ஒரு பேய் ஸ்கூல் ஆரம்பிக்க வேண்டுமென்ற என்னுடைய நீண்ட நாள்கனவு. லட்சியம் ,ஆசையும் கூட.
என் சிறுவயதில் கனவில் வரும் பேய்களிடம் பேச முயற்சித்ததுண்டு.முதன் முதலாக கனவில் வந்த பேய்கள் படக்படக்கென வந்து என்னைபயமுறுத்திவிட்டு சென்றுவிடும். உடனே நான் முழித்துகொள்வேன்.
ஆறு வருடங்களுக்கு பிறகு பேய்கள் என் கனவில் சகஜமாக வரஆரம்பித்தன. பேய்களுடன் கனவில் பேச தயக்கமாக இருந்ததால் அவர்கள் செய்யும்நடவடிக்கையை கவனிக்க தொடங்கினேன். நீண்ட காலத்திற்கு பிறகுதயங்கித்தயங்கி கனவில் அவர்களுடன் பேச ஆரம்பித்தேன்.
ஒரு பேய் ஸ்கூல் ஆரம்பிக்க வேண்டுமென்ற கனவை நான் அவர்களிடம் கூறிய உடனே பேய்கள் எல்லாம் என்னை வினோதமாக பார்த்தன. நான் போனபிறவியில் பேயாக இருந்து இந்த பிறவியில்மனிதனாக பிறந்துள்ளேன் என்றுசொன்ன போது எந்த பேயும் என்னை நம்பாமல் பார்த்தன.
காலங்கள் மட்டும் சென்று கொண்டு இருந்தன. என் கனவில் பேய்கள்வந்து போய்க்கொண்டு இருந்தன. என் கனவில் அவர்களின் உலகத்தை அனுமதித்தேன். அவர்களுடைய ஒவ்வ்வொரு நடவடிக்கையும் என்னை அறியாமல்மனதில் பதிய ஆரம்பித்தது.பேய்களில் பல வகை உண்டு. ஒவ்வ்வொரு பேய்க்கும்ஒவ்வ்வொரு வாசனை உண்டு. கெட்ட தூர்நாற்றமுடைய வாசனை எந்தபேய்களிடமும் இல்லை. சின்ன சின்ன பேய்களிடம் ஓடியாடி விளையாட நான்அனுமதிக்கப்பட்டு இருந்தேன். என் கனவில் வரும் பேய்கள் எல்லாம்இப்போதெல்லாம் பயமுறுத்துவதில்லை. பெரிய பெரிய பேய்கள் தங்களுடையகுழந்தை பேய்களை என் கனவில் விட்டு விட்டு போயி விடுவதும் உண்டு. நான்அந்த கனவில் சந்தோசமாக அவர்களுடன் விளையாடி கொண்டு இருப்பேன்.எனக்கு நிஜமான இந்த உலகத்தை விட கனவில் பேய்களின் உலகத்தில் இருப்பதுஉண்மையான சந்தோஷத்தை தந்தது.
கனவில் பேய்களுடன் நடந்த எல்லா விசயத்தையும் நான் தினமும் டைரியில் எழுதுவதுண்டு. அப்படி என்னிடம் 30,40 டைரிகள் சேர்ந்துவிட்டன. ஒருநாள் தூக்கம் கூட வராமல் அந்த டைரியை பார்த்து கொண்டு இருந்தேன்.பேய்களுக்காக பாடப்புத்தகத்தை தயாரிக்க அப்போதே முடிவெடுத்தேன்.
நான் அன்று துங்காததால் பேய்கள் நேராக என் அறைக்கு வந்துவிட்டன.யாரோ என்னை பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டதால் சுற்றும் முற்றும்பார்த்தேன்.பேய்கள் என்னை பார்ப்பது போன்ற பிரம்மை ஏற்பட்டது. என் மனம்கனவுலகத்துக்கு போ என வற்புறுத்தியது.
டைரியை ஓரத்தில் வைத்துவிட்டு அமைதியாக படுத்தேன். சிலநிமிடங்களுக்குள்ளே என் கனவில் பேய்கள் வர ஆரம்பித்தன. பேய் ஸ்கூல்ஆரம்பிக்க அடிப்படை விதிகள் உருவாக்குமாறு பேய்களின் தலைவன் எலக்டா எனக்கு உத்தரவு போட்டார். அதன்படியே கனவுலகில் சில பேய்களோடு சேர்ந்துகொண்டு பேய் ஸ்கூல் ஆரம்பிப்பதற்கான விதிகளை உருவாக்க ஆரம்பித்தோம்.
பேய்களின் உலகத்தில் ஏழு வகையான பேய்கள் மட்டுமே உண்டு. ஐந்துவகையான நல்ல பேய்கள் வெண்மை நிறத்தை உடையன. கெட்ட பேய்கள் கருப்புநிறத்தை உடையன.நல்ல பேய்களுக்கு குரங்கை போல வால்கள் இருக்கும்.கோபப்பட்டால் மட்டுமே வால்கள் வெளியே தெரியும். இல்லையென்றால்உடம்போடு ஒட்டியிருக்கும். உத்துப்பார்த்தால் தான் தெரியும்.
நல்ல பேய்களில் உயர்ந்த வகையான பேய்கள் என்றால் எலக்டா வகையைசேர்ந்த பேய்கள் மட்டுமே. பேய்களின் வட்டத்தில் எலக்டா பேய்கள் மட்டுமேதலைவனாக முடியும். மற்ற எல்லா பேய்களும் அதற்கு அடிமை. அது சொல் படிகேட்கும்.கெட்ட பேய்கள் யார் சொல்வதையும் கேட்காது. இந்த எலக்டா பேய்கள்உறங்கி கொண்டு இருக்கும் மனிதர்களின் கனவுக்குள் செல்லும் திறமை வாய்ந்தது.அதன் பின்பே மற்ற எல்லா பேய்களும் அந்த கனவிற்குள் போக முடியும். பல நூற்றாண்டுகளாக எலக்டா பேய்கள் மட்டுமே தலைவனாக பேய்கள்உலகத்தை ஆட்சி செய்து கொண்டு இருக்கின்றன.
நல்ல பேய்களில் இரண்டாவது வகையை சேர்ந்த பேயின் பெயர் ரேபி.இந்தப் பேய் பொதுவாக எந்தப் பிரச்சனைக்கும் போகாது.தானுண்டு தன் வேலையுண்டுயென்றறு இருக்கும். இந்தப் பேய்கள் கனவில் வந்தால் அதற்கு அடுத்த நாள் கனவு கண்ட அந்த மனிதர்க்கு அவன் விருப்பப்பட்ட காரியம் நிறைவேறும்.
நல்ல பேய்களில் மூன்றாவது வகையான பேயின் பெயர் ரலு.இது சுய முன்னேற்ற பேய். மனிதனின் கனவில் புகுந்து அவன் வாழ்க்கையில் முன்னேறுவது போல அந்தப் பேய் ஒரு கனவை உண்டாக்கி பலரை வாழ்க்கையில் உயர்வடைய செய்துள்ளது.
நல்ல பேய்களில் நான்காவது வகையான பேயின் பெயர் குங். இது மற்ற எல்லா பேய்களையும் விட மிகுந்த பலசாலியும் கூட. இந்த பேயை மனித உலகத்தில் உள்ள நான்கு கால் விலங்குகள் பூனை ,நாய் ,மாடு போன்றவை பார்த்த உடனே கண்டுபிடித்து விடும். தற்போது இந்த பேய்கள் சில ஆண்டுகளாக மனிதர்களின் கனவில் வருவதில்லை. காரணமும் சரியாக தெரியவதில்லை.
நல்ல பேய்களில் ஐந்தாவது வகையான பேயின் பெயர் வியா. மனிதர்களின் கனவில் வரும் பேய். நாளை கொலை செய்யும் முடிவோடு இருக்க கூடியவனின் மனதில் புகுந்து அவனுடைய மனதை நல்வழியில் மாற்றுவதே இந்த பேயின் வேலை.
இந்தப் பேய் ஒரு சோம்பேறி பேயும் கூட. கெட்ட பேய்களில் இரண்டு வகை உண்டு. முதலாவது கொடிய பேயின் பெயர் தல்மி. இப்பேய் நல்ல பேய்களை போல சிறிது நேரம் உறங்குவதில்லை. இது தன்னை எப்போதுமே வெளிக் காட்டி கொள்ளவே விரும்பும். இது ஒரு இடத்திற்கு வரும் முன்பே எச்சரிக்கை மணியாக புகை வரும். பூனைகளும் ,நாய்களும் படுத்து உருண்டு புரண்டால் தல்மி பேய் துரத்திலேருந்து பார்த்து கொண்டு இருக்கின்றன என்று அர்த்தம். இந்த பேய் பழமையான கட்டிடங்களில் மட்டுமே வசிக்கும். வௌவால்களை காற்றின் மூலம் மயக்கமுறச் செய்து அதை தனக்கு உணவாக மாற்றும். இது உண்மையும் கூட. இந்த பேய் சாப்பிடுவதை மற்ற பேய்களால் பார்க்க முடியாது. ஆனால் உணர முடியும்.
தல்மி பேய் பொதுவாக அமைதியான இடங்களில் திடீரென சப்தத்தை உண்டாக்கி திகிலூட்டும். நான் இங்கே இருக்கிறேன் என குறிப்பால் உணர்த்தும். பொதுவாக குண்டாக இருக்கும் மனித உடலுக்குள் புகும். அவனின் உடல் சக்தியை உறிச்சி விடுவதால் நாளடைவில் அந்த மனிதன் மெலிந்து போவான். அப்படி மெலிந்து போய் இருப்பவர்களை பார்த்தால் தல்மி பேயின் அட்டகாசம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
வேற்றுகிரகவாசிகளாடு பேசும் சக்தி பேய்களிலே இதற்கு மட்டுமே உண்டு. வேற்று கிரக வாசிகள் மனிதர்களுடனான தொடர்பை துண்டிப்பதே இதனுடைய மற்றொரு பொழுது போக்கும் கூட.
தல்மி பேய் ஒருவரின் உடலில் புகுந்தால் மரணம் நிச்சயம்.இதன் கொடூர குணத்தை வார்த்தைகளால் வடிப்பது மிகவும் கஷ்டமான ஒன்று.
கொடிய பேய்களில் மற்றொரு வகையான பேயின் பெயர் பஸ்வி. இந்த பேய்கள் தற்கொலை செய்து கொள்ளும் மனிதர்களின் உடலில் உட்கார்ந்து கொள்ளும். அவர்களின் ரத்தத்தை கொஞ்சம் கொஞ்சமாக உறிச்சும். மனிதர்கள் இருக்கும் எல்லா இடங்களிலும் இந்த பேய் வாழும். இரவு நேரங்களில் சில சமயம் மனித கண்களுக்கு காட்சியளிக்கும். அந்த பேயை பார்த்த பதினோரு நாளில் அந்த மனிதன் இறந்து விடுவான். அவன் உடலில் புகுந்து இல்லாத அட்டகாசத்தை பண்ணும். அருகில் இருப்பவ்ர்களையும் நிம்மதியாக இருக்க விடாது. அவன் இருக்கும் போது ஆளே வித்தியாசமாக மாறியிருப்பான். இரவு நேரத்தை விட பகல் நேரத்தில் வெளியில் சுற்றும் தன்மை இதற்கு உண்டு. இந்த பேய் உங்களுக்கு அருகில் இருப்பதை ஈஸி யாக கண்டு கொள்ளலாம். சம்மபந்தமே இல்லாமல் எங்கிருந்தோ வரும் வாசனை உங்கள் மூக்கை துளைக்கும். நல்லா ஓடிக் கொண்டு இருக்கும் வாட்ச் திடீரென நிற்கும். நீர் நிலைகள் அதிர்தல் ,கதவுகள் தானாக அடிபடுதல் ,மரங்கள் முறிதல் போன்ற சப்தங்கள் மூலம் அது இருப்பதை உணர முடியும். பொதுவாக இந்த பேய் பயந்த சுபாவமுடைய மனிதர்களின் அருகிலேயே இருந்து அவ்ர்கள் செய்யும் செயலை வேடிக்கை பார்க்கும். பின்பு அவன் உடலுக்குள் புகும். சொல்லாணத் துயரத்தை அவன் காண்பான்.
வருடங்கள் ஓடிக்கொண்டே இருந்தன. கல்லுரியில் படித்த போதும் இரவில் பேய்களை பற்றி ஆராய்ச்சி செய்தேன். பேய்களுக்கான புதிய பாடத்திட்டத்தை உருவாக்கியிருந்தோம்.
பேய்களுக்கான பாடத்திட்டத்தின் நோக்கமே பேய்களுக்கு ஒழுக்க நெறிகளை போதிப்பது. நான் ஒரு விசித்திர குழாய் கருவியை கண்டுபிடித்தேன். அந்த குழாய் கருவி பேயை உறிச்சும் தன்மை உடையது. தீய பேயை கண்டுபிடித்து நல்வழிப்படுத்தி நல்ல பேயாக மாற்றுவதே அதன் நோக்கம். என் வீ ட்டிற்கு வந்த பேய்கள் அந்த கருவியை பார்த்து சந்தோஷபட்டன. ஒரு நாள் பேய்களின் தலைவன் கெட்ட பேய்களை பிடிக்க சில நல்ல பேய்களின் உதவியோடு என் வீட்டிலிருந்த அந்த விசித்திர குழாய் கருவியை பேய்கள் யாருக்கும் தெரியாமல் தூக்கி கொண்டு வந்தன.
அந்த விசித்திர கருவியில் உள்ள பட்டனை தட்டிய உடனே துரந்திலருந்த கெட்ட பேய்கள் நடமாடும் இடத்தை சுட்டி காட்டியது. மற்றொரு பட்டனை தட்ட கெட்டபேய்களை இந்த மெஷின் தானாக இழுக்கும். கெட்ட பேய்கள் பறந்து வந்து இந்த விசித்திர கருவியின் உள்ளே விழும். இப்படி இரு கெட்ட பேய்கள் அகப்பட்டு கொண்டன. இரு பேய்களும் என்னை பார்த்து முறைத்தன.
அந்த கருவிக்குள் சில நல்ல பேய்களும் குதித்தன. அந்த கெட்ட பேய்களை நல்ல பேய்கள் நெய்ய புடைத்தன. அந்த இரு தீய பேய்களை கொண்டு நாங்கள் பல வித ஆராய்ச்சிகளை செய்தோம். அப்போதுதான் விண்வெளி சுற்றுலா போட்டியில் நீலாவுக்கு செல்லும் ஐந்து பேரில் நானும் ஒருவனாக தேர்தேடுக்க பட்டேன் என்ற செய்தி எனக்கு சொல்லப்பட்டது.
உலகம் முழுவதும் நிலாவை பற்றி எழுதிய ஆராய்ச்சி கட்டுரையில் ஐவர் தேர்வு பெற்றனர். அதில் நானும் ஒருவன் என்பதால் என்னை பேட்டி காண பத்திரிக்கைகள் போட்டி போட்டன. என் கனவில் வந்த பேய்களிடம் இதை சொன்ன போது முதலில் அதெற்கு புரியவில்லை. பின்பு கஷ்டப்பட்டு புரிய வைத்தேன். கனவின் மூலம் நிலாவில் பேய்களை கூட்டி செல்லலாம் என முடிவெடுத்தேன்.
நிலாவிற்கு செல்ல என் உடலில் பலவித பரிசோதனைகளுக்கு அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் உட்படுத்தினார்கள். வெற்றி பெற்ற எங்கள் ஐவரின் படமும் உலகம் முழுவதும் வெளியானது.
இரண்டு மாத கடின உழைப்பிற்கு பின் விண்வெளி ராக்கெட் எங்களை சுமந்து கொண்டு நிலாவிற்கு பயணமானது. எங்களுடன் மேலும் இரண்டு ஆராய்ச்சியாளர்கள் வந்திருந்தனர். அவ்ர்கள் இருவரும் ஏற்கனவே நிலாவிற்கு சென்று வந்தவர்கள். எங்களுக்கு தரப்பட்ட பல பயிற்சிகளிலும் அவ்ர்கள் எங்களுக்கு ஆலோசனை கூறியவர்கள். இந்த பயணத்தில் எங்கள் உடலில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
பசியில்லாமல் இருக்க எங்களுக்கு கொடுக்கப்பட்ட மாத்திரைகளை முழங்கினோம். அன்று நிலாவை பற்றி பல விஷயங்களை தெரிந்து கொண்டோம். அன்று ஓய்வு எடுத்த போது என் கனவில் எலக்டா வந்தான். அவனின் பின்னே மற்ற எல்லா பேய்களும் வந்தன.
நான் பேய்களிடம் கனவுகளின் மூலம் பேச ஆரம்பித்தேன்.பேய்கள் அனைத்தும் நிலாவை பார்க்க வேண்டுமென ஆவல் இருந்தது. பேய்கள் என் கனவின் உள்ளே புகுந்து மூச்சு காற்றாய் வெளியே வந்து நிலாவை சுற்றி பார்த்தன. நான் என் கனவில் வந்த எல்லா பேய்களையும் நிலாவில் விட்டு விட்டு விண் வெளி ராக்கெட்டில் சுற்று பயணம் முடித்து விட்டு பூமிக்கு திரும்பினோம்.
என் வீட்டில் இருந்த விசித்திர கருவி கெட்ட பேய்களை நல்ல பேய்களாக மாற்றி இருந்தன. அதன் மூலம் மற்ற சில கெட்ட பேய்களை பிடித்து அதனை நல்ல பேய்களாக மாற்ற முயற்சித்தேன். மீண்டும் வெற்றி எனக்கே கிட்டியது. இப்படியாக என் வீட்டிற்க்கு கீழே உள்ள அறையில் பேய்களை ஒளித்து வைத்தேன். கெட்ட பேய்களாக இருந்து நல்ல பேய்களாக மாறிய பேய்களுக்கு மறையும் சக்தி இல்லை. ஆதலால் என் வீட்டின் கீழே உள்ள இருட்டான அறையில் அவர்களை பாதுகாப்பாக வைத்தேன்.
நாளுக்கு நாள் பேய்களின் எண்ணிக்கை அதிகமானது. நான் மே ஜர் ஆனதால் எனக்கு வர வேண்டிய உயில்கள் வந்தன. என் பெயரில் இருந்த வீடு ,நிலம் எல்லாவற்றயும் விற்று பணமாக்கினேன்.
விண்வெளி சுற்றுலா மையத்திற்கு நிலாவுக்கு செல்ல மினி ராக்கெட் புக் செய்து கொண்டு நிலாவிற்கு பயணம் செய்தேன். பறக்கும் போது ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு ராக்கெட்டை தவ்விப்பிடித்தவரே தொங்கி கொண்டு பேய்கள் அனைத்தும் என்னுடன் நிலாவிற்கு வந்தடைத்தன.
என்னை பேய்களின் தலைவர் வரவேறார். எனக்கு தேவையான பழங்களை வளர்க்க பேய்கள் எனக்கு உதவி செய்தன.நான் நிலாவில் இருந்து கொண்டே பூமியில் இருந்த பேய்களை மெஷின் மூலம் பிடிக்க கற்றுக் கொண்டேன்.நான் நிலாவில் பேய் ஸ்கூல் ஆரம்பிக்கலாமென முடிவெடுத்தேன். எனக்கு பூமியில் இருப்பதைவிட நிலாவில் பேய்களுடன் இருப்பது மிகுந்த சந்தோஷத்தை தருகிறது.