2016 வடக்கு லண்டன்.
‘ இப்படிக் கண்மண் தெரியாமல் குடித்திருக்கக்கூடாது’ அவன் தனக்குள் சொல்லிக்கொள்ளும்போதே வரதனின் வார்த்தைகள்; அவனுக்குள் தடுமாறின. அவனுடன் குடித்துக் கொண்டிருந்த சினேகிதர்களை விட்டுப் பிரிந்து ‘பாரிலிருந்து’ வெளியேவந்ததும் வெளியில் பெய்துகொண்டிருந்த பெரு மழையில் சட்டென்று நனைந்து விட்டான்.
சதக் சதக்கென்ற மழை நீpரும் அவனின் தள்ளாட்டத்திறு;கு ஒரு காரணியானது.
வழியெல்லாம் நிர்; தேங்கியிருந்தது..அவன் போதையில் அநாயாசாகமாக நடக்க எத்தனித்தான்;. அவனுள் ஒரு அசுரவேகமும் உற்சாகமும் பொங்குவதுபோல் அவன் போதை மனம் சந்தோசப் பட்டது. ஆற்றையும் கடக்கலாம் ஆகாயத்திலும் மிதக்கலாம் போன்ற ஒரு அமானுஷ்ய உணர்வு வந்ததும், ஆதிகாலத்தில் அவன் படித்த புராணங்களில் வந்த நீரைக்கடந்தும், ஆகாயத்தில் மிதந்தும் அற்புதங்கள் செய்யும் பல உருவங்கள் கற்பனையிற் தோன்றி மறைந்தார்கள். அவர்களெல்லாம் இப்படி கண்மண தெரியாமல் சோம பானத்தைதக் குடித்து விட்டுத் தள்ளாடுபவர்களாகத்தான் இருந்திருக்கவேண்டும் என்று தனக்குத் தானே நினைத்து விட்டு வாய்விட்டுச் சிரித்தான்.
இப்போது நேரம் நடுச்சாமத்தை எட்டிக்கொண்டிருந்தது. அவனின் அம்மாவுக்கு அவன் இப்படி நடுநிசியில் வெளியில் போவது பிடிக்காது. நடுநிசி என்றால் ‘பேய் வெளியில் திரியும் நேரம்’ என்று புலம்புவாள்.அம்மாவும் அப்பாவும் வெளியூர் போயிருக்கிறார்கள். இவன் ‘சுதந்திரமாகக்’ குடித்துவிட்டுக் கூத்தடிக்கிறான்.அதை நினைத்தது அவன் பெரிதாகச் சிரித்தான்.
அவனைப் பார்த்த சிலர் ‘நல்ல போதை போலிருக்கு’ என்ற தொனியில் தங்களுக்குள் பேசிக்கொண்டு போனதை அவன் கிரகிக்க முடியவில்லை.
கொஞ்ச நேரத்துக்கு முதல்,அவன் பாரிலிருந்து அளவுக்கு மீறிக் குடிப்பதை அவனின் நண்பர்கள் சிலர்,ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். அதில் ஒருத்தன், ‘இந்த நிலையில் நீ வீட்டுக்குப் போகமுடியாது.என்னுடன் நின்று விட்டு நாளைக்குப் போகலாம்’ என்றான். வரதனுக்கு அதெல்லாம் பிடிக்காது. வாரவிடுமுறையைத் தனது வீட்டில் ஆறுதலாகச் செலவளிப்பதில் அக்கறை கொண்டவன் அவன்.அதுவும், தாயும் தகப்பனம், அவனின் சகோதரியைப் பார்க்க வெளியூருக்குப் போயிருக்கிறார்கள்.அவர்கள் ஞாயிற்றுக் கிழமை பின்னேரம்தான் திரும்பி வருகிறார்கள்.
‘பரவாயில்லை நாளைக்குச் சனிக்கிழமை. ஓரேயடியாகத் தூங்கித் தொலைக்கலாம்’ மதுவெறியில் வரதன் எதோவெல்லாம் தனக்குள் முன்னுக்குப் பின்னாக நினைத்துக் கொண்டு நடந்தான்.
அவன் கால்கள் தள்ளாடின. அவனுக்குப் பக்கத்தில், அருகில், தூரத்திலுள்ள மனித உருவங்கள்,கட்டிடங்கள், அவனைத் தாண்டிப்போகும் வாகனங்கள்,அத்தனையும் இரண்டாக மூன்றாக அல்லது ஒரு தெளிவுமற்ற வெற்று பிம்பங்களாக அவனைச் சுற்றி வந்தன. அல்லது அவன் அவற்றைச் சுற்றி வந்ததாக நினைத்தான்;.
‘ஓ காட், எப்படி வீட்டுக்குப் போய்ச் சேருவேன், போகிற வழியெல்லாம் வாந்தி எடுத்துத் தொலைக்கப் போகிறேனா அல்லது தள்ளாடி விழுந்து தலையை உடைத்துக்கொள்ளப் போகிறேனா அல்லது, போதையில் பொது மக்களுக்கு அசௌகரியம் தந்த குற்றச் சாட்டில் போலிசாரால் கைது செய்யப்படப்போகிறேனா’ அவன் மதுவெறியில் தன்னை மறந்து புலம்பிய சொற்கள்; மழலையாகி அவனைச் சிரிப்பூட்டின.
தன்னை மறந்து சிரிக்கும் அவனை ஒருமாதிரியாகப் பார்த்தபடி போகும் ஒருசிலரை அவன் போதைக்கண்கள் மயக்கத்தடன் கவனித்தன. போதை வெறியில் அரை மயக்கத்தில் தெருவில் விழுந்து வேடிக்கை காட்டாமல் லாஸ்ட் ட்ரெயினைப் பிடித்து வீட்டுக்குப் போய்ச் சேரவேண்டும். என்ற நினைவுடன் அவன் தள்ளாடியபடி பாதாள ட்ரெயில்வே ஸ்டேசனையடைந்ததும் நேரத்தைப் பார்த்தான்,நள்ளிரவைத் தாண்டிக்கொண்டிருந்தது. லாஸ்ட் ட்ரெயின் வரப்போகிறது,அவசரமாகப் படியிறங்கினான்.
இந்த நேரத்தில் அங்கு வரப்போவது.கடைசி ட்ரெயின் என்றபடியால் அதைத் தவறவிடாமலிருக்கப் பலர் வரதனைப்போல் அவசரமாகப் படியிலும், அதன் பக்கத்திலிருந்த எஸ்கலேட்டரிலும் தூரத்திலிருந்த லிப்டிலும் பட படவென இறங்கிக் கொண்டிருந்தார்கள்.
இன்று வரதன், தனது வேலைமுடியத் தனது சினேகிதன் ஒருத்தனின் பேர்த்Nடெய் பார்ட்டிக்குப் போய்க் கண்மண் தெரியாமல் குடித்துவிட்டான். சாதாரணமாக ஒரு அளவோடு குடிக்கும் வரதன் இன்ற அளவுக்கு மிறிவிட்டான். அளவுக்கு மீறிக் குடித்ததற்கு,நண்பனது பிறந்தினக் கொண்டாட்டம் மட்டும் காரணமல்ல, அவனிலிருந்து பிரிந்து போய்விட்ட அவனது காதலி ஆஞ்சலீனாவின் நினைவுகளும்தான் என்பதை அவன் மட்டும்தான் அறிவான்.
இன்று அவன் பார்ட்டிக்குப் போகவிருந்ததால் காரில் வராமல் ட்ரெயினில் வேலைக்குப் போனான். வரதன் தன்னைப் பற்றி மிகவும் பாதுகாப்பு உணர்வு கொண்டவன்.வாரவிடுமறையில் நண்பர்களுடன் ‘பாரு’க்குப்போகும் சந்தர்ப்பங்களில் ஒன்றிரண்டு பீர்களுக்கு மேல் தொடமாட்டான். பீர் குடித்தால் தொப்பை வந்து விடும் என்ற பயம் அவனுக்கு.
இன்று அளவுக்கு மீறிக் குடித்தபோத அவனின் சினேகிதர்கள் அவனை விசித்திரமாகப் பார்த்தார்கள்.பீர் மட்டுமல்லாமல:. விஸ்கியும் எடுத்துக்கொண்டான். அது அவன் அவனது வாழ்க்கையில்,இதுவரை செய்யாத வேலை.
வரதன் தள்ளாடியபடி கீழே வரவும் ட்ரெயின் வந்து நிற்கவும் சரியாகவிருந்தது.லண்டனில் உள்ள மதுபானப் ‘பப்’புகள், ‘பார்’களிலிருந்து அவனைப் போல் சுயநினைவைத் தவறவிட்ட பல ‘குடிமகன்கள்’ மட்டுமல்லாது.அங்கு வேலைசெய்யம் ஊழியர்கள், நீpண்டநேரம் திறந்திருக்கம் சுப்பர்மார்க்கெட்டுகள்,நாடகக் கொட்டகைகள், படமாளிகைகள், சாப்பாட்டுக் கடைகளில் வேலை செய்வோர் என்ற பல தாரப்பட்டோர் படபடவென்ற ஏறினார்கள்.
அவனிருக்கும் வீடு போக அவன் எறிய இடத்திலிருந்து.பத்து ஸ்டேசன்கள் தாண்டவேண்டும்.அவனுக்கு அளவுக்கு மீறிய போதையினால் கண்கள் சுழன்று கொண்டிருந்தது. போதையில் நித்திரையாகித் தனது ஸ்டாப்பைத் தவற விடக்கூடாது என்பதால் அரைகுறை மயக்கத்துடன ட்ரெயினில் ஏறுவோர் இறங்குபவர்களை அவன் பார்த்துக் கொண்டிருந்தான். இரவின் நடுநிசியில், அவனைச் சுற்றிய உலகம் அவனின் போதையேறிய கண்களுக்கு மாயையாகத் தெரிந்தன. கடந்து சென்ற எட்டு ஸடேசன்களில் எத்தனையோ பேர் ஏறினார்கள், இறங்கினார்கள்.
இப்போது ட்ரெயின் கிட்டத் தட்டக் காலியாகிக் கொண்டிருந்தது. இவன் இருந்த, பெட்டியில் இவனைத் தவிர யாரும் கிடையாது. அடுத்த பெட்டியில் மூன்று இனைஞர்கள்-கிழக்கு ஐரோப்பிய மொழியில் பெரிய சத்தம்போட்டுக்கொண்டு ஏறினார்கள்.
ட்ரெயின் அங்கு ஒரு முப்பது நாற்பது வினாடிகள் நின்று விட்டுப் புறப்படும் தறுவாயில் ஒருபெண் சட்டென்ற வரதன் இருந்த பெட்டியில் காற்றுப்போல் வந்தேறினாள். அவன் இறங்கவேண்டிய ஸ்டாப்புக்கு முன் வரும் ஸ்டாப்பில்.அவள் ஓடிவந்து எறினாள்.
ஓடிவந்த படபடப்பு ஒன்றுமில்லாமல் அவள் எறி வந்தாள். பக்கத்துப் பெட்டியில் மூன்று இளைஞர்கள் பெரியசத்தத்துடன் பேசிக் கொண்டிருப்பதால் தனது பெட்டிக்குள் அவள் ஏறினாள் என்று அவனின் போதை மனம் எடைகட்டமுதல்,அவள் .வரதனுக்க நேரே வந்து உட்கார்ந்தாள்.அவனுக்கு அது வியப்பாகவிருந்தது. கிட்டத்தட்ட வெறுமையாகவிருந்த பெட்டியில் அவள் எந்த இடத்திலென்றாலும் உட்கார்ந்திருக்கலாம்.ஆனால் அவள் அவனுக்கு நேர் எதிராக வந்து உட்கார்ந்தது அவனுக்கு ஆச்சரியமாகவிருந்தது.
அவள் தனியாக இருந்தால். இந்த நடுநிசியில் யாரும் தனது பக்கத்தில் வந்திருந்து அலட்டுவார்களள் என்பதைத் தடுக்க,ஆபிஸ_க்குப் போன உடையான,சூட்டோடும் கோட்டோடும் கௌரவமாகத் தெரியும் எனக்கு முன் வந்திருக்கிறாளா? ஆவன் தன் பாட்டுக்கு யோசித்தான்.
அவள் இலையுதிர்காலத்தற்குத் தேவையான மெல்லிய கறுப்பு ஓவர்க்கோட் போட்டிருந்தாள்.அது ஏதோ இருபது வருட காலத்தைத் தாண்டியதான பாஷன் என்று போதை மயக்கத்திலும் அவனுக்குப் புரிந்தது.அவளின் தலையை முற்றுமுழதாக அவளின் ஓவர்கோர்ட் ஹ_ட் முடியிருந்தது.முகம் சரியாகத் தெரியவில்லை.கைகளில் கறுப்புக் கையுறைகள் போட்டிருந்தாள்.. அவளது நீண்ட ஓவர்க்கோர்ட்டுக்குள்ளால்,அவள் கால்களில் பூட்ஸ் எட்டிப்பார்த்தன. ஓட்டுமொத்தமாக அவளை அடையாளம் தெரியாதமாதிரி தோற்றத்தில் அவள் அவன் முன்னே உட்கார்ந்திருந்தாள்.
அவனுக்கு அவளிடம் பேசவேண்டும்போலிருந்தது. அவன் அவனுக்குத் தெரியாத பெண்களுக்கு ‘ஹலோ’ சொல்லக் கூச்சப்படுபவன். ஆனால் போதை தந்த தைரியத்தில்(?) அவளுக்கு,’ஹலோ’ சொல்லலாமா என்று நினைத்தபோது அவனுக்கு உடம்பு பட்டென்ற சூடானது.
பயமில்லாமல் அவனுக்கு முன் வந்த இருக்கிறாள்.அவன் கேள்வி கேட்டாள்,அல்லது சாதாரணமான ‘ஹலோ’ சொன்னால் என்ன செய்வாள்?வரதன் மனதில் பல கேள்விகள்.
அவள் முன்னிருப்பதாலும் போதை வெறியாலும் அவனின்; உடல் சூடாகியது. அவனது ‘டையை’ச் சாடையாகத் தளர்த்திவிட்டான். அவள் அவனைப் பார்ப்பது போலிருந்ததால் வரதன் அவளை ஏறிட்டுப் பார்த்தான். அவளின் முகம் அவனுக்குத் தெளிவாகத் தெரியவில்லை.
அவனுக்கு அளவற்ற போதை நிலை என்றபடியால் அவளே முன்னாலிருப்பதும் மங்கலாகத் தெரிந்தது.
ஆனாலும் ‘ஹலோ’ என்றான். அவள் நிமிர்ந்து பார்க்கவில்லை.
அவன் சாடையாகக் குரலையுயர்த்தி,’ ஹலோ.. நான் வரதன்.. ஹவ் டு யு டு’ என்றான். இவனின் உயர்ந்த குரலைக் கேட்ட அடுத்த பெட்டியிலிருந்த மூன்று ஆண்களும் இவனை ஒருசில வினாடிகள் உற்றப் பார்த்தார்கள். கொஞ்ச நேரத்தின்பின், தங்களுக்குள் ஏதோ சொல்லி விட்டு இவனைப் பார்த்துச் சிரித்தார்கள். வரதனுக்குக் கோபம் வந்தது. இவளின் உதாசினத்தைக் கண்ட அவர்கள் என்னை வேடிக்கை செய்கிறார்களா,
அவளை இன்னொருதரம்,’ஹலோ’ சொல்லவேணடும் என்ற நினைத்தபோது அவன் இறங்கவேண்டிய இடம் வந்து விட்டது. அவன் அவளைப் பார்த்து முணுமுணுத்தபடி எழும்பினான் நடை தள்ளாடியது.
இறங்குமபோது,விழுந்துவிடாமல் கவனமாக மெல்லமாக அடிகள் எடுத்து வைத்தபோது,இவனுக்கு முன்னிருந்தவள் விசுக்’ என்ற சப்தத்தில் அவனைக் கடந்து போவதைக் கண்டான். அவள் ஒருவிதமான’பறக்கும்’ தன்மையுடன் தன்னைக் கடந்ததாக வரதன் உணர்ந்தான்.
கடைசி ட்ரெயினுக்கு அவசரத்துடன் ஏறியதுபோல்,ட்ரெயினிலிருந்து இறங்கியவர்கள் அவசரமாகப் போய்க் கொண்டிருந்தார்கள்.இறங்கியவர்களில் ‘அவளைத்’ தவிர எந்தப் பெண்களும் கிடையாது.
அவன் ட்ரெயினால் இறங்கி வெளியே போகும் எஸ்கலேட்டரில் கால் வைத்தபோது, அவள் வெளியே போகாமல், அடுத்து பிளாட்பாரத்திற்;குப் போவதை அவதானித்தான். வந்த வழியில் திரும்பிப்போகப் போகிறாளா? என்னவென்றாலும்,அடுத்த பக்கத்திலிருந்து வரும் ட்ரெயின் வரமுதல். அவளுக்கு எப்படியும் ஒரு ‘ஹலோ’ சொல்லவேண்டும் என்ற அவன் போதை மனம் ஆணையிட்டது.
வெளியே போவதற்காக,எஸ்கலேட்டரில் வைத்த காலை பட்டென்ற எடுத்துக்கொண்டு, அடுத்த பிளாட்பாரத்துக்கு அவன் விரைந்தான். அப்போது அவள் அந்தப் பாதாள ட்ரெயின் வரும் குகையின் ஆரம்ப வாசலுக்கு விரைந்த கொண்டிருப்பது தெரிந்தது. அதே நேரம் அடுத்த பக்கத்திலிருந்து ட்ரெயின் வருவதற்கான ஒலிகளும் கேட்கத் தொடங்கின.
அவன் மனதில் ஏதோ ஒரு உந்துதலால்,அவளை நோக்கி அவசரமா ஓடினான்.அவன் அவளையடைவதற்கும் அடுத்த பக்க ட்ரெயின் வருவதற்கும், அந்த ட்ரெயின் அந்தப் பாதள ட்ரெயினின் வாசலையடைந்ததும் அவள் அதன் முன்னே பட்டென்று எகிறிப் பாய்ந்து தாவி வீழ்ந்ததும் ஒரு சில கணங்களில் நடந்த பயங்கரமான விடயங்கள்.
அவன்’ ஏய் பெண்ணே’ என்ற கத்துவதற்கிடையில் வந்த ட்ரெயின் பிளாட்பாரத்தில் பெருமூச்சுடன் நின்றது. அவளுக்கு என்ன நடந்தது?
ட்ரெயினுக்கு அடியில் சிதைந்து கிடக்கிறாளா, ‘ பிளிஸ் ஹெல்ப்’ அவன் கூக்குரலிட்டான். ;ட்ரெயினால்; இறங்கியவர்கள் சிலர் ஓடிவந்தார்கள்.
‘என்ன நடந்தது என்று அவனைக் கேட்டார்கள். வரதனுக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை.
அவனுக்கு இருதயம் படபடவென அடித்துக் கொண்டது. நா வரண்டு பேச்சு வரக் கஷ்டமாகவிருந்தது.
‘ ட்ரெயினில்,எனக்கு முன்னாலிருந்துகொண்டு வந்த பெண் இந்த ட்ரெயினுக்கு முன்னால் பாய்ந்து விட்டாள்’ அவன் வார்த்தைகள் தடுமாற அலறினான்.
‘வாட்’ பல குரல்கள் ஒரேயடியாக ஒலம் போட்ட தொனியில்; கேள்வி கேட்டன. அவர்கள் அத்தனைவேரின் பார்வையும் ட்ரெயினின் அடித்தளத்தில் பதிந்திருந்தன.
வரதன் தலையைப் பிடித்துக் கொண்ட,’ஐயோ,ஐயோ ‘ என்று பதறினான்.
அதே நேரம் ஒரு சில வினாடிகள் அங்கு நின்றிருந்த ட்ரெயின் புறப்பட்டு விட்டது.
அங்கு அலறிப் புடைத்துக் கொண்டு நின்ற எல்லோர் பார்வையும் தண்டவாளத்தில் பதிந்தது. ட்ரெயின் போய்விட்டது. அதற்குள் பாய்ந்து விழுந்ததாக வரதன் பதறும் எந்தப் பெண்ணையோ அவளின் பிணத்தையோ காணவில்லை. வீழ்ந்தவளின்,உடம்பு சிதறி,குருதி பீறிட்டடித்த எந்தத் தடயமும் இல்லை.
‘ அந்தப் பெண் எனக்கு முன்னால்; இறங்கி வந்து இந்தப் பக்கம் விரைந்து வந்து எதிரே கொண்டிருந்த ட்ரெயினுக்குப் முன்னால் பாய்ந்ததை எனது இருகண்களாலும் கண்டேன்’ வரதன் அழாக் குறையாகச் சொன்னான். வந்து நின்றவர்கள் அவனை இப்போது மிகக் கவனமாகப் பார்த்தார்கள். வரதன்; அடங்காத போதையில் தள்ளாடிக் கொண்டிருந்தான்.
வந்தவர்களிலம் பலர் ‘பாரு’க்குப் போய்விட்ட வந்த’ குடிமகன்களே’. ஆனாலும் யாரும் வரதன் அளவு வார்த்தைகள் தடுமாறி, கால்கள் தள்ளாடிய நிலையில் இல்லை. ஓரிருவர், பேசாமல் போனார்கள். ஓருசிலர் ‘அடுத்த தரம் அளவுக்கு மீறிக் குடிக்காதே’ என்ற கிண்டலாகச் சொல்லிவிட்டுப் போனார்கள்.
அவன் தனியாக நின்று கொண்டு அர்த்த ராத்திரி கடந்த நேரத்தில் பாதாள ட்ரெயினின் இருண்ட வழியை வெறித்தப் பார்த்தான். அவன் அளவுக்கு மீறக் குடித்திருப்பது அவனுக்குத் தெரியும். ஆனால் அவன் ஒரு பெண்ணுடன் பிரயாணம் செய்ததும். அவள் எதிராக வந்து கொண்டிருந்த ட்ரெயினுக்கு முன்னால் பாய்ந்ததும் அவன் போதையில் கண்ட மாயத் தோற்றங்களல்ல என்று அவன் திடமாக நம்பியதால் அந்த இடத்தை விட்டு நகர அவன் மனம் இடம் தரவில்லை.
அவளுக்கு என்ன நடந்தது என்ற அவனுக்குத் தெரியாத வரையில் அவ்விடத்தை விட்ட நகர அவன் மனம் இடம் தரவில்லை. பிளாட்பாரம் சட்டென்ற வெறுமையாகியது. ஊசிவிழுந்தால் கேட்கக்கூடிய அமைதி அவனைத் திகலுறப் பண்ணியது.
அப்போது. யாரோ வரும் காலடி கேட்டுத் திரும்பினான்.
‘ ஹலோ, லாஸ்ட் ட்ரெயின் போய்விட்டது.இனி எந்த ட்ரெயினும் வராது..’ என்ற சொல்லிக்கொண்டு, அந்த ஸ்டேசனில் வேலை செய்யும் ஒரு உத்தியோகத்தர் அவனை நோக்கி வந்துகொண்டிருந்தார்.
அவன் அவரைக் கண்டதும், ‘ அவள..அவள்’ என்று தடுமாறத்தொடங்கிவிட்டான்.அவன் விரல்கள்; குகைவாயிலைச் சுட்டிக்காட்டின.
‘அவளா? யாரது உனது கேர்ல் பிரண்டா?’ வந்தவர் பரபரத்தார்.
‘இல்லை . .அவள் என்னுடன் வந்தவள். .எனக்கு முன்னாலிருந்தவள் இந்தப் பக்கம் வந்து ட்ரெயினுக்கு முன் பாய்ந்து விட்டாள்’அவன் இப்போது வாய்விட்டு விம்மத் தொடங்கினான்.
‘ உன்னுடன்; ட்ரெயினில் வந்தவளா. .உனக்கு முன்னாலிருந்தவளா?’ அவர்,பார்வை தண்டவாளத்தை ஆராய்ந்தது. ‘ட்ரெயினுக்கு முன்னால் பாய்ந்தாளா?’ அவர் தொடர்ந்த கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார்.
‘நான் அவளுக்கு ஹலோ கூடச் சொன்னேன்’ அவன் குழந்தை மாதிரித் தேம்பினான்.
‘அப்படியா, இங்கு யாரும் விழுந்து சிதைந்ததான அடையாளமில்லை. .நீ உண்மையாகவே ஒருத்தி ட்ரெயினுக்கு முன் பாய்ந்து விழுந்தததைப் பார்த்தாயா?’ அவர் குரலில் அசாதாரணமான கடுமைத் தொனி.
அவனுக்கு,அவரின் தொனி பிடிக்கவில்லை.
‘நான் பொய் சொல்லவேண்டும்? பாவம் ஒரு பெண்ணுக்கு ஏதோ நடந்திருக்கிறது, அதைப்பற்றி விசாரிக்காமல். .’ அவன் குரல் போதையிலும் கோபத்திலும் அதிர்ந்தது.
அவர் அவனை ஏற இறங்கப் பார்த்தார். ‘நான் பிரயாணிகளின் துன்பத்திற்குக் கட்டாயம் உதவி செய்வேன்.ஆனால். .’ அவர் அவனை ஏற இறங்கப் பார்த்தார்.
‘நிறையக் குடித்திருக்கிறாய் இல்லையா? அவர் குரல் பாசமுள்ள ஒர தந்தையை ஞாபகமூட்டியது;
‘ அதுக்கும் அவள் . .’அவன் முடிக்கவில்லை.
‘அவள் எப்படியிருந்தாள்?’ அவர் ஏதோ கேட்கவேண்டும் என்பதற்காகக் கேட்டாரோ என்னவோ அவர் குரலில் அசாதாரணமான அக்கறை தொனித்தததை அவன் அவதானித்தான்.
‘ ம் ம். .,அவளை அடையாளம் தெரியாதமாதிர் அவளின் ஓவர்கோர்ட்ஹ¬ட் அவளை தலையையும்; முகத்தையும் மறைத்திருந்தது.’அவன் தன்னால் முடியுமட்டும் அவரைக் கொண்டு எப்படியும் அந்தப் பெண்ணைப் பற்றியறியவேண்டும் என்ற துடிப்பிற் சொன்னான்.
‘ அவள் எப்படியிருப்பாள்,வெள்ளைப் பெண்ணா, கறுத்தப்பெண்ணா,இந்தியப் பெண்ணா. அல்லது சீனாப் பெண்ணா? அவர் அவனை நேரே பார்த்தபடி கேட்டார்.
‘அதுதான் சொன்னேன். எனக்கு அவளை அப்படி அடையாளம் காணமுடியாதவாறு மூடிக்கொண்டிருந்தாள்’ அவன் கோபத்தில் அதிர்ந்தான்.
அவர் அவனை ஏறிட்டுப் பார்த்துவிட்ட, உனக்கு அடையாளம் சொல்லவே முடியாத ஒரு பெண் ட்ரெயினில் விழுந்து இறந்து விட்டாள் என்கிறாய்’ என்று கேட்டார்.
அவன் ,’ஆமாம்’என்பதபோல் தலையாட்டினான்.
அவர் கொஞ்ச நேரம் பேசாமலிருந்து விட்டு,’சீக்கிரம் வீட்டுக்குப் போய் ஒரு நல்ல ஷவர் எடுத்துவிடடு நடந்தவற்றை ஆறுதலாக யோசித்துப்பார்’ அவர் எஸ்கலேட்டரை நோக்கி நடந்தார்.
‘அவளுக்கு என்ன நடந்தது என்ன என்ற தெரியாமல் நான் இந்த இடத்தை விட்ட அசையமாட்டேன்.’ அவன் இரைந்தான். நட்ட நடு இரவில் அவன் போட்ட சப்தம் பாதாளக் குகையில் எதிரொலித்தது.
போனவர் திரும்பி நின்று அவனை ஒருதரம் ஏறிட்டுப் பார்த்தார்.பிடிவாதம் பிடித்த ‘குடிகாரனுடன்’பேசிக் கொண்டிருக்க விருப்பமில்லை என்பதை எப்படிக் காட்டுவது? குகைவாயிலில் குந்தியிருந்துகொண்டு இரவெல்லாம் பிலாக்கணம் பாடப்போகிறானா?
‘சரி மேலே வா சி.சி.டிவியில் அவளுக்கு என்ன நடந்திருக்கும் என்ற பார்ப்போம்’ அவனின் பதிலைக் காத்திராமல் அவர் எஸ்கலேட்டரில் போய்க்கொண்டிருந்தார்.
அவனுக்கு வேறு வழியில்லாமல் அவனைத் தொடர்ந்தார்.
‘உனக்கு கேர்ல் பிரண்ட் இருக்கிறாளா?’ அவர் இவனைத் திரும்பிப் பார்க்காமல் மேலே போய்க் கொண்டிருந்தார்.
‘அது உனக்குத் தெரியவேண்டியதில்லை’ என்ற பட்டென்ற சொல்ல நினைத்தவன் மறுமொழி சொல்லாமற் சென்றான். அவர் திருப்பி அந்தக் கேள்வியைக் கேட்கவில்லை.
இரண்டு மாதங்களுக்கு முன்னால் வரையும் அவனது கேர்ல் பிரண்டாகவிருந்த ஆஞ்சலீனாவில் அவனுக்குக் கோபம் வந்தது.
‘போதைக் குழப்பத்தில் பேயும் பெண்ணும் ஒன்றாகத் தெரியும்;’ உத்தியோகஸ்தர் முணுமுணுத்தது அவனுக்குக் கேட்கவில்லை. கேட்டிருந்தால், ‘நான் பேய்களை நம்பாதவன்’ என்று கத்தியிருப்பான்.
ஆஞ்சலீனாவின் காதல் அவள் பிரிந்தபின்; அவனை வாட்டியெடுத்தது.அவள் அவனில் உள்ள கோபத்தில் இருமாதங்களாகப் பேசாமலிருக்கிறாள்.. அவனுக்கு அவள் அப்படிச் செய்வது ஒரு விதத்தில் ஆச்சரியமில்லை. அவர்கள் இருவரும் ஒருத்தரை ஒருத்தர்,இளவயதிலிருந்து தெரிந்தவர்கள்.இணைபிhயாமல் ஒன்றாகத் திரிந்தவர்கள்.இந்த வருடம் திருமணம் செய்வதாகத் திட்டமிருந்தவர்கள்.
அவர்களின் உறவு ஆரம்பித்து பல வருடகாலத்தின்பின்,ஆங்கிலப் பெண்ணான அவளை வரதன் திருமணம் செய்தால், ‘ஆற்றிலோ,குளத்திலே அல்லது தூக்கிலோ தொங்கிச் செத்துப்போவன்’ என்று அவனுடைய தாயார் மிரட்டியதைக் கண்டு அவன் நடுங்கி விட்டான்.
அவன் அவர்களின் குடும்பத்தில் ஒரே ஒரு மகன். இரண்டு பெண்களின் பின் அம்மாவுக்குக் கிடைத்த ஆசைமகன் என்று கொஞ்சிக் கொண்டிருந்தவள்.அவனில் பெரிய பாசம் அவளுக்கு. தனது தாய்,தன்னால் தற்கொலை செய்து கொள்வதை அவனாற் தாங்கமுடியாது.
அவன் அதை ஆஞ்சலீனாவுக்குச்; சொல்ல, ‘நீ என்னுடன் நெருங்கிப் பழகமுதல் உனது தாயின் அங்கிகாரம் கேட்டாயா’ என்று அவனைக் கிண்டலுடனும் ஆத்திரத்தடனும் கேட்டு விட்டுத் திட்டினாள். அவன் தனது தாயின் போக்கை மாற்றி அவர்களின் திருமணத்திற்கு ஒப்புதல் எடுப்பான் என்ற நம்பிக்கை ஆஞ்சலீனாவுக்கு அருகத் தொடங்கியதம் அவள் அவனைவிட்டுப் பிரிந்து விட்டாள்.
வரதன் இப்போது இந்த நடு இரவில்,ஆஞ்சலீனாவைப்; பற்றித் தொடர்ந்து சிந்திக்காமல் அவன் அவரைப் பின் தொடர்ந்தான்.
எஸ்கலேட்டரிலிருந்து மேலே வந்ததும், தனது அறையைத் திறந்து,சி.சி.டிவியின் நிகழ்ச்சிகளை,கடைசி ட்ரெயின் வந்த நேரத்திலிருந்து பார்க்கத் தொடங்கினார்கள். அவன் இறங்கிய பெட்டியிலிருந்து அவனைத் தவிர வேறு யாருமே இறங்கவில்லை.!
அவன் எஸ்கலேட்டரில் கால்வைத்த அடுத்த கணம். அடுத்தபக்கம் ஓடிப்போய் ஹெல்ப் என்று அலறியது அந்தக் காட்சியில் தெரிந்தது. யாரும் ட்ரெயினுக்கு முன் பாய்ந்து விழுந்த தடயம் எதுவுமில்லை.
அவர் எழுந்தார்.’நீ அளவுக்கு மீறிக் குடித்திருக்கிறாய. .அதனால் சில கற்பனைகளை விடயங்களை நிஜம் என நினைக்கிறாய். சீக்கிரம் வீட்டுக்குப் போய்ச்சேர். நான் இந்த ஸ்டேசனைப் பூட்டவேண்டும்;’ அவர் அவசரப்பட்டார்.
வீpட்டுக்கு வந்ததும், இதுவரை நடந்தது வெறும் பிரமையா என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டான்.
நேரம், இரண்டு மணியைத் தாண்டிவிட்டது. போதையில் விழுந்து உலகை மறக்கவேண்டும் என்ற நினைத்தவனுக்கு, ட்ரெயினில் கண்ட பெண்ணால் மனம் குழம்பி விட்டது.
இன்று வரதன் அளவுக்கு மீறிக் குடித்தற்கு அவனின் நண்பனின் பேர்த் டேய் மட்டும் காரணமல்ல என்பது வரதனுக்குத் தெரியும். நண்பனின் பிறந்த தினத்திற்கு அடுத்த நாள்- அதாவது இன்னும் சில மணித்தியாலங்களில் மணித்தியாலங்களில்; ஆஞ்சலீனாவின் பிறந்த தினம்(நேரம்) வரப்போகிறது.
ஆதவன் உதித்த புனித நேரத்தில் பூமியில் பிறந்த தேவைதையான அவளுக்கு அவளின் பாட்டியார் ஆஞ்சலீனா என்று பெயர் வைத்ததாக ஆஞ்சலீனா வரதனுக்குச் சொல்லியிருந்தாள்.அவளைப் பிரிந்து சில மாங்களாகி விட்டன.அவளுடன் பேசவேண்டும் என்று போன்பண்ணியபோதெல்லாம் அவள் அவனைக் ‘கட்’ பண்ணிவிடுவதால் அவனக்கு ஆத்திரமும் அதே நேரத்தில் அவள் தன்னில் ஆத்திரம் கொள்ளக்காரணம் இருப்பதாகவும் நினைத்துக் கொள்வான்.
அவளைக் காதலித்துக் கைவிட்ட கயவனாக, தாய்க்குப் பயந்த கோழையாக,அவளின் காதலை மதிக்கத் தெரியாத சுயநலக்காரனாக,வரதன் இருக்கிறான் என்று ஆஞ்சலீனா அவனை வைது கொட்டினாலும் அவன் ஆச்சரியப்பட மாட்டான்.
அவளிடமிருந்து தன்னைப் பிரித்து வைத்திருக்கும் தாயின் மிரட்டலை யோசித்துப் பார்த்தான்.இப்போது அம்மா, அவனது சகோதரி வீட்டுக்கு விருந்து சாப்பிடப் போகவில்லை,அவனுக்குக் கல்யாணம் பேசப் போயிருக்கிறாள் என்ற அவனுக்குத் தெரியும்.அவனிடம் அம்மா அதுபற்றி ஒன்றும் விரிவாகச் சொல்லவில்லை. ‘உனக்கு பொருத்தமான பெண்பார்க்கப் போகிறோம் ‘என்றாள்
அவனுக்கு என்ன விதத்தில் அம்மா பொருத்தம் பார்க்கப் போகிறாள்?
அந்த ஆத்திரம், ஆஞ்சலீனா தன்னுடன் தொடர்பு கொள்ளாமலிருப்பது எல்லாம் சேர்ந்துதான் அவன் இன்று(நேற்று?) கண்டபாட்டுக்குக் குடித்தான்.
அவன் ஸ்டேஸனில் கண்ட உத்தியோகத்தர் சொன்னமாதிரி,போதையைக் குறைப்பதற்குக் கிட்டத்தட்ட குளிர் நீரில் ஒரு ஷவர் எடுத்தான்.
படுக்கையில் வீழ்ந்ததும்,பல யோசனைகள் வந்தன. சாடையான நித்திரையில் சோர்ந்து போய்க் கொண்டிருக்கும்போது, ட்;ரெயினில் கண்ட பெண் தனது படுக்கையறையிலேயே தன்னைப் பார்த்துக் கொண்டு போலிருந்தது. அதிலும் அவள் ஆஞ்சலீனா போலிருந்தது. ஆஞ்சலீனாவின் அழகிய முகமல்ல, வெளுத்துப்போன ஒரு உயிரற்ற முகம்! அவனின் கற்பனைiயா, நித்திரை மயக்கமா, அல்லது இன்னுமிருக்கும் போதையின் மயக்கமா எனறு அவனுக்குத் தெரியாது.
பயத்துடன் அலறிப் புடைத்துக் கொண்டு பட்டென்று எழும்பியுட்கார்ந்தான்.ட்ரெயினில் அவளைக் கண்டது ஒரு போதை மயக்கத்தில் என்று சொன்னாலும் இப்போது காணுவது என்ன?
காதல் தோல்வியில் ஆஞ்சலீனா ட்ரெயினுக்கு முன் வீழ்ந்து தற்கொலை செய்யப்போகிறாள் என்று ஏதோ ஒரு சக்தி எனக்கு முன்னெச்செரிக்கை செய்கிறதா, அவன் மிகவும் குழம்பிப் போனான். ‘ அவனுடைய தாய் மாதிரி,தற்கொலை செய்து சாகப்போகிறேன்’ என்ற மிரட்டுபவர்கள் பலர் செத்துத் தொலைப்பதில்லை என்று அவனுக்குத் தெரியும். எதையும் மனதுக்குள் வைத்துக் குமுறிக் கொண்டிருப்பவர்கள்தான் சட்டென்று எடுத்த முடிவில் இறப்பை அணுகுவார்கள் என்று படித்திருக்கிறான்.
ஆஞ்சலீனா அப்படி ஏதும் செய்வாளா? நாளைக்கு -இல்லை இன்னும் கொஞ்ச நேரத்தில் அவளுக்குப் பிறந்த தினம் வரப்போகிறது.கடந்த ஐந்து வருடங்களும் அவளின் பிறந்த தினத்தை அவனுடன் கொண்டாடியவள் இன்று அவனில்லை என்ற தாபத்தில்-ஆத்திரத்தில் எங்கேயாவது ட்ரெயினுக்கு முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொள்வாளா,
அவளது இருபத்தியோராவது பிறந்த தினத்தன்று முதற்தரம், அவர்களின் யுனிவாசிட்டி ஹாஸ்டலில் அவள் தங்கியிருந்த அறையில் அவர்கள் காதல் புரிந்தார்கள். அவளின் இருபத்தியோராவது பிறந்த தினத்தை அவர்களின் சினேகிதர்களுடன்,பிரமாதமாகக் கொண்டாடஅவன்; திட்டம் போட்டிருந்தான். அதைச் சொல்ல அவளது அறைக்குப் போனபோது,’hயிpல டிசைவானயல’ சொல்லி ஆரம்பித்த இறுகிய அணைப்புடன் அவர்களின் சல்லாபம் எங்கேயோ போய்முடிந்து விட்டது.
‘தாங்க் யு போர் த லவ்லி பேர்த்டேய் பிரசென்ட்’ அவள் முகம் சிவக்கச் சொன்னாள்.
அதைத் தொடர்ந்த அவர்களின் கடந்த ஐந்து வருட அழகிய உறவின் இனிய ஞாபகங்கள் அவனை வதைத்தன.
அவளின் அடுத்த பிறந்த தினத்தைக் காதலர்களின் நகரமான பாரிஸில் கொண்டாடினார்கள். அதன்பின் வெனிஸ் நகரக்கால்வாயின்; காதல் படகில் தேவலோகத்துப் பிரயாணம் செய்தார்கள் அதன்பின் அவனுக்குப் பிடித்த ஸ்காட்லாந்து- எடின்பரோ நகர் அவளின் பிறந்த தினத்தையம் அவர்களின் காதலையும் வாழ்த்தியது.
போன வருடம்,அவளின் இருபத்தைந்தாவதுவயதை.இங்கிலாந்தின் அழகிய பரதேசங்களில் ஒன்றெனச் சொல்லப் படும் டோர்செட் பிராந்தியத்திலுள்ள அவளுக்குப் பிடித்த சிறு கிராமத்தில் அவளின்;; பாட்டியின் வீட்டில் பிறந்ததின வாழ்த்தும் அவர்களின் எதிர்கால வாழ்த்தும் கிடைத்தன. இந்த வருடத்தின்பின் அவர்கள் தங்கள் திருமணம் பற்றித் தங்கள் பெற்றோர்களக்குச் சொல்வதாக இருந்தார்கள். அவள் அவளது குடும்பத்தில ஒருபெண். முற்போக்கான தாய் தந்தையர் இருவரும் ஆசிரியர்கள். மகளின் எதிர்காலத்தை அவள் மிகவம் கவனமாகத் தெரிவு செய்வாள் என்பதைப் புரிந்து கொண்டவர்கள்
அவன் தனது தாய்க்கு ஆஞ்சலீனாவைத் தான் திருமணம் செய்யவிரும்புவதாகச் சொன்னபோது,அவனது தாய் போட்ட கூக்குரல்களும், தற்கொலை செய்வேன் என்ற பயமுறுத்தலும் அவளைக் குழப்பிவிட்டன.
எத்தனையோ பல சிந்தனைகள்,நீண்ட நேரமாக அவனை நித்திரையைக்; குழப்பியது.
அவளும் அவற்றை இப்போது நினைத்து நித்திரையின்றிக் குழம்பிக்கொண்டிருப்பாளா?
பிறந்த தினங்கள் மனிதரின் மனதில் பலவித சிந்தனைகளையும் துண்டிவிடுபவை. அவளும் அப்படித்தானே இருப்பாள்?
வரதனின் நித்திரை பறந்தது. ஆஞ்சலீனா அவன் மனதைக் குழப்பினாள்.அவனுடை அன்பு. அணைப்பு. இனி ஒருநாளும் கிடைக்காது எனறு நிச்சயமாகத் தெரிந்ததம் அவள் என்ன செய்வாள்.? தாங்காத துயரில், கறுப்பு ஒவர்க்கோர்ட்டில் தன்னை மறைத்துக்கொண்டு ஏதோ ஒரு கடைசி ட்ரெயினுக்கு முன்னால் பாய்ந்து விழுந்து. ..
.அவனால் மேற் கொண்டு யோசிக்க முடியவில்லை.
அவனக்கு உடம்பு நடுங்கியது.; இனித் தயங்கக் கூடாது, ‘நான் உன்னைக் காதலித்து எமாற்றிய கயவனல்ல. அம்மாவின் மிரட்டல்களுக்குப் பயப்படமாட்டேன்,பிளிஸ் என்னிடம் திரும்பி வா’ என்று அவளிடம் கெஞ்சவேண்டும்.அவள் திட்டுவதைப் பொறுத்துக் கொள்ளவேண்டும்.
அவன் போதை வெறியிலும்,அவள் தற்கொலை செய்வாளோ என்ற பயத்திலும் நடுங்கியபடி அவளின் டெலிபோனை நம்பரை அழுத்தினான். பல தடவைகள் டெலிபோன் அடித்தபின், ஆஞ்சலினாவின்’ ஹலோ’ குரல் நித்திரையில் முனகியது.
அவன்,’ ஹலோ ஆஞ்சலீனா டார்லிங்’ என்று அவளுக்குச் சொன்னதைத் தொடர்ந்து,போதையின் குழப்பத்தால் அழத்தொடங்கிவிட்டான்.
‘ கடவுளே உனக்கு என்ன நடந்தது’ அவன் அழுகையைக் கேட்டதும்,அவள் பதறுவது அவனுக்கு ஒருவிதத்தில் ஆறுதலாகவிருந்தது. அவனின் குரல் கேட்டதும் அவள் பட்டென்று டெலிபோனை வைக்காமல், அவள் அக்கறையடன் அலறியது சந்தோசமாக-ஒருவிதத்தில் பெருமையாகவுமிருந்தது.
‘ஐ லவ் யு ஆஞ்சலினா. . .ஹப்பி பேர்த் டேய் மை.டார்லிங்’ அவளின் குரல் கேட்ட உணர்ச்சிப் பரவசத்தில்,அவளை அணைப்பதாக நினைத்தக் கொண்டு.அவன் கிட்டத்தட்ட கட்டிலால் வீழந்து விட்டான்.அடுத்த பக்கத்திலிருந்து பதிலில்லை.
இவன் இரவு இவ்வளவு நேரம் விழித்திருந்து(??) தனது பேர்த்டேய்க்கு விஷ் பண்ணுவது அவளை நெகிழப் பண்ணியிருக்கும் என்று தெரியும்.
‘என்னில் உள்ள ஆத்திரத்தில் ட்ரெயினுக்கு முன் பாய்ந்து தற்கொலை செய்யமாட்டாயே’அவன் போதையில் புலம்பினான்.
‘என்ன அலட்டுகிறாய், தற்கொலை பற்றி உன்னை மிரட்டுவது உனது அம்மாவின் பொழுதுபோக்கு,,எனக்கு நாளைக்கு- இல்லை இப்போது,இன்னும் கொஞ்ச நேரத்தில் இருபத்தி ஆறவயது வரப்போகிறது, நீண்ட காலம் வாழ விருப்பம். . முடிந்தால் உன்னுடன் வாழ விருப்பம். இல்லையென்றாலும் செத்துத் தொலைக்க மாட்டேன்’ அவள் குரலில் அழுத்தம். அவள் கோபத்தில் இரைந்தாள்.ஆஞ்சலினா மிகவும் உறுதியான பெண்,தற்கொலை செய்து கொள்ள மாட்டாள் என்று அவனுக்குத் தெரியும்.
லாஸ்ட் ட்ரெயினில் கண்ட பெண்ணால் வந்த குழப்பத்தில் ஆஞ்சலீனாவுடன் உறவு இப்போது தொடர்வது அவனுக்குச் சந்தோசமாகவிருந்தது. எவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள் என்று தெரியாது. அவள் படிப்படியாக இறங்கி வந்து,’ வரதன் டார்லிங் ஐ மிஸ் யு சோ மச்’ என்று புலம்பியதும் அவன் ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தான்.
‘ ஆஞ்சலீனா டார்லிங் நான் அங்கு .வரட்டுமா?’
‘இந்த நேரத்திலா?அவளின் ஆச்சரியம் குரலில் வெடித்தது.அவள் குரலில் இப்போது கோபம் ஒரு துளியும் இல்லை.
‘உனக்குப் பேர்த் டேய் பிரசென்ட தரணுமே’ அவன் காதல் போதையில் முனகினான்.
. . . . . . . . . . . . . . .
லாஸ்ட் ட்ரெயினில் குடிவெறியில் வந்த வரதன் செய்த கூத்தால்,அந்த ஸ்டேசன் உத்தியோகத்தரின் வேலை முடியத் தாமதமாகிவிட்டது.அவன் சொன்ன விடயத்தையிட்டு அவர் அச்சரியப் படவில்லை. அவர் இந்த ஸ்டேசனுக்கு பத்து வருடங்களுக்கு முன் வேலைக்கு வந்த போது. அப்போது நைட் டியுட்டியிலிருந்த செக்கியுறிட்டி ஆபிசர் சொன்ன கதையும் அதைத் தொடர்ந்த கடந்த பத்து வருடகாலத்தில் அவர் அங்கு கடைசி ட்ரெயினில வந்த பிரயாணிகளிடமிருந்து கேட்ட ‘அமானுஷ்ய’மான அனுபவங்களும் அவருக்குத் தெரியும்.
வரதன் கண்டது வெறும் மாயத் தோற்றமல்ல என்று அவருக்குத் தெரியும். அவனைப் போல சிலர் – பெரும்பாலும் லாஸ்ட் ட்ரெயினில் வருபவர்கள் வரதன் சொன்னமாதிரியான ஒரு பெண் உருவத்தைக் கண்டதாகச் சொல்லியிருக்கிறார்கள்.ஆனால் இதுவரை ஒருத்தரும், அவள் தனக்கு முன்னால்ஒரு பெண்ணுருவம் வந்திருந்ததாகச்; சொல்லவில்லை. லண்டனிலிருந்து வரும் லாஸ்ட் ட்ரெயினில் வந்து ,அதற்கு அடுத்த எதிர்ப்பக்கத்துக்குப் போய், பாதாள வாயில் ஆரம்பிக்குமிடத்தில் நின்று அழுத பெண், அல்லது,ட்ரெயினுக்கு முன் பாய்ந்த பெண் என்று பல கதைகளைப் பிரயாணிகளிடமிருந்து கேட்டிருக்கிறார். கிட்டத்தட்ட அத்தனைபேரும் அவள்,1980;ம் ஆண்டுக்கால கறுப்புக்கோர்ட்டுன்- தலையைமறைத்த ஹ¬ட்டுடன் வந்ததாகத்தான் சொல்லியிருக்கிறாள்.
அவளைக் (அல்லது பெண்போன்ற ஒரு ஆவியை) கண்ட இளைஞர்களின் அனுபவங்களுக்குப் பின்னாலுள்ள சோக சரித்திரத்தை அவர் யாரிடமும் சொன்னது கிடையாது.
அவரின் முன்னாளைய உத்தியோகஸ்தரின் வாக்குப்படி,சரியாக, இன்றைக்கு இருபத்தியாறு வருடங்களுக்கு முன் காதலனால் கைவிடப்பட்ட ஒரு ஆங்கிலேய இளம் பெண்,இந்த ஸ்டேசனில்,லாஸ்ட் ட்ரெயினுக்கு முன்னால் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாள் என்ற செய்தி பத்திரிகைகளில் வந்த சரித்திரம் பலருக்குத் தெரியாது.. ஆனால் அவள் ஏன், ஒரு சில ஆண்களுக்கு அதுவும் இளம் ஆண்களுக்கு முன் தோற்றம் தருகிறாள் என்று அவருக்குத் தெரியாது. அந்த ஆண்கள் தங்களைக் காதலித்த பெண்களை ஏமாற்றியவர்களா, அவர்களைப் பயமுறுத்த அந்தப் பெண்ணின் ஆவி அலைகிறதா என்றெல்லாம் அவருக்குத் தெரியாது.
அதை அவர், லாஸ்ட் ட்ரெயினில் ஒரு பெண்ணுருவத்தைக் கண்டோம் என்று பயந்தடித்த எந்த இளைஞர்களிடமாவது கேட்கமுடியாது.’பேய்க்கதை பேசினால்’ அவர் வேலையைப் பறித்துவிடுவார்கள்.
ஓ. .அன்று இறந்து விட்ட பெண் !- இருபத்தியாறு வருடங்களுக்கு முன்,இந்த ஸ்டேசனுக்குப் பக்கத்துப் பல்கலைக்கழகத்தில் படித்த மாணவி.!
அவர்.வேலையை முடித்துவிட்டு, ஸ்டேசனின் பிரமாண்டமான இரும்புக் கதவுளை இழுத்து மூடினார்.
அந்த நேரம் வரதன் இருபத்தியாறு வயது வந்த ஆஞ்சலீனாவுடன் காதல் புரிந்துகொண்டிருந்தான்.
(யாவும் கற்பனையே)