Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 6, 2015

10 கதைகள் கிடைத்துள்ளன.

சங்கீத சௌபாக்யமே!

 

 கூட்டம் நெரிந்தது. கோலாகலமான டிசம்பர் சங்கீத சீஸன்! எல்லா சபாக்களிலும் மத்யான நேர கச்சேரி மேடைகள் வளரும் இசைக் கலைஞ்ர்களுக்கென்றே பிரத்யேகமாக. முதல் கச்சேரிக்கு வந்த கும்பல் அப்படியே அடுத்த கச்சேரிக்கும் அமர்ந்து விட்டது. அடுத்த கச்சேரிக்கு, அந்த பிரபலமாகி வரும் இளம் பாடகியின் பாட்டைக் கேட்க என்றே பிரத்யேகமாக வந்தவர்கள் அப்படியே வரிசையாக நிற்க வேண்டியதாயிற்று. சங்கீத விமர்சகர்கள் தங்களுக்கென்று ஒதுக்கப் பட்டிருந்த முன் வரிசையில் நோட்டுப் புத்தகமும் பேனாவுமாக அமர, உட்கார இடம் கிடைக்காத


மேகங்கள் கலைந்தபோது…

 

 கேண்டினிலிருந்து வெளியே வந்தபோதுதான் நரசிம்மன் கணேசனை பார்த்தான். வழக்கத்திற்கு விரோதமான அவன் வேகமும் தன்னைக் கண்டுபிடிப்பதில் காட்டிய அவசரமும் அவன் சாதாரணமாக வரவில்லை என்பதை உணர்த்த நரசிம்மன் குழம்பினான். ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்த அப்பாவின் நினைவு வந்தது. காலையில் பார்த்தபோதுகூட நன்றாகத்தானே பேசினார். இன்னும் இரண்டு நாளில் வீட்டிற்கு அழைத்து போகவில்லையென்றால் தானாகப் புறப்பட்டு வந்துவிடுவேன் என்றாரே… ஒருவேளை இரண்டு நாட்கள் கூட பொறுக்க முடியாத அவசரத்தில் புறப்பட்டு வந்து ஏதாவது ஆகி இருக்குமோ? என்ன? ஏது? என்பது


எனக்கொரு காதலி இருந்தாள்(ல்) !!??

 

 என்ன சுத்தி இருக்குறவங்க எல்லாருமே லவ் பண்றாங்க. அதெப்படி நான் மட்டும் சிங்கிளா இருக்கேன். நம்மக்குன்னு யாராவது இருந்தா நல்லாத்தான இருக்கும். இதுக்காக விளம்பரமா கொடுக்க முடியும்? இரவு வீட்டுக்கு போக பேருந்தில் உட்காந்திருக்கும் போது தான் இப்படி யோசனை. எனக்கும் ஒரு காதலி இருந்தால் இப்படி இருக்கும். சும்மா ஒரு கற்பனை செய்து பார்க்கலாமே, இன்னும் வீடு போய் சேரத்தான் ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகுமே என்று பேருந்தின் ஜன்னலில் சாய்ந்தபடி கனவுகளின் அடுக்குகளில்


அந்த பல்லி என்னையே பார்க்கிறது!

 

 “இங்க பாருங்க முகில், பல்லிய பார்த்து பயப்படறதெல்லாம் ஒரு ப்ராப்ளம் இல்ல… எனக்கும் கூட பல்லினாபயம்தான் ” இப்படிக் சொன்ன சைக்காலஜிஸ்ட் பரிமளாவிற்கு, இருபத்தி சொச்சம் வயதிருக்கும். காலை நேர வெயில் ஜன்னல்வழி ஊடுருவி அவளை வெண்ணிற காட்டன் சேலையில் தேவதை போல் ஜொலிக்க வைத்திருந்தது.. எதிரில் உட்கார்ந்திருந்த முகில், எதிலும் கவனமற்று தன் பிரச்சினைக்கு தீர்வு இல்லாமல் பரிதவிப்பது அவன்கண்களில் தெரிந்தது… ” அதில்ல மேடம், எனக்கு என் வீட்டுல இருக்கற ஒரே ஒரு பல்லிய


ஓவர் ப்ரிஜ்ஜில் இன்னொரு ஆக்ஸிடென்ட்

 

 ஸ்டேஷன் இன்சார்ஜ் சோமசேகருக்கு அந்தக் கார் டிரைவரைப் பார்த்ததுமே பிடிக்காமல் போயிற்று. காரணம் கேட்டால் இன்ட்யூஷன் என்று சொல்வார். இருக்கலாம். அது ஒரு வெள்ளை ஸ்கார்பியோ. முன்னால் கொடி கட்டுவதற்கான ஹோல்டர் இருந்தாலும் கொடி எதுவும் கட்டப்படவில்லை. ஆனால் அதன் ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர் அந்த வண்டியின் உரிமையாளர் ஒரு முக்கியப்புள்ளி என்று மௌனமாகப் பறைசாற்றியது. சோமசேகர் கண்கள் எதையும் விடவில்லை. சிக்னலில் நிற்காமல் ஜம்ப் செய்ய முயன்றதால் தான் அதை மடக்கி நிறுத்தி வைத்தார். சாதாரண நாட்களில்