாட்டிலும் ஒரு கால் கட்டிலும் இருக்கும் போது – புருஷாமிருகம் வந்து பிடித்துக் கொள்ள, பீமன் தான் புருஷாமிருகத்தின் ஆட்சிப் பகுதியில் இல்லை தன்னை விட்டுவிட வேண்டும் என்றும் .வாதாடுகின்றானாம்…

எஸ்.பி கோகுலின் அலுவலகத்தில்

Sir,
எஸ்.பி கோகுலிடம் நான் தவறான குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன்..
கவலை வேண்டாம்… விஷ்ணு… என்று பார்த்து பதறிய அதே வேளையில் மஹாவிஷ்ணுவிடமிருந்து செல்போனில் அழைப்பு..

மந்திரக்குறியீடு வேண்டுமென்றே சிறிது தவறாக அளித்ததால் பீமன் புருஷாமிருகத்திடம் முழுதாகப்பிடிபடாமல் பாதி பிடிப்பட்டு வாதாடிக்கொண்டிருக்கிறானாம்….

Mr. கோகுல் S W H2 6F இதுதான் குறியீடு

இதனை தர்மரிடம் கூறி மனதில் உச்சரித்து சரியான தர்ம்மான தீர்ப்பு கூறினால் தப்பிக்கவழி உண்டு.. என்று மேஜையில் தோன்றிய மந்திரக்குறியீட்டை டெலிபதியில் யுதிஷ்டிரரிடம் கூற அவரும் மந்திரத்தை பயபக்தியுடன் உச்சரித்து தீர்ப்பாக பீமனின் உடலின் ஒரு பாதி புருஷாமிருகத்துக்குச் சொந்தம், மற்றொரு பாதி தான் இந்தப் பகுதிக்குச் சொந்தம் எனத் தீர்ப்புக் கொடுக்க, தம்பி என்றும் பார்க்காமல் இவ்வாறு நியாயமான தீர்ப்புக் கொடுத்த தருமரின் நீதியில் மெய்ம்மறந்து போன புருஷாமிருகம் பீமனை விட்டு விட்டதாம்…

– இந்த கதை யுடான்ஸ் தமிழ் வலைப்பூக்கள் திரட்டி நடத்தும் சவால் சிறுகதை-2011 போட்டிக்காக எழுதப்பட்டது (http://jaghamani.blogspot.com).

Print Friendly, PDF & Email

1 thought on “பீமனின் பராகரமம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *