கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: December 2016

100 கதைகள் கிடைத்துள்ளன.

பந்தயம்

 

 “அந்த தெரு கடைக்கோடியில்  உள்ள ஒரு குட்டிச்சுவரில் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள் பதின்மவயது பையன்கள். அந்த ஆறு பேர்களில் முத்துமாணிக்கமும்  இருந்தான். “இன்னைக்கு மழை வரமாதிரி இருக்குடா” என்றான் “மழை வராதுடா….இது பாலுவின் பதில்… அந்த கூட்டத்தில்  இருவருமே எதிரெதினாவர்கள். முத்துமாணிக்கம் பாசீட்டீவ்வா சொன்னால், அதை நெகட்டீவ்வா சொல்றதும், செய்யறுதும்தான் பாலுவின் வாடிக்கை ஒரு சில நேரங்களில் பேச்சு பேச்சாக இல்லாமல் கைகலப்பாகி விடும். அந்த நேரத்தில் சமாதானப்படுத்தி வைப்பதற்குள்;  நண்பர்களுக்கு. மூச்சிரைக்கும். பாலுவை எப்படி


மாநகரப் பேருந்துப் பயணம்

 

 கோயம்பேடு சத்திரம் பேருந்து நிறுத்தம் எப்போதும் போல் அன்றும் பரபரப்பாக இருந்தது. அங்கே எதிரே கட்சி அலுவலகத்தில் யாரோ ஐந்தாறு ஆட்கள் வெய்யிலில் வண்ணக் குடை பிடித்தபடி வீடியோ படம் பிடிக்க ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்தனர். விதவிதமான வண்ணக் கொடிகள் கட்டிய கார்களில் அரசியல் பிரமுகர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். எதிர் வாடையில் நின்று இவற்றை வேடிக்கை பார்த்தபடி 46 எண் மாநகரப் பேருந்திற்காக காத்திருப்பது அந்த வெய்யில் நேரத்தில் அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை. டீக்கடை நிழலில்


மாண்புமிகு மதிப்பெண்

 

 “”நான் ஏன் நீங்க எதிர் பார்க்கிற மார்க்கை எடுத்தாக வேணும்….?” – புனிதாவுக்கு யாரிடமாவது இதைக் கேட்க வேண்டும் போல இருந்தது. நேற்று வரைக்கும் “”ஹாய் புனிதா…. எப்படி இருக்கே…..?” அலைபேசியில், குறுந்தகவலில், கட்செவியில், முகநூலில் நலம் விசாரித்தவர்களெல்லாம், “”புனிதா…. எப்டிடி எக்சாம் எழுதிருக்கே…?” எனக் கேட்கையில், “பிகே’ வேற்றுக்கிரகவாசி நானோ? என ஒரு முறை கிள்ளிப் பார்த்துக் கொள்ளணும் போல இருக்கிறது. பதின்மம் வயதை உதைத்து விளையாடும் இந்த எக்ஸாம் சிஸ்டத்தைக் கண்டுபிடித்தவர் யாரென கூகுளில்


கானல் நீர்

 

 நான் உங்களுக்கு ஒரு கதை சொல்லப்போறேன். நான் யாரு? கதை சொல்றவன்னு வச்சுக்கோங்க. அப்ப நீயும் இதக் கதைல வரியான்னு நீங்க கேட்டா இல்லைங்கறது தான் என் பதில். நான் கதாபாத்திரம் இல்லை ஜஸ்ட் எ ஸ்டோரி டெல்லர். இந்தக் கதைல ரொம்ப முக்கியமான பாத்திரம் நம்ம மனோகர். அவனுக்கு வயசு பதினாறு. அடிக்கடி கலையாத தலைமுடிய சரி பண்ணிக்கொள்ளும் இளைய தலைமுறை. அவனோட சேர்ந்து இன்னும் ஒரு நாலு பாத்திரங்கள். அவனோட பிரெண்ட் ரமேஷ், அவன்


ஒரு வாய் சோறு

 

 பகல்! சூரியன் உச்சியில் இருந்தான், அன்று சந்தை! கூட்டமாய் இருந்தது, அது நகரமும் இல்லாமல் கிராமமும் இல்லாமல் நடுத்தரமாய் இருக்கும் ஊர், அதனால் நகரத்தாரும், கிராமத்தாரும் கலந்து காணப்பட்டனர், ஆடு மாடுகள் கூட விற்பனைக்கு வந்ததால்,அதை வாங்க வருவோரும் விற்க வருவோரும் கூட்டம் கூட்டமாய் காணப்பட்டனர். காய்கறிக்கடைகள் ஒரு பக்கமும், கலர் கலரா துணிகள் ஒரு பக்கமும், தட்டு முட்டு பாத்திரங்கள் ஒரு பக்கமும், குழந்தைகள் வாங்கற சாமான்கள் ஒரு பக்கமும், ஒரு சந்தைக்குரிய எல்லா அம்சங்களும்