சிவப்பு நிறம் கொண்ட வெள்ளை திமிங்கலம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: August 28, 2016
பார்வையிட்டோர்: 15,694 
 

நாங்கள் ஒரு புதிய கிரகத்தை கண்டு பிடித்தமகிழ்ச்சியில் இருந்தோம் .எங்களது விண்கல ராக்கெட் சுற்றி சுற்றிவட்டமடித்து பாதுகாப்பான பகுதியில் இறங்கியது .அந்த புதிய கிரகம்பார்ப்பத்தற்கு மனிதர்கள் வாழும் இடத்தை போல இருந்தது .

பச்சை பசேல் என செடி கொடிகள் இருந்தன.மனிதர்கள்தங்கும் வசதிக்கேற்ப அக்கிரகமும் இருந்தது .நாங்கள் இறங்கியஇடத்தில் யாருமில்லை .நாங்கள் சிறிது தூரம் நடந்த போது ஒருமரத்தின் இலையில் இருந்து பட்டாம்பூச்சி போன்ற ஒரு உயிரினம் தோன்றியது .அது பிறந்த உடனே சத்தம்போட்ட படியே பறக்கத்தொடங்கியது .

நாங்கள் 25 பேரும் தற்காப்பிற்காக ஆயுதங்களைஎடுத்துக்கொண்டு எங்கள் கண்களுக்கு தெரிந்ததைஎல்லாம் விடியோ எடுத்தவாறே முன்னேறினோம் . தூரத்தில் ஒரு சிறுவன் தன்னந் தனியே பேசிக்கொண்டுஇருந்தான் .அவன் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தான் .அவன் உடல்முழுவதும் மர இழைகளால் உருவாகி இருந்தது . அவன்செயல்பாடுகளை விடியோ எடுத்தோம்.மரத்திலிருந்து பிறந்தவனாகஇருப்பானோ என்ற ஐயம் எங்களுக்கு இருந்தது .

நாங்கள் ஒளிந்திருந்து அவனை பார்த்தோம். அதற்குள் அவன்எங்களை பார்த்து விட்டு ஓடினான் .என் துப்பாக்கியிலிருந்து வெளிவந்த குண்டுகள் அவன் உடலை மயக்கமுறச் செய்தது. அருகே சென்றுபார்த்த போது மரத்திலிருந்து பிறந்தவன் என்பது உறுதியானது .நாங்கள்அவன் உடலை முழுவதுமாக விடியோ எடுத்தோம்.வித்தியாசமானபடைப்பு என்றவாறே நடக்க தொடங்கினோம்.

போகப் போக ஒரு சத்தமும் கேட்கவில்லை.மரங்களடர்த்த அந்தபகுதியில் ஆயுதங்களோடு சென்று கொண்டு இருந்தோம் .

ஒரு பெரிய மரத்தின் உச்சியிலிருந்து எங்களை நோக்கி ஏதோஒன்று பறந்து வந்து பயங்கர சத்தத்தோடு விழந்தது.நாங்கள்ஆயுதத்தை தூக்குவதற்குள் அது எங்களுக்கு தெரிந்த மொழியில் பேசஆரம்பித்தது.அது சிவப்பு நிறம் கொண்ட வெள்ளை திமிங்கலம் .இருகலர்களில் அதன் உடலமைப்பு இருந்தது .

நீங்கள் யார் ..? எதற்கு இங்கு வந்தீர்கள் என்றது.நாங்கள்புதிய கிரகத்தை கண்டு பிடிக்க வந்த ஆராய்ச்சியாளர்கள் என்றோம்.நாங்கள் சொல்வதை நம்பாமல் எங்களை நோக்கி புகையை கக்கியது.அந்த புகையிலிருந்து சூறாவளி காற்று வீசியது .எங்களை அந்தரத்தில்பறக்க செய்தது .நாங்கள் ஆளுக்கொரு திசையில் விழுந்தோம் .

எங்கள் குழு தலைவர் லாமுரா தன் கையிலிருந்த வாட்சில்ஒரு பட்டனை தட்ட விண்கல ராக்கெட்டிலிருந்து பறக்கும் வெடிகள்அந்த திமிங்கலத்தை நோக்கி படுவேகமாக வந்தன .வந்த வேகத்தில்திமிங்கலத்தை நாலாபுறமும் சுற்றி சுற்றி வெடித்தன .இவ்வளவு வெடிவிபத்திலும் அந்த திமிங்கலத்திற்கு எந்த சேதாரமும் இல்லை .அந்த திமிங்கலத்தின் கண்கள் லாமுராவை வெறித்து பார்த்தன .அதன்கண்களிலிருந்து வெளியே வந்த திரவம் அவனை நோக்கி பாய்ந்தது . அது பட்ட உடனே லாமுரா எரிய தொடங்கினான் .எங்களால்லாமுராவை காப்பாற்ற முடியவில்லை .நாங்கள் கையில் வைத்திருந்ததுப்பாக்கியால் திமிங்கலத்தை சுடத் தொடங்கினோம் . அது பறந்தவரேமரத்தின் உச்சியில் உட்கார்ந்து கொண்டது .எங்களை கண்டு அதுபயப்படவும் இல்லை .மீதியிருந்த 24 பேரும் திரும்பி போவதாவேண்டாமா என்ற சந்தேகம் எங்களுக்கு இருந்தது .திமிங்கலத்தைகொல்ல முடியாத வருத்தத்தில் நாங்கள் வேறொரு திசை யில் நடங்கத்தொடங்கினோம் .

எல்லோரும் கொஞ்சம் பதட்டத்தோடு இருந்தோம். தாவரஇலையால் உருவாக்கப்பட்ட ஹெலிகாப்டர் ஒன்று எங்களை நோக்கிமுன்னே வந்து நின்றது .அதிலிருந்து நான் மயங்க குண்டுகளை விசிய சிறுவன் வெளியே வந்தான். எனக்கு திக்கென்றிருந்தது .எங்கள்அனைவரையும் ஹெலிகாப்டர்ற்குள் ஏறுமாறு சைகை செய்தான் . இந்த சின்ன ஹெலிகாப்டரில் இத்தணை பேர் எப்படி உட்கார முடியும்என நினைத்தவாறே அவனை நோக்கி சுட்டோம் .குண்டுகள் வீணாவதேதவிர அவன் அப்படியே நின்று கொண்டு மீண்டும் ஹெலிகாப்டரின்உள்ளே செல்லுமாறு சைகை செய்தான் .நாங்கள் அவனையே பார்த்துகொண்டு இருந்தோம் .அந்த சிறுவன் எங்களில் ஒருவனை காந்தப்பார்வையால் அருகே வரவழைத்து அவனை இரண்டாக மடக்கி அதைநான்காக மடித்து ரத்ததை பிழித்தெடுத்து தூக்கி போட்டான் .மீண்டும்உள்ளே வருமாறு சைகை செய்தான்.மறுபடியும் எங்கள் துப்பாக்கிகுண்டுகள் வீணானது .இறுதியில் அவனின் சொல்லுக்கு கட்டுப்பாட்டுஹெலிகாப்டரின் உள்ளே ஏறினோம் . பார்ப்பதற்கு ஹெலிகாப்டர் போலஇருந்தாலும் உள்ளே விமானம் அளவுக்கு இடம் இருந்தது .

ஹெலிகாப்டர் தானாக பறந்தது .அந்த சிறுவன் ஏறவில்லை.நாங்கள் கொண்டு வந்த ராக்கெட் அருகே அது நின்றது .நாங்கள்எதுவும் செய்ய முடியாமல் எங்கள் ராக்கெட்க்குள் செல்லத்தொடங்கினோம் .

நாங்கள் ஏறத் தொடங்கியதும் அந்த ஹெலிகாப்டர் மாயமாய் மறையத்தொடங்கியது. நாங்கள் அங்கிருந்து கிளம்புவதற்குள்எங்களுடைய எண்ணங்கள் மாறின .மோதி பார்த்து விடுவோம் என்றமுடிவோடு இருக்கிற ஆயுதங்களை எடுத்துக்கொண்டு ஆக்ரோஷவெறியோடு அனைவரும் இறங்கினோம் .

பட்டாம் பூச்சி கூட்டம் எங்களை கடந்து சென்றது .அதை நோக்கிசரமாரியாக சுட்டோம் .பல உயிரை விட்டன .ஒரு சில ஆளுக்கொருதிசையில் பறந்து சென்று தப்பித்தன .இறக்கும் நிலையிலிருந்தசிலபட்டாம் பூச்சிகள் எங்களை நோக்கி பேசின.அந்த மொழிஎங்களுக்கு புரியவில்லை .

நாங்கள் சில அடி தூரம் தான் எடுத்து வைத்திருந்தோம்.மிகப்பெரிய பட்டாம் பூச்சி கூட்டம் எங்களை நோக்கி வந்தன. எங்கள்கையிலிருந்த ஆயுதங்கள் கொண்டு அவர்களைதுவம்சம் செய்தோம் .பல பட்டடாம் பூச்சிகள் ஒன்று சேர்ந்து ஒரு பெரியவலையை உருவாக்கி எங்கள் மேல் வீசின. வலைகளைதகர்தெறிந்தோம்.

எங்களுக்கும் பட்டாம்பூச்சி கூட்டத்துக்கும் பயங்கர மோதல்ஏற்பட்டது .அதே நேரத்தில் அந்த சிறுவன் அங்கு தோன்றினான்.பட்டாம்பூச்சி கூட்டம் மறைந்தது .அவன் திரும்பி போகுமாறுமீண்டும் சைகை செய்தான்.நாங்கள் அனைவரும் அவனைநோக்கி பாய்ந்தோம்.அவன் தண்ணிர் மனிதனாகமாறியிருந்தான்.அவனை பிடிக்க முற்பட்டதால் ஏதோ தண்ணிருக்குள்கைகள் விட்டது போல இருந்தது. நாங்கள் தான்ஒருவருக்கொருவர் முட்டிக் கொண்டோம் . திடீரென மாயமாய்மறைந்து துரத்திலிருந்து நான் இங்கே இருக்கேன் என சத்தம்கொடுத்தான் .நாங்கள் அவனை நோக்கி கோபப்பட்டு ஓடாமல்பொறுமையாக ஒருவரை ஒருவர் பார்த்தோம் .எங்களுக்குள் இரு பிரிவுஉண்டானது. ஒரு குரூப் போலமென்றும் மற்றொரு குரூப் ஏதுவாகஇருந்தாலும் மோதிப்பார்த்துவிடலாம் என முடிவானது .இறுதி முடிவாகஅதிரடி யுத்தத்துக்கு எல்லோரும்
தயாரானோம் .

அவன் இருந்த திசையை நோக்கி ராக்கெட் லாஞ்சரைசெலுத்தினோம் .அவன் உடலை துவம்சம் பண்ணியது .அவன் சுக்குநூறாக சிதறி மீண்டும் பழைய
படி ஒன்று சேர் ந்தான். அருகே இருந்த பொந்துக்குள் போனான் . அந்த பொந்துக்குள் வரிசையாகஇறங்கினோம் .இந்த இடம் குளு குளுவென இருந்தது.ஆயுதங்களைதூக்கியவாறே அவனை சுட ஆயத்தமாக இருந்தோம் .

இந்த இடம் மிகப்பெரியதாக இருந்தது .உள்ளே சிறிய சிறிய செடிகள்வளர்ந்திருந்தன .நாங்கள் அந்த இடத்தை முழுவதுமாக ஆராய்த்தோம்அவன் இல்லை .வெறும் சலிப்போடு இந்த இடத்தை விட்டு வெளியேவந்தோம் .

கண்ணாடி அணிந்த நாய்கள் கூட்டம் எங்களை பார்த்து குரைத்தது.யோசிக்க முடிவெடுப்பதற்குள் எங்கள் ஆட்களின் ஆயுதங்களிலிருந்துகுண்டுகள் பறக்க தொடங்கின .வந்த குண்டுகள் ஒவ்வொற்றையும் நாய்கள் முழங்கத் தொடங்கின. படுவேகமாக லாவகமாக முழுங்கின .

எங்களுக்கு ஒரே ஆச்சரியம் .நாங்கள் சுட சுட அதுமுழிங்கிக்கொண்டு இருந்தது .நாங்கள் அதைப்பார்த்து சுடுவதைநிறுத்திய உடனே எங்களை பார்த்து சில தடவை குரைத்து விட்டு வந்ததிசையில் போகத்தொடங்கின .

நாங்கள் ராக்கெட் இருந்த தளத்தை நோக்கி நடையை கட்டினோம்.ராக்கெட்டின் அருகே சிவப்பு நிறம் கொண்ட வெள்ளை திமிங்கலத்தின்மேலே அந்த சிறுவன் உட்காந்திருந்தவாறே எங்களை பார்த்துகிளம்புங்கள் என்று சைகை செய்தான் .

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *