விண்மீனின் விடுகை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: February 6, 2020
பார்வையிட்டோர்: 19,060 
 
 

The message from a Star

பிரபஞ்சம் தோன்றி சுமார் 14.5 பில்லியன் வருடங்கள் ஆகிறது என்பது விஞ்ஞானிகளின் கணிப்பு. இந்த பிரபஞ்சத்தில் சிறிதும் பெரிதுமாக கோடாத கோடி விண்மீன்கள் தங்களின் குடும்பத்தோடு வாழ்ந்து வருகின்றன. இதில் சூரிய குடும்பமும் ஓன்று. அவ் வீண்மீன், பூமி உற்பட பல கிரகங்களோடு இயங்கி வருகிறது. இக் கிரகங்களில் பூமியில் மாத்திரமே ஜீவராசிகள் வாழ்கின்றன என்ற கருத்தை முற்றாக விஞ்ஞானிள் ஏற்கவில்லை. பிற கிரக வாசிகளுடன் தொடர்பு ஏற்படுத்தி உண்மையை அறிவதில் விண்இயற்பியல் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபடுகிறார்கள். அப்போது இரு விஞ்ஞானிகளுக்கு விண்மீன் ஒன்றில் இருந்து ஒரு அவசர செய்தி வருகிறது. அது என்ன வானொலி சமிஞ்சைகள் மூலம் 1.34 செகண்ட் இடைவெளியில், 0.04 செகண்ட் அகலத் துடிப்போடு (Pulsar) வரும் முக்கிய செய்தி?

***

பீட்டரும். தோமசுசும் மொண்ட்ரியல் (Montreal) மக் ஹில் (McHill) பல்கலைக்கழகத்தில் வான்வெளி இயற்பியலில் (Astro Phusics) வெளி கிரக வாசிகள் வாழ்கிறார்களா இல்லையா என்பதில் ஆராய்ச்சி செய்பவர்கள். தொலைநோக்கியின் ஊடாக விண்வெளியை அவதானித்து அங்கிருத்து வரும் சமிஞ்சைகளை மொழி பெயர்த்து. அதை அனுப்புவரோடு தொடர்பு’ கொண்டு, உரையாடி. அவர்கள் பூவுலகில் வாழும்’ ஜீவராசிகள் போன்றவர்களா என்று அறிவதே அவர்கள் ஆராய்ச்சியின் முழு நோக்கம். மோர்ஸ் கோட் (Morse Code)சமிஞ்சைகள் போன்ற 1.34 செகண்ட்டுக்கு ஒரு தடவை வரும் சிக்னல்களைப் பகுப்பாய்வு செய்தால், அந்த செய்தியில் உளள தகவலைப் படிக்க முடியும். எந்த வின்வெளி வாசிகள் பூமியோடு தொடர்புகொள்ள முயற்சிக்கிறாரார்கள் என்பதை அறியமுடியும்.

“இது பூமி. எங்களுடன் தொடர்பு கொள்ள முயற்சிக்கும் .நீங்கள் யார்? எங்கே இருந்து அழைக்கிறீரகள் ?. உங்களை அடையாளம் காட்ட முடியுமா”? பீட்டர் கேட்டார்.

“விண்வெளியில் உங்கள் சூரியனுக்கு அருகில் உள்ள நட்சத்திரத்தில் இருந்து நாங்கள் பேசுகிறோம் ”

” நட்சத்திரம் ROSS 128 இருந்தா பேசுகிறீர்கள்?. பேசும் உமது பெயர் என்ன “?

“ஆம் உங்கள் சூரியனுக்கு அருகில் உள்ள நட்சத்திரத்தில் இநருந்து பேசுகிறேன். எங்கள் நட்சதிரத்துக்கு நீகள் வைத்த பெயர் அதுவாக இருக்கலாம். நான் மெட்டி2000 (Meti2000 – Man Extra Terrestrial Intelegent 2000) பேசுகிறேன். இங்கு வாழும் ஒவ்வொருவருக்கும் ஒரு எண் தரப்பட்டுள்ளது. அதை வைத்து தான் எம்மை அடையாளம் காட்ட வேண்டும். அது சரி உமமை அடையாளம் காட்டும்”.

“ நான் பூமியில் இருந்து பீட்டர் பேசுகிறேன்.அருகில் இருப்பவர் தோமஸ். நாம் இருவரும் உம்மைப் போல் வான்வெளி ஆராய்ச்சியாளர்கள்” பீட்டர் பதில் சொன்னார்.

“உங்கள் பூமி என்ற கிரகத்தை பற்றி அறிந்துள்ளேன், குடும்பத்தில் உள்ள உங்கள் கிரகம் அழகான கிரகம் என்றும் ஜீவ ராசிகள் வாழ்வதாக கேள்விப்பட்டேன். உண்மை தானே” மெட்டி2000 யின் பதில்.

“யார் உமக்கு சொன்னது” இது தோமஸின் கேள்வி

“என் தலைவர் மெட்டி1000 (METI1000) சொன்னார். அவர் ஆராச்சியின்’ போது உங்கள் கிரகத்தை பற்றி கண்டு பிடித்தவர்”

“நல்லது. நீர் இருக்கும் நட்சத்திம் பற்றி கொஞ்கம் விபரம் சொல்ல முடியுமா? அது நட்சத்திரமா அல்லது. கிரகமா”?

“இது உங்கள் சூரியனைப் போல் ஒரு நட்சத்திரம். எங்கள் நட்சத்திரத்துக்கு சூரியனை போல் குடும்பம் இல்லை. உங்களின் சூரியனின் 0.97 ஆரையளவு எங்கள் நட்சத்திரத்தின் ஆரை. ஆனால் உங்கள் சூரியனின் திண்மத்தில் அரை அளவு. எங்கள் நட்சத்திரத்தின் திண்மம் . உங்கள் சூரியனுக்கு அருகே உள்ள நட்சத்திரம் எங்கள் நடசத்திரம்”, .மெட்டி 2000 பதில் சொன்னது

” நாம் அறிந்தோம் ROSS 128 என்று நாம் பெயரிட்ட உமது நட்சத்திரம் பூமியில் இருந்து சுமார் 11 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது என்று”, தோமாஸ் சொன்னார்

“நீங்கள் பாவிக்கும் அலகுகளைப் பற்றிப் எங்களுக்குத் தெரியாது. ஒளி ஆண்டு என்றால் என்ன? அந்த தூர அலகு பற்றி எங்களுக்குத் தெரியாது.”.

“ பூமியில் ஒளியின் வேகம் ஒரு செச்கண்டுக்கு 186,000 மைல். ஒளி இந்த வேகத்தில் ஒரு வருடத்தில் பயணிக்கும் தூரம் ஒரு ஒளி ஆண்டு. நீர் புத்திசாலி தானே, நாங்கள் பூமியில் பாவிக்கும் வான்வெளி அலகு பற்றி உமது தலைவரிடம் கேளும். எங்கள் கணிப்புப்படி உமது நட்சத்திரம் வெகு வெகு தூரத்தில் உள்ளது.”.தோமஸ் சொன்னார்.

“சரி கேட்கிறேன். உங்கள் கிரகத்தைப் பற்றி சொல்லுமென்” மெட்டி2000 கேட்டார்.

“எங்கள் கிரகம் பூமி என்று அழைக்கப்படுகிறது. இந்த கிரகத்தில் உயிரினங்கள் வாழ்கின்றன இது சூரியனைச் சுற்றிவரும் அழகிய கிரகம். இங்கு வாயு, நிலம், தீ, ஈதர் அடங்கும்” பீட்டர்பதில் சொன்னார்.

“எங்கள் ரோஸ் 126 நட்சத்திர்த்தில் இருப்பவர்கள் அதிக அறிவாளிள். உங்களை விட அதிக தொழில்நுட்பம் தெரிந்தவர்கள். இங்கு உள்ளவர்களின் சராசரி வயது 1000 ஆண்டுகள். இன்கு பூமியை போல் ஆண் பெண் என்ற வித்தியசம் இல்லை” மிட்டி2000 சொன்னார்

” அடேயப்பா அவ்வளவு நீண்ட ஆயுளா?. உங்களோடு ஒப்பிடும் போது எங்களது பூமியில் 80 ஆண்டுகள் சராசரி வாழ்க்கை வாழ்கின்றனர். பிரபஞ்சம் தோன்றிய காலம் முதல் கொண்டு நேரம் ஆரம்மாயிற்று. காலத்தை வருடம். மாதம். நாட்கள். மணித்தியாலம், நிமிடம் செகண்ட் என்று வகுத்துள்ளோம். அடஹு சரி ஆண் பெண் இல்லாத உங்கள் நட்சதிரத்தில் எப்படி மெட்டியின் எண்ணிக்கை அதிகரிக்கிறது>”

“ அது சொல்லக்கூடாத ரகசியம். அது சரி உங்கள் கிரகத்தின் வயது என்ன” மெட்டி2000 கேட்டது

” சுமார் 4,6 பில்லியன் ஆண்டுகள் ஆகிறது”

“ஹ ஹா. ஹா.. பெரும் வெடிப்பு காரணமாக எங்கள் நட்சத்திரம் உருவாகி 9.5 பில்லியன் ஆண்டுகளாகிறது பூமியோடு ஒப்பிடும்போது எமது நட்சத்திரம் மிக மூத்த நட்சத்திரம் ” இதை சிகப்பு குள்ளன் (Red Dwarf) என்பார்கள்.”

“எங்கள் பூமியில் பல நிறங்கள் உண்டு. பூமியில் அதிக கூடிய வேகம் ஒளியின் வேகம்.. இந்த வேகத்தை விட வேகமான வேகம் உங்கள் நடச்சதிரத்தில் இருக்கிறதா? ” தோமஸ் கேட்டார்.

“ஒளி அலை வடிவம் உள்ளது அகவே அதிக வேகம் உள்ள அலைகள் இருக்கலாம். எண்களின் சிந்தனை அலைகள் ஒளியை விட வேகமாக செல்கிறது மெட்டி2000 பதிலளித்தார்

“உங்கள் நட்சத்திரத்தில் வாழும் மக்களுக்கு உருவம் உண்டா”

” எங்களுக்கு எந்த வடிவமும் இல்லை. சக்தி வடிவத்தில் நாங்கள் அலைகலாய் செயலாற்றுகிறோம்.”

“இது வேடிக்கையாக இருக்கிறது. எனவே நீங்கள் , அழகான வடிவங்களை பார்த்து ரசிக்க முடியாது”

”அழகினால் பிரச்சனைகள் தான் வரும். இங்கு உள்ளவர்களுக்கு ஆற்றலுக்கு எற்ற சக்தி உண்டு. ஆற்றலை தான் மதிக்கிறார்கள் ”

“.இது சுவாரஸ்யமானதாக தெரிகிறது.” தோமஸ் சொன்னார்.

” சரி நாம் ஒரு நீண்ட நேரம் பேசிக் கொண்டு இருக்கிறோம் . நான் உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி சொல்ல வேண்டும் ”

“என்ன செய்தி மெட்டி2000’?

“ஒரு பெரிய, விண்கல் எங்கள் நட்சத்திரத்தை நோக்கி வந்தது. அது வந்து மோதி இருந்தால் எங்கக் நட்சத்திரம் அழிந்து போய் இருக்கும். அதன் வேகத்தை நிறுத்த முடியவில்லை. நாங்கள், எங்கள் அதி தொழில்நுட்பத்தை பயன்படுத்தினோம், அது போகும் பாதையை மாற்றினோம், அந்த விண்கல் இப்போ எமது கட்டுப்பாட்டில் இல்லை. அது உங்கள் கிரகத்தை நோக்கி அதிக வேகத்தில் வந்து கொண்டு இருக்கிறது. நீங்கள் அதன் பதையை மாற்றுகள். அல்லது அது பூமியை தாக்காமல் இருக்க எதாவது உடனே வழி செய்யுங்கள். எங்கள் உதவி தேவைப்படின் என்னோடு தொடர்பு கொள்ளுங்கள்”, மெட்டி2000 சொல்லிற்று “

“மெட்டி2000 உங்கள் அவசரச் செய்திக்கு நன்றி. உதவி’ தேவைப்பட்டால் உம்மோடு அவசியம் தொடர்பு கொள்கிறோம்” பீட்டர் சொன்னார்.

***

பீட்டரும் தோமசும் தங்கள் பேராசிரியர் ஜேமீஸ் மூலம் நாசாவுக்கு (NASA) செய்தியை அறிவித்தனர். நாசாவும் உடனடியாக பூமி நோக்கி வரும் விண்கல் இரு ஒளி ஆண்டு தூரத்தில் வேகமாக வந்து கொண்டு இருப்பதாக கணித்தனர்’ அதன் பாதையை திசை திருப்பி, வியாழ கிரகத்தை நோக்கி அனுப்ப முடிவு எடுத்தனர். வியாழ கிரகம் பல விண்கற்களின் தாக்குதலுக்கு உற்பட்டு பழகிய பெரிய கிரகம். முடிந்தால் பூமி நோக்கி வரும் விண்கல்லை சிறு பகுதிகளாக சிதைக்கவும் முடிவு எடுத்தனர். காலம் தாமதிக்காமல் ஒரு ராக்கெட்டை வெடி மருந்துகள் உடன் விண்கல் நோக்கி நாசா அனுப்பியது.

மாதப் பயணத்தின் பின் அந்த ராக்கெட் விண்கல்லோடு ,மோதி அதை சிதைத்தது. . சிதைந்த விண்கல்ளின் பகுதியான 300 மீ நீளமுள்ள கல், சஹாரா பாலைவனத்தை தாக்கியது.. உயிருக்கு அழிவு இல்லை விண்கல்லின் சிதைந்த மற்றைய கற்கள். உராய்வு விசையினால் எரிந்து சாம்பலாயின.

இதன் பின் ROSS 128 நட்சதிரத்தோடு நாசா தொடர்பு கொண்டு பூமியை அழிவில் இருந்து காப்பாற்றியதுக்கு நன்றி தெரிவித்தது. ரோஸ்126 யுடன் தொடர்பிணை நாசா தொடர்ந்தது

(யாவும் கற்பனை)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *