ஆலமரத்து ஆவி

 

இயற்கையின் சக்திகள் பசுமையான மரங்களில் குடி கொண்டிருப்பதாக மனிதன் நம்புகிறான். கனடா பூர்வகுடி மக்கள் மரங்களை தெய்வமாக வழிபடுகிறார்கள். இது இந்தியாவிலும் இலங்கையிலும் மர வழிபாடாய் மலர்ந்தது. நீங்கள் எந்தத் தெய்வக் கோயிலுக்குச் சென்றாலும் அங்கு அந்தத் தெய்வத்திற்கென்று ஒரு மரம் இருப்பதைக் காணலாம். இம்மரம் தலவிருட்சம் என்று கூறப்படும். ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு மரம் உண்டு. சிவனுக்கு ஆலமரம். கணபதிக்கு அரசு. அம்மனுக்கு வேம்பு.

***

திருகோணமலையில் இருந்த தென் மேற்கே சுமார் 50 கிமீ தூரத்தில். உள்ள கிராமம்” பதவிய”. 6400 எக்கர் பரப்பு அளவுள்ள பதவிய குளம் மகாசேன மன்னனால் கிமு 3 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. சோழர் இலங்கையை ஆண்ட 11ஆம் நூற்றாண்டில் செழித்து இருந்த பகுதி. ஒரு காலத்தில் தமிழர்கள் அதிகமாக’ வாழந்த ஊர். பதவிய. 1948 ஆம் ஆண்டுக்குப் பின் சிங்கள குடியேற்றத்தால் கிராமமாக மாறிது. அதனால் பதிவாவி (வாவி இருக்கும் ஊர் என்ற தமிழ் பெயர் மாறி பதவிய என்ற சிங்களப் பெயராயிற்று) வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களின் எல்லைகள் சந்திக்கும் ஊர்.

அவ்வூர் வன்னியில் அமைந்ததால் அவ ஊர் மக்கள் பிள்ளையாரை தெய்வமான வழிபடுபவர்கள். யானைகளின் தாக்குதலில் இருந்து தம்மைப் பாதுகாக்கவே அரசமரத்து பிள்ளையார் என நாமம் சூட்டி வழிபட்டனர் .

அக்கிராம்ந்தில் இருப்பது ஒரே’ ஒரு நாற்கசந்தி. அதன் இடது பக்கத்தில் பாதை’ ஒரமாக ஓங்கி வளர்ந்த அரசமரம். ஆரம்பத்தில் அக்கிராம இந்துக்கள் அரசமரத்தின் கீழ்யுள்ள கணபதி கற்சிலை பதவிய குளத்தில் கண்டேடுத்தாகவும், சோழர காலத்தில் பதவியாவில் கட்டிய கோவில், போர்த்துகேயர் கோவிலை கொள்ளை அடித்த போது, கோவில் குருக்கள் பாதுகாப்பு கருதி பிள்ளையார் சிலையை குளத்துக்குள் வீசி இருக்கலாம் என்று மக்கள் பேசிக் கொண்டனர்,

பெளத்தர்களான சிங்களவர்கள் ஒரு புத்தர் சிலையை பிள்ளையாருக்கு துணையாக, ஐம்பது அடி தூரத்தில் வைத்து புத்தரையும் கணபதியையும் வணங்கினர்.

ஒற்றுமையாக பதவியாவில் வாழ்ந்த இரு இனங்களுக்கிடையே வதந்திகளால் இனக்கலவரம் 1958 இல் வெடித்தது. அக் கிராமத்தின் முன்னேற்றத்துக்காக உழைத்த தொழில் அதிபர் சுந்தரமூர்த்தி சிங்களவன் ஒருவன் வெட்டி பிள்ளையாருக்கு முன் கொலை செய்தான்.. அப்போது புத்தர் சிலை அரசமரத்தின் கீழ் இருக்கவில்லை. இருந்திருந்தால் அவர் கண்ணீர் விட்டிருப்பார். அந்த அரசமரத்தைச் சுற்றி சலவை கற்கள். அதில் இருந்து வம்பு பேச உகந்த இடமாக இருந்தது. இரவில் அக்கற்களில் தூங்குபவர்களும் உண்டு அப்படித் தூங்கிய சிங்களவன் ஒருவன் காலையில் விழித்து எழும்பவில்லை. அரசமரத்தில் உள்ள சுந்தரமூர்த்தியின் ஆவி அவனைப் பழி வாங்கிவிட்டது என்று வதந்தியை ஊர் ஜனம் பரப்பி’ விட்டது. அந்த மரணத்தின் பின் அக் கற்களில் இருந்து வம்பு பேசவோ அல்லது தூங்கவோ பின் ஊர் வாசிகள் வாங்கினார்கள். அனால் பிள்ளை வரம் வேண்டி அரசமரத்தை தமிழ். சிங்கள பெண்கள் சுற்றி வரத் தயங்க வில்லை.

***

அன்பழகன் (அன்பு) தாவர இயல் பட்டதாரி, 20 வருட ஆசிரியர் அனுபவம் உள்ளவர். எதையும் அறிவியல் ரீதியாக சிந்திப்பவர். திருகோணமலை. கிண்ணியா. மூதூர் வவுனியா ஆசிய இடங்களில் உள்ள கல்லூரிகளில் விஞ்ஞான ஆசிரியராக கடமையாற்றி, பதவியாவில் உள்ள கல்லூரிக்கு வந்தவர். தலமை ஆசிரியராக பதவி உயர்வு கிடைத்தபடியால் மாறுதலை அவரால் நிராகரிக்க முடியவில்லை. அவரோடு ஆசிரியராக வேலை செய்த குணத்திலக்கா (குணா ) என்ற பட்டதாரி சிங்கள ஆசிரியர், வெகு விரைவில் அன்பழகனின்’ நண்பரானார். இருவரும்’ மாலை நேரங்களில் பதவியா கிராமத்தின் இயற்கையை’ இரசித்தவாறு இரு மைல்கள் வாவிக் கரைமீது நடப்பார்கள். நடந்த களைத்துப் போய் அரசமரத்து அருகே உள்ள தேனீர் கடையில் இளநீர் குடித்து விட்டு அரசமரக் கற்களில் வந்து’ அமர்ந்து தமது வேலை அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள். ஓங்கி சடைத்து வள்ர்ந்த அரசமரம், அதன் அருகே உள்ள பிள்ளயார், புத்தர் சிலைகள் அன்பழகனின் கவனத்தை ஈர்த்தது. அவரை சிந்திக்க வைத்தது. இரு சிலைகளையும் பார்த்து அன்பழகன் கெக்கட்டம் விட்டு சிரித்தார்.

“என்ன அன்பு சிலைகளைப் பார்த்து ஏன் சிரிகிறீர்”? குணத்திலக்க கேட்டார்.

“இல்லை குணா இந்து, பெளத்த மதங்களுக்கு இடையே எவ்வளவு ஒற்றுமை பார்த்தீரா? குணா இந்து’ மதத்தில் இருந்து பிறந்தது தான் பெளத்தம். இரண்டும் கர்மாவை பற்றியும், ,மறு பிறப்பு பற்றியும் சொல்கிறது. இந்து மதத்தின் படி கணபதியின் மாமன் விஷ்ணு’. விஷ்ணுவின் மறு அவதாரமே புத்தர் என்று என் அம்மா சொல்லிக் கேள்விப் பட்டனான். இந்த அழகிய சடைத்த அரச மரத்தின் நிழலில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து ரசித்து கொண்டு இருக்கிறார்கள். சில பெண்கள் மரத்தை சுற்றி வந்து கணபதிக்கு பால் வார்த்து, புத்தருக்கு தாமரை பூ வைத்து கும்பிட்டு செல்கிறார்கள். என்ன தமிழர் சிங்களவர் ஒற்றுமை பார்த்தீரா, உம்மையும் என்னையும் போல்”.

“அன்பு, நான் இந்த’ ஊர் வாசி. நீரோ திருகோணமலை வாசி உமக்கு இந்த மரத்ததின் சரித்திரம் தெரியாது. இந்த; மரத்தின் கீழ், இரு நூறு வருடங்களுக்கு’ முன் பதவிய குளத்தில் கண்டு எடுக்கப் பட்ட கணபதி தெய்யோவின் சிலை இது . அதன் பின்பு தான் அரசமரத்துக்கு’ கீழ் புத்தர் வந்தவர். இந்த சந்தியில் 1958 இல் நடந்த இனகலவரத்தின் போது’ பதவியாவில் இருந்த பிரபல பிஸ்னஸ்மன் சுந்தர் மூர்த்தி, வெட்டிக்’ கொலை செய்யப் பட்டார். அவர் என் நண்பர். நல்ல மனுசன். அதன் பின்; இந்த அரச மரத்தில் அவரின் ஆவி குடிபுகுந்து விட்டது” குணா கவலையோடு சொன்னார்.

“நீர் அந்த வதந்தியை நம்புறீரா குணா”? அன்பு குணாவைக் கேட்டார்.

“என் இல்லை. இனக்கலவரம் நடந்து சில மாதங்களுக்குப் பின்; ஒரு நாள் இந்தக் கல்லில் இரவில் படுத்திருந்த ஒருவர் காலையில் எழும்பவே இல்லை. அவர் மரணத்துக்கு இந்த அரசமரத்தில் உள்ள சுந்தரமூர்த்தியின் ஆவிதான் காரணம் என்ற வதந்தி பரவத் தொடங்கியதால் இந்த கல்லில் இரவில் ஒருவரும் தூங்குவது கிடையாது” என்றார் குணா.

“நான் இந்த ஆவி கதையை நம்பவில்லை குணா”.

“நீர் தான் தாவர அறிவியலில் நிபுணராச்சே. விளக்கம் சொல்லுமன்”.

“மரங்களில் முக்கியமான மரம் அரசமரம் அம்மரத்தை வணங்ககுவதற்கு பல காரணங்கள் உண்டு அரச மரத்தின் வேரில் இருந்து அதன் இலைகள் வரை மருத்துவ பயன் உள்ளது; பல விதமான நோய்களை குணமாக்கக் கூடியது. அரச மரத்தின் முக்கியத்துவத்தை நமது பழங்கால முனிவர்கள் அறிந்திருந்தனர். காரணம், இதை தேவதாரு மரம், கடவுளின் தெய்வம். என்று வணங்கினர். கிமு 1300 இல் இருந்த இந்து நதி பல்லத்; தாக்கு நாகரீகம் பற்றி கேள்வி படிருப்பீரே”.

“ம் ..வாசித்தனான்.. மேலே சொல்லும் அன்பு”.

“அந்த நாகரீகத்தின் அகழ்வாய்வின் போது அரசமரத்தின் பயன் கண்டறியப் பட்டுள்ளது.. தமிழ் மொழியில் அரசமரம் என்றும் ஆங்கிலத்தில் பீப்பல் (Peepal) என்று அழைக்கிறார்கள் மரத்தை வணங்குகின்றனர். குழந்தைள் இல்லாத பெண்கள் சுற்றிச் சுற்றி வந்து அதன் ஆசீர்வாததைப் பெற்றால் விரும்பிய காரியமோ அல்லது குழந்தைகள் பெற முடியும் என்பது தோண்டு தொட்டு இருந்து வரும்’ நம்பிக்கை.. விஞ்ஞான ரீதியாக, அந்த மரத்தின் சாறு குழந்தையை வயிற்றில் சுமக்கும் பலத்தை கொடுக்கிறது. இந்த அற்புதமான மரத்தின் மிக முக்கியமான மதிப்பு என்ன வென்றால், பாம்பு கடியால் இறக்க இருக்கும் ஒருவரை குணப்படுத்த முடியும். அரச மரம் சிறந்த மாற்று மருந்தாக இருப்பதாக அறிவியல் ஆராய்ச்சி கூறுகிறது நீர், காற்று, சத்தம் மாசுபாட்டை மரம் நீக்க வல்லது

“அதுசரி அன்பு இரவில் இந்த; மரத்தின்’ கீழ் தூங்க கூடாது என்கிறார்களே?”.

பகல் நேரத்தில், சூரிய ஒளியின் போது தாவரங்கள் கரியமில வாயுவை (Carbon diooxide) பயன்படுத்துகின்றன மற்றும் ஒளிச்சேர்க்கை ( Photo synthesis) செயல்பாட்டில் கரியமில வாயுவை உள் எடுத்து பிராணவாயுவை (Oxygen) வெளியிடுகின்றன. ஆனால் இரவில், தாவரங்கள் ஒளிச்சேர்க்கை செய்யாது, அதனால் அவை கரியமில வாயுவைப் பயன்படுத்த முடியாமல் போகலாம், இது மேலும் காற்றில் உள்ள கரியமில வாயுவை அதிகரிக்கும். இரவு நேரங்களில் மரங்கள் பிராணவாயுவை உள் எடுத்து கரியமில வாயுவை விடுவிக்கின்றன. அரசமரத்தின் கீழ் தூங்கினால், காற்றில் கரியமில வாயுவின் அளவு அதிகரிக்கும். அகவே அது நிட் சயமாக ஆரோக்கியத்தை பாதிக்கும். எனவே இரவில் மரங்கள் கீழ் தூங்குவதை தவிர்க்க வேண்டும். அரசமரத்தின் கீழ் படுத்த. அவர் மூச்சுத்திணறல் பாதிக்கப்பட்டிருக்கிறார்.. அவர் மார்பு மீது அதிக எடையை உணர்ந்து ஹார்ட் அட்டாக் ஏற்பட்டிருக்கலாம். அரசமர ஆவிக்கும் அவர் மரணத்துக்கும் தொடர்பு இல்லை. இந்த சம்பவத்தை, சில கிராமப்புற மக்கள் கற்பனை செய்து, அரசமரம் அல்லது ஆல மரங்கள் கீழ் தூங்கினால் பேய்கள் வந்து தங்கள் மார்பில் உட்கார்ந்து விடும் என அஞ்சுகின்றனர். இது தான் அறிவியல் விளக்கம். இதை புரியாது பேய்; ஆவி, முனி கதைகளை பரப்புரார்கள் “இரவில் கூட பிராண வாயுவை வெளிப்படுத்தும் ஒரே மரம் அரச மரமாகும்.” அன்பு அறவியல் விளக்கத்தை சொன்னார்.

“அரச மரத்துக்கும் ஜோதிடத்’துக்கும் தொடர்பு உண்டு என்கிறார்கள் அது உண்மையா அன்பு?”.

“எனக்கு ஜோதிடம் பற்றி அவ்ளவுக்கு தெரியாது.என் அம்மா சொன்னவ அரச மரம் வியாழன் கிரகத்துடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. என்று. நன்மதிப்புள்ள பெரிய கிரகம் வியாழன். அதனால் வியாழ சுகம் உண்டு என்பார்கள். அரச மரமும் நல்ல பயன்களைத் தரும் பெரிய மரம் அதனல் இரண்டுக்கும்’ தொடர்பிளது என்று கருதுகிறார்கள். அரச மரத்தின் சுவாரஸ்யமான அம்சம் இது எங்கும் வளரும் மரம்”.

“கௌதம புத்தர் அரசமரத்தின் கீழ் முக்தி பெற்றதால். புத்த சமையத்தவர்கள் மரத்தை தெய்வமாக கருதுகிறாராகள்” என்றார் குணா.

“அது தெரியும் குணா அதனால் தான் இலங்கையில் அரசமரம் வளர்ந்த இடமெல்லாம் புத்தர் சிலையை அதன் கீழ் வைத்து விடுவார்கள். எல்லாம் நம்பிக்கை. சரி இருட்டு படுகுது. இங்கை இருந்தால் ஒரு வேளை உமது நண்பர் சுந்தர மூர்த்தியின் பேய் எங்களையும் பிடித்து விடும், வாரும் நாங்கள் வீட்டுக்குப் போவோம்.” என்று நக்கலாக சொல்லியபடி அன்பழகன். குணதிலக்காவை அழைத்துக் கொண்டு அரசமராத்தை விட்டுப் புறப்பட்டார்.

(யாவும் கற்பனையில தோன்றிய அறிவியல் கதை) 

தொடர்புடைய சிறுகதைகள்
முகவுரை அரிசுட்டாட்டில் சட்டத்தைப் பற்றி எழுதுகையில், தனிமனிதர்களின் ஆட்சியைவிட, சட்டத்தின் ஆட்சி மேலானது என்று குறிப்பிட்டார். அறிஞர் அண்ணா சட்டம் ஓர் இருட்டறை, அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு, அது ஏழைக்கு எட்டாத விளக்கு. என்று கூறியுள்ளார். அரசியல்வாதி நினைத்தால் நீதிபதிகளின் தீர்ப்பை ...
மேலும் கதையை படிக்க...
எனது ஒரே மகன் அகஸ்த்தியன் ஒரு பைலட். என் மருமகள் வத்சலா ஒரு டாக்டர்;. இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். எனதும், என் மனைவி பூர்ணிமாவினதும் சம்மதத்தோடு தோடும் தான் அவர்கள் திருமணம் நடந்தது. அகஸ்த்தியன் எங்களின் ஒரே மகன் என்றபடியால் ...
மேலும் கதையை படிக்க...
மோகனுக்குச் சிறுவயது முதற்கொண்டே பொம்மைகள் என்றாலே ப்ரியம். வழக்கத்தில் பெண் குழந்தைகள் தங்கள் பொம்மைகளுக்கு விதம் விதமான ஆடை அணிவித்து மகிழ்வது வழக்கம். ஆனால் மோகன் பெண் பிள்ளைகள் விளையாடுவதைப் போல் பொம்மைகளோடு விiளாயாடுவதைக் கண்டு பலர் அவனைக் கேலி செய்தார்கள். ...
மேலும் கதையை படிக்க...
இறைவனால் படைத்த மனித உடலில் ஒவ்வொரு உறுப்பும் விலை மதிக்க முடியாதது. கனடா ஒன்றரியோ மாகாணத்தில் மிசிசாகா நகரில் வாழும் ஜோன் தம்பதிகளுக்கு ஒரே மகன் பீட்டர் . ஜோன் ப்ளூ ஜெய்ஸ் (Blue Jays) பேஸ் பந்து விளையாட்டு அணியில் ...
மேலும் கதையை படிக்க...
யாழ்குடா நாட்டில் உள்ள அரியாலை கிராமத்தில் பிறந்து, வளர்ந்து ,படித்து டாக்டராகி அரசில் இருபது வருடங்கள் வேலை செய்த, அதன் பின் ஓய்வு பெற்று சொந்தத்தில் தனது ஊரில் ஒரு கிளினிக் நடத்தியவர் டாக்டர் சுப்பிரமணிம். அவர் மகன் டாக்டர் ராஜா ...
மேலும் கதையை படிக்க...
புளியங்காடு கிராமத்தில் அடர்த்தியான புளியமரங்கள் நிறைந்த காடாக ஒரு காலத்தில் இருந்த படியால் அந்த பின் தங்கிய கிராமத்துக்கு அந்த பெயர் வந்தது ரயில்வே நிலையத்தில் இருந்து அக் கிராமத்துக்குப் போக ஆறுமைல்களுக்குக் கரடு முரடான பத்தடி அகலமுள்ள கிரவல் பாதை. ...
மேலும் கதையை படிக்க...
விஸ்வா பௌதிகத்துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். அவர் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சக்தி மாற்றத்தைப்பற்றி ஆராச்சி செய்தவர். அறிவியலில் மட்டுமல்ல ஆன்மீகத்திலும் ஈடுபாடுள்ளவர். உயிர் வாழும் எந்த ஜீவனுக்கும் உடல், ஆன்மா என்பது இரு முக்கிய அம்சங்களாகும். உடல். ...
மேலும் கதையை படிக்க...
எனக்கென்று கார் இருந்தும் ஆபிசுக்கு பஸ்சில் நான் போய் வருவது தான் வழக்கம். ஒன்று காரில் போனால் போய் வர பெற்றோலுக்கான பணச்; செலவு இருக்கும். இரண்டாவது டிரபிக்கில் கார் ஓட்டுவதென்றால் பொறுமையும,; கவனமும் வேண்டும். அதுமட்டுமல்ல ஆபிசுக்கு அருகே கார்பார்க் ...
மேலும் கதையை படிக்க...
யாழ்ப்பாணக் குடாநாட்டில், வலிகாமம் வடக்கில், பாக்கு நீரணையைத் தழுவி உள்ள கடலோரக் கிராமம் மயிலிட்டி. ஒரு நெய்தல் நிலக் கிராமம் அக் கிராமம் தமிழ் நாட்டில் உள்ள கோடியக்கரையில் இருந்து தெற்கே 22 மைல் தூரத்தில், பாக்கு நீரணையின் இலங்கைக் கரை ...
மேலும் கதையை படிக்க...
எதிர்பாராத சந்திப்புகள் காதலில் போய் முடிவதுண்டு அதே மாதிரி தான் சாந்தி, ராம் என்ற ராமசாமியின் சந்திப்பும் . சாந்தி பிறந்தது வன்னியில் ஈழத்துப் போர் நடந்த முள்ளிவாய்க்கால் அருகே உள்ள உள்ள முல்லைத்தீவில். இராமசாமி பிறந்த ஊர் மலையகத்தில் உள்ள ...
மேலும் கதையை படிக்க...
மரணதண்டனை
காலம்
பேசும் மனித உருப்படிவம் (Talking Menninquin)
உறுப்புத் தானம்
புலம் பெயர்ந்த டாக்டர் ராஜா
பேசும் புளிய மரங்கள்
சக்தி மாற்றம்
தெருச் சிறுவன் தர்மசேனா
கண்ணம்மா
ஊர் பெயர் தெரியாத உறவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)