அமானுஷ்ய மாற்றம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அமானுஷம்
கதைப்பதிவு: April 28, 2021
பார்வையிட்டோர்: 52,688 
 
 

சுகந்தியின் தங்கைக்கு திருமணம். ஒரு வாரத்திற்கு முன்பே வருமாறு அவள் அம்மா கூறிவிட்டாள். சுகந்தி தன் இரு பெண் குழந்தைகளையும் கிளப்பிக் கொண்டு ஊருக்கு தயாரானாள்.

தயாளன் தனது காரில் அவர்களை ஏற்றி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வழியனுப்பி வைத்தான். அவர்கள் ரயில் ஏறியதும் மிக பாசமாய் “மிஸ் யூ சுகந்தி” ஒரு வாரம் எப்படி இருக்க போறேனோ என்று செவலியர் சிவாஜி கணேசன் அளவிற்கு நடித்தான்.

ரயில் கிளம்பிய அடுத்த நொடி “ஹய்யா… என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா… ” என்ற தொனியில் மொபைலை எடுத்தான். ஸ்வேதாவை அழைத்தான்.

“சார்.. சொல்லுங்க சார்..”

“ஸ்வேதா.. எனக்கொரு ஹெல்ப் வேணும். புதுசா நாம யூஸ் பண்ற சர்வர்ல எனக்கு ட்ரபுள் ஷூட்டிங் பண்ண தெரியல. உனக்கு ஆட்சேபனை இல்லன்னா என் வீட்டுக்கு வரமுடியுமா. ஜூம் கால் எனக்கு அவ்ளோ சரிப்பட்டு வரல.. ”

“உங்க வீட்டுக்கா சார்.. ” தயங்கினாள்.

“பயப்படாத மா.. வீட்ல வொய்ஃப் என்னோட இரண்டு பொண்ணுங்களும் இருக்காங்க. தைரியமா வரலாம்…”

“ஹோ.. ஒகே சார். லைவ் லொகேஷன் ஷேர் பண்ணுங்க நான் வரேன்.. ”

“நோ…நோ.. நைட்ல பெண்கள் தனியா வர்றது சேஃப்டி இல்ல. நான் வந்து கூப்பிட்டு போறேன்.. ”

“ஓகே சார்.. நான் ரெடியாயிடுறேன்…”

“சரிம்மா.. உங்க உதவிக்கு ரொம்ப நன்றி. நேர்ல பாக்கலாம்.. ”

காரை எடுத்து புறப்பட்டான் தயாளன். இன்னிக்கு ஸ்வேதாவை எப்படியும்…. என்று நினைத்தவாறு. அவன் ட்ரைவர் சீட்டில் அமர்ந்து கதவை மூடினான். எதிர்புறமாக கதவு தன்னால் திறந்து மூடியது. ஒரு அரூபம் உள்ளே வந்து அமர்ந்து கொண்டது. அவனால் அதை உணர முடிந்தது. பயந்து விட்டான்.

“யா… யாரு.. “குரல் தழுதழுத்தது. அருகிலிருந்த சாய் பாபா புகைப்படத்தை கையில் வைத்துக் கொண்டான்.

“நான் ஒரு அதிசய அமானுஷ்யம். என் பேரு ராஜி. எதையும் மாற்றிவிடும் சக்தி எனக்கு இருக்கு. நான் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன். இன்னிக்கு நான் உன் கூட இருப்பேன். ஸ்வேதாவிற்கு கால் பண்ணி இன்னிக்கு வரவேண்டாம் என்று சொல்லிடு… ”

“என்னது அதிசய அமானுஷ்யமா.. அப்படின்னா ஆவியா.. ” பயத்தில் வியர்த்தது அவனுக்கு.

“ஆமா.. ஒரு காம வெறியன் கிட்ட நான் ஏமாந்துட்டேன். தற்கொலை பண்ணி இப்போ ஆவியா சுத்திட்டு இருக்கேன். என்னை உன்னால பார்க்க முடியாது. ஆனா தொட்டு உணர முடியும். என்னால எதையும் மாற்ற முடியும்… ” மீண்டும் ஆணித்தரமாக சொன்னது அந்த அரூபம்.

கைகள் நடுங்கியவாறே தொட்டுப்பார்த்தான். அவளது இடையில் உள்ள வளைவு சுளிவு உணர்ந்தான். நல்ல வாளிப்பான உடல் தான். “அப்போ இன்னிக்கு ஸ்வேதா கேன்சல்.. இவள பாத்துக்கலாம்..” மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

“என்னோட கார் சின்னதா இருக்கு. இதை உன்னால் ஃபார்ச்சுனர் காரா மாற்ற முடியுமா?”

“கண்ணை மூடு”

அரூபம் தன் விரல்களை சுழற்றி ஒரு தடவை சொடுக்கியது.

“கண்ணைத் திற”

அவனுடைய கார் அவன் விரும்பிய ஃபார்ச்சுனர் காராக மாறியிருந்தது. “வாவ்.. உனக்கு ஏதோ சூப்பர் பவர் இருக்கு..” பூரித்து போனான்.

ஸ்வேதாவிற்கு கால் செய்து வேறொரு முக்கிய பணி உள்ளதால் இன்று வரவேண்டாம் என்று கூறிவிட்டான்.

வீட்டிற்கு சென்றதும் எதையெல்லாம் மாற்ற வேண்டும் என்று கணக்கிட்டுக் கொண்டே காரை ஓட்டிச் சென்றான்.

கார் வீட்டிற்கு சென்றது.

அவனும் அந்த அரூபமும் இறங்கினார்கள்.

மீண்டும் ஒரு முறை அவன் தொட்டுப்பார்த்தான். “எல்லாம் உள்ள போய் பாத்துக்கலாம் வா… ”

“பார்றா…பேயா இருந்தாலும் பெண் அல்லவா. அதான் வெட்கம் போல.. ”

ராஜி சிரித்தாள். மிக அழகான சிரிப்பு. குழி விழும் கன்னம். சிவந்த உதடுகள். மான் போன்ற விழிகள். கச்சிதமான உடலமைப்பு. பெண்களே பொறாமை கொள்ளும் பேரழகி.

நேரே சென்று ஃப்ரிட்ஜை திறந்தாள். தனக்கு ஸ்ப்ரைட்டும் அவனுக்கு ஸ்காட்ச்சும் எடுத்து வந்தாள்.

“ஹேய்.. நீ சரக்கெல்லாம் அடிப்பியா…”

“பழக்கம் இல்ல. இது உனக்கு தான்”

கோப்பையில் ஊற்றிக் கொடுத்தாள். அவன் குடித்தான். இரண்டு ரவுண்ட் முடிந்தது. அரூபத்தை ஊறுகாய் போல அவ்வப்போது தொட்டுக் கொண்டான்.

“இன்னும் டைம் இருக்கு…” அவன் கையை தள்ளிவிட்டாள் ராஜீ. மூன்றாவது ரவுண்ட் முடிந்தது.

“ஸ்வேதா எத்தனையாவது….?”

“நான் அதெல்லாம் கணக்கே வச்சிக்குறது இல்ல…. நிறைய.. நிறைய.. லிஸ்ட் பெரியது…”

நான்காவது ரவுண்ட் முடிந்தது.

“இப்படி பெண்களை ஏமாற்றி உன் மோகத்தை தீர்த்துக் கொள்வது தப்பில்லையா? உன்னை நம்பி இருக்கும் சுகந்தி இப்படி செய்தாள் ஏற்றுக்கொள்வாயா? உன் இரண்டு பெண் பிள்ளைகளை எவனாவது இப்படி செய்தால் நீ சும்மா விடுவாயா..? இந்தா குடி… ”

ஐந்தாம் ரவுண்ட் முடிந்தது.

“மென் வில் பி மென். ஒரு ஆம்பிள கூப்பிட்டா அவனா நம்பி போறது பொண்ணுங்க தப்பு. நான் யாரையும் பலவந்த படுத்தல. அவங்க விருப்பத்தோட தான் நான்ன்ன்…….. ”

போதை தலைக்கு ஏறி மயங்கி மெத்தை மீது சாய்ந்தான்.

அதுவரை பொறுமை காத்த அரூபம், தனது அதிசய சக்தியை கொண்டு அவனை உடல் அளவில் பெண்ணாகவும் மனதளவில் ஆணாகவும் மாற்றியது.

பசி அதிகம் இருந்ததால் அவன் வாங்கி வைத்திருந்த சகல சைட் டிஷ்களையும் தின்று தீர்த்தது. தாகம் தீர ஸ்ப்ரைட்டை குடித்தது.

“இன்று ஸ்வேதாவை காப்பாற்றினேன். அன்று என்னை காபாற்றிக் கொள்ள முடியவில்லை. லிஸ்ட் பெரியதா… நாளை நீ எவன் லிஸ்டில் இருக்க போகிறாய் என்று பார்க்கிறேன்..”

அரூபம் வெளியே சென்றது. ஊரெல்லாம் தயாளன் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை ஒட்டிவிட்டு சென்றது.

பொழுது விடிந்தது. பெரும் தலைவலியுடன் தயாளன் எழுந்தாள்.

மீசை கொட்டிக் கிடந்தது. நீளமான அழகிய தலைமுடி. கனக்கச்சிதமான எட்டு வடிவத்தில் உடலமைப்பு. அங்க அவையங்களும் அதற்கேற்றாற் போல அமைந்திருந்தது.

அதிர்ந்து ஆடிப்போனாள் தயாளன். “அய்யய்யோ என்ன இது கொடுமை.. உடலளவில் பெண்ணாய். மனதளவில் ஆணாய் எப்படி இருக்கப் போகிறேன்.. என்னை நான் பாதுகாக்கவே அதிக சிரத்தை எடுக்க வேண்டும் போலவே” தனக்குள் பேசிக் கொண்டான்.

“எதையும் மாற்றும் சக்தி கொண்டவள் னு அந்த பேய் அழுத்தமாக சொல்லியது.. ஆனா இப்படி மாற்றிவிடும் என்று எதிர்பார்க்கலியே.. எத்தனை பெண்களை நான் ஏமாற்றினேன். இன்று நான் ஒரு பேயிடம் ஏமாறிவிட்டேன். எத்தனை பெண்கள் அழுது புலம்பி கதறியிருப்பார்களோ… பாவம்… ” கண்ணாடியில் தன்னைப் பார்த்து தன் மனசாட்சியிடம் பேசினான்.

அவன்(ள்) போகும் இடமெல்லாம் அந்த அரூபம் ஆணாய் வந்து அவனை சீண்டி சந்தோஷமடைந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *