அவரவர் இடம்

 

திருநெல்வேலி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் வந்திறங்கியதுமே, சுந்தருக்கு மனமகிழ்ச்சி உண்டாயிற்று. சுற்றும் முற்றும் பார்த்தான்; எவ் வளவு பழகிய இடம்!
திருநெல்வேலியை பார்த்ததும், தன் அம்மா வையே அருகில் பார்ப் பது போலிருந்தது சுந் தருக்கு. ஆறு மாதத்ற்க்கு ஒரு முறையோ, வருஷத் திற்கு ஒரு முறையோ, அவன் தன் மனைவி, குழந்தைகளுடன் அம்மாவை பார்க்க வந்து விடுவான். அம்மாவுடன் நான்கைந்து நாட்கள் இருப்பான். நான்கைந்து நாட்களிலும், அவன் அம்மாவிடம், “என் கூட வந்து இருந்து விடேன்ம்மா!’ என்று நானூறு தடவையாவது சொல்வான். அதற்கு அம்மாவும் சிரித்துக் கொண்டே, “வந்துட்டால் போறது சுந்தர்… அது அதுக்கு டைம் வரணுமே… அப்பா இருந்த ஊர்; நான் வாழ்க்கைப் பட்ட ஊர்; நீ பிறந்து, வளர்ந்து, படிச்சு பெரியவனான ஊர். குறுக்குத் துறை சுப்ரமணிய சுவாமி கோவிலையும், அதை அணைச் சுண்ட மாதிரி ஓடற தாமிரபரணி நதியும், உயிரோட கலந்துடுத்துடா சுந்தர்… அதுகளையும் இந்த சிக்கநரசய்யன் கிராமத்தையும் விட்டுட்டு வர, மனசு வரமாட்டேங்கறதுடா சுந்தர்…’ என்பாள்.
அவரவர் இடம்அம்மாவுடைய பேச்சில், இப்போதைக்கு அம்மா இந்த சிக்கநரசய்யன் கிராமத்தை விட்டு வர்றது இல்லை என்ற உறுதி தெரியும்.
ஊருக்கு வந்து விட்டால், சமையல் வேலை, குழந்தைகளை கவனிக்கிற வேலை, கணவனுக்கு சாப்பாடு போடுகிற வேலை எதுவுமில்லாமல் மனைவி மாலதி, ஏதாவது பாட்டை பாடிக் கொண்டு வளைய வந்து கொண்டிருப்பாள்.
குழந்தைகளும் கார், சைக்கிள், பைக் எதுவும் ஓடாத தெருவில், நடுத் தெருவில் மற்ற குழந்தைகளுடன் குதியும், கும்மாளமுமாக விளையாடிக் கொண்டிருப்பர்.
“இவால்லாம் எவ்வளவு சந்தோஷமாக இருக்கா பார்த்தியா சுந்தர்… பட்டணத்திலே இல்லாம, நான் இந்த கிராமத்தில் இருக்கிறதாலேதானே நீங்கெல்லாம் பட்டணத்து இரைச்சலேருந்து விடுபட்டு, டென்ஷன் இல்லாமல், “ஹாயா’ இருக்க முடிகிறது… நானும் இங்கே இல்லேன்னா, நீங்க வர, போக ஒரு இடமில்லாம, எவ்வளவு கஷ்டப் படுவேள்?’ என் பாள் அம்மா.
“அதே ஞாயம் தானேம்மா உனக்கும். உனக்கு ஒரு சேன்ஜ் வேண் டாமா? எவ்வளவு நாள் தான், இந்த கிராமத்திலேயே இது அப்பா ஊர், நான் வாழ்க்கைப்பட்ட ஊர்ன்னு சொல்லிண்டு, வேற போக்கிடமில் லாம அடைந்து கிடப்பே?’ என்பான் சுந்தர்.
“அதுதான் அப்பப்போ வந்து, மருமகள், நீ, உன் குழந்தைகளுடன் கொஞ்ச நாள் இருந்துட்டு வர்றேனே சுந்தர்… உன்கிட்டே நான் வர வேண்டிய நாள் ஒண்ணு வரும் சுந்தர். அப்போ நீ கூப்பிடாமலே வந்துடுவேன் பாரு!’ என்பாள் அம்மா.
அவள் பதில், “இப்போதைக்கு நான் வர்றதாக இல்லை சுந்தர்…’ என்று சொல்வது போலிருக் கும்.
அப்பாவுடைய வீடு இருக்கிறது; குடும்ப பென்ஷன் வருகிறது. கூடவே பாங்கில் போடப்பட்டிருக்கும் பணத்துக்கு, ஏதோ வட்டி வருகிறது. அம்மாவும், சும்மா இருக்க மாட்டாள். குழந்தைகளுக்கு பாட்டுச் சொல்லி கொடுப்பாள்; டியூஷன் எடுப்பாள். வெயில் காலத்தில் எல்லா வீட்டிற்கும் போய் வத்தல், வடாம் போட்டுக் கொடுப்பாள்
ஒரு நாள் கிழமையன்று, சில வீடுகளில், பத்து, இருபது பேருக்கு வடை, பாயசத்தோடு சமைக்க வேண்டியிருந்தால், அம்மாவைத்தான் கூப்பிடுவர்.
அம்மா அரைத்துக் கொடுக்கும் மாவில் வார்க்கும் இட்லி, “மெத்’ என்று மல்லிகைப்பூ மாதிரி இருக்கும். வயதானவர்களுக்கு திடீரென்று பொருள் விளங்கா உருண்டை, தேன்குழல், முறுக்கு, சீடை ஏதாவது சாப்பிட வேண்டுமென்றால், அம்மாவைத் தேடி வருவர்.
சின்ன தகர பிஸ்கட் டப்பாவில் போட்டு, நமுத்துப் போகாவண்ணம், இறுக்கமாக மூடி வைத்திருப்பாள். எப்போது சாப்பிட்டாலும், அப்போதுதான் செய்ததுபோல், “முறுமுறு’ வென இருக்கும் எல்லா பட்சணமும்.
அம்மா, ஒண்டிக்கட்டை. சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், மூட்டு வலி எல்லாம் கிடையாது. டாக்டரிடம் போக வேண்டிய அவசியமே அம்மாவுக்கு ஏற்பட்டதில்லை. டாக்டர், மருந்து செலவுகள் எதுவும் கிடையாது அம்மாவுக்கு.
அம்மா தாமிரபரணி நதியில் தான் குளிப்பாள். ஜலதோஷம், காய்ச்சல் வந்தது கிடையாது அம்மாவுக்கு.
கிராமத்தில் ஒவ்வொரு வீட்டினருக்கும், அம்மாவை ரொம்ப பிடிக்கும். அம்மாவுக்கு அவர்கள் கொடுக்கிற மதிப்பு, மரியாதை அதிகம்.
இப்படியெல்லாம் இந்த கிராமத்தில் ஒன்றிவிட்ட அம்மாவுக்கு, எப்படி இந்த அமைதியான, அன்பான, இதமான சூழ் நிலையை விட்டு, வேறு எங்காவது போகப் பிடிக்கும்?
ரயில்வே ஸ்டேஷனை விட்டு, வெளியில் வந்து பார்த்தான்… ரெட்டைப் பாலத்தினடியில் நுழையும் போது, சந்திர விலாஸ் ஓட்ட லும், லட்சுமி விலாஸ் லாலாக் கடையும் தெரிந்தன. ஒன்று சாப்பாட்டுக்கும், டிபனு க்கும் பிரசித்தம்; இன்னொன்று, திருநெல்வேலி அல்வாவுக்கு பிரசித்தம்.
அம்மாவுக்கு அல்வா பிடிக்கும். அதை எடுத்து வாயில் போட்டுக் கொண்டதுமே, தொண்டையில் வழுக்கிக் கொண்டு போகும் போது அம்மா, “எவ்வளவு நல்லா இருக்குடா சுந்தர்…’ என்பாள்.
அல்வா சாப்பிட்டதும், ஒரு கை மிக்சர் எடுத்து வாயில் போட்டு, சூடாக காப்பி குடிப்பாள் அம்மா. மறுபடியும், “எவ்வளவு டேஸ்ட்டா இருக்குடா சுந்தர்…’ என்று, சின்ன குழந்தையைப் போல், சந்தோஷமாக சொல் வாள்.
அரைக் கிலோ அல்வாவும், அரைக் கிலோ மிக்சரும் வாங்கிக் கொண்டான் சுந்தர். சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்த ஆட்டோ ஒன்றில் தாவி ஏறி, “சி.என்.வில்லேஜ் போகலாம்…’ என்றான்.
ஆட்டோ கைலாசபுரம், மீனாட்சிபுரம் வழியாக சென்று, திருச்செந்தூர் ரயில்வே கேட்டைத் தாண்டி, சரிவில், “விர்’ரென்று இறங்கி சிக்கநரசய்யன் கிராமம் நோக்கி ஓடியது.
“பச்சை மரச்சட்ட அழி போட்ட வீடு…’ என்ற அடையாளம் சொன்னான் சுந்தர்.
ஆட்டோ நின்றது. இறங்கிக் கொண்ட சுந்தர், ஆட்டோவுக்கு பணம் கொடுத்துவிட்டு, அம்மாவை இன்னும் சில வினாடிகளில் பார்க்கப் போகிறோம் என்ற ஆவலில், படி ஏறி, கதவைப் பார்த்தான்; வீடு பூட்டியிருந்தது.
“அம்மா எங்கே போயிருப்பாள்; கடை கண்ணிக்கோ, கோவிலுக்கோ அவள் போகிற நேரமில்லையே இது…’ என்று எண்ணியபடி சுற்றும் முற்றும் பார்த்தான்.
எதிர்வீட்டு கோமதியம்மா, கண்களை சுருக்கி பார்வையை கூராக்கி, எதிர் வீட்டின் வாசலில் நிற்பது யார் என்று பார்த்தாள்.
“”நான் தான் மாமி சுந்தர்…! அம்மா எங்கே போயிருக்கா?” என்று கேட்டான்.
“”பண்ணையார் வீட்டுக்கு போயிருக்கா… சாயங்காலம் தான் வருவா… நீ வேணும்ன்னா அம்மாவை பண்ணையார் வீட்டிலே போய்ப் பார் சுந்தர்!” என்றார் கோமதி மாமி.
பண்ணையார் வீட்டுக்குச் சென்றான் சுந்தர். அவனை சற்றும் எதிர்பாராத அவன் அம்மா, பதட்டமோ, பரபரப்போ இல்லாமல், “”சுந்தரா… வா… வா…” என்று வரவேற்றாள்.
“”இங்கே என்னம்மா செய் யறே?” என்று ஒன்றும் புரியாமல் கேட்டான் சுந்தர்.
“”ஒருநிமிஷம்…” என்றபடி, ஒரு அறையினுள் நுழைந்தவள், மனிதக் கழிவு இருந்த பீங்கானை மூடி போட்டபடி, எடுத்துக் கொண்டு டாய்லெட்டுக்குப் போய் அதை கொட்டிவிட்டு, “ப்ளஷ்’ஷை அழுத்தி தண்ணீரை வேகமாக ஓடச் செய்தாள். பேசினை சுத்த மாக கழுவிவிட்டு, டெட்டால் போட்டு, தன் கைகளை கழுவிக் கொண்டு வந்தாள்.
“”என்னம்மா காரியம் பண்றே?” என்று பதறியபடி கேட்டான் சுந்தர்.
“”பண்ணையார் சம்சாரத் துக்கு பாரிசவாயு வந்து, கைகால் விளங்காம படுத்த படுக்கையா கிடக்கா… மகனும், மருமகளும் அவளை நன்கு பார்த்துண்டாலும், அவா ரெண்டு பேரும் ஆபிசுக்கு போனப்புறம் பண்ணையார் மாமியை பாத்துக்க யாருமில்லை… மனசு கஷ்டப்பட்டது.
“”சின்ன வயசுலே பண்ணையார் மாமி மீனாட்சி, எனக்கு கொள்ளையா செஞ்சிருக்கா… அதுக்கு பிரதிபலனாக அவளை நான் கவனிச்சுக்கிறதா சொன்னேன்… பணம் வேண்டாம்னு சொன்னேன்… பிள்ளையும், மருமகளும் கேட்கலே…
“”மாசம் பிறந்தா ரெண்டாயிரம் ரூபாயை, என் கையிலே திணிச்சிட்டு… சாயங்காலம் ஆறு மணிக்கு ஆபிஸ் விட்டு வந்ததும், “நீங்க போயிட்டு வாங்கோ மாமி… நாங்க பாத்துக்கறோம்…’ன்னு என்னை அனுப்பி வைச்சுட்டு…
“”காலம்பற பிளாஸ்க்குல, எனக்கு காபி போட்டு வைச்சு, ஹாட்பேக்ல சூடா பண்ற டிபனை வைச்சுட்டு, சாதம், கறி, குழம்பு, செய்து, நான் மத்தியானம் சாப்பிட எடுத்து வச்சிட்டு ஆபிசுக்கு போறா… எல் லாரும் என்னை நல்லா கவனிச்சுக்கறா… நான் பண்ணையார் மாமியை கவனிச்சுக்கறேன்…” என்று சொல்லியபடியே வந்த அம்மா, வீட்டில் பூட்டியிருக்கும் பூட்டைத் திறந்தாள்.
“”நான் இப்படியே போயிடறேன்ம்மா!” என்றான் சுந்தர்.
“”ஏண்டா சுந்தர்?”
“”உனக்கு பணம் சம்பாதிக்க, ஒரு வழி இங்கே கிடைச்சிருக்கு… அதை இழக்க நீ விரும்பலே… அதுதான் என் கூட வரமாட்டேன்னு பிடிவாதமா இருக்கே… இருந்துட்டுப் போ… இந்த உலகத்திலே காசை விட, பிள்ளைப் பாசம் பெரிசா என்ன?” என்று சொல்லி விட்டு படி இறங்கினான் சுந்தர்.
“”சுந்தர்… குழந்தைகள் எப்படி இருக்கா… மாலதி எப்படி இருக்கா… அடிக்கடி ஒரு பாட்டை பாடிண்டே இருப்பாளே, இங்கே நீங்க எல்லாம் வந்தப்போவும், நான் அங்கே வந்தப்போவும், ஒரு பாட்டு, அதை இன்னும் மாலதி பாடிண் டிருக்காளா?” என்று கேட்டாள் அம்மா.
“”என்னப் பாட்டும்மா?”
“”பரமசிவன் கழுத்திலிருக்கும் பாம்பு கேட்டது, கருடா சவுக்கியமா… யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே கருடன் சொன்னது என்ற பாட்டு,” என்றாள் அம்மா.
அம்மா, ஏன் தன்னுடன் வந்து இருக்கவில்லை என்பதற்கான காரணம் தெரிந்தது சுந்தருக்கு.
மாமியார் தன்னுடன் இருப்பது மாலதிக்கு பிடிக்கவில்லை. அவரவர் இடத்தில், அவரவர் இருக்க வேணடுமென்பதைத் தான் அந்த பாட்டை அம்மா காது கேட்கவே, அவள் பாடியிருக்கிறாள்.
அம்மா புத்திசாலி; புரிந்து கொண்டாள். சுந்தருக்கு மனசும், கண்களும் ஒருசேர கலங்கின.

- ஜூன் 2010 

தொடர்புடைய சிறுகதைகள்
போதும் என்ற மனம்!
தன் அறையில், புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள் சுமதி. மலர்களை பற்றி கூறும் அருமையான புத்தகம் அது. நிறைய பூக்களின் விவரங்கள், வண்ணப் படங்களில் அச்சடிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு பூவும், ஒவ்வொரு விதம். எல்லாமே அழகு! சின்னக் குழந்தைகளைப் போல, காம்பின் நுனியில் சிரித்துக் கொண்டிருந்தன ...
மேலும் கதையை படிக்க...
சந்தோஷம்
பெண்ணை கல்யாணம் செய்து கொடுத்து, புருஷன் வீட்டுக்கு அனுப்பி வைத்த பிறகு, எல்லா பெற்றோருக்கும் தோன்றும் ஆசை, எனக்கும், மனைவி சாவித்ரிக்கும் தோன்றியது.புருஷன் வீட்டில், அவள் எப்படி இருக்கிறாள் என்று, பார்க்க வேண்டுமென்ற ஆசை தான் அது.புருஷன் வீட்டுக்குச் செல்லும் பெண், ...
மேலும் கதையை படிக்க...
சலனம்
ஆபீசுக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தாள் சவுமியா. அவளைப் பார்த்தால், 20 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிற பெண்ணைப் போலவே இருக்க மாட்டாள்; மிகவும் எளிமையாக இருப்பாள். நெற்றியில் கருப்பு சாந்து இட்டு, அதன் கீழ் நகமளவு விபூதி இட்டிருப்பாள். குளித்து விட்டு, டிபன் சாப்பிட டைனிங் ...
மேலும் கதையை படிக்க...
சங்கரி!
சமையலறை கதவின் மீது, சாய்ந்து உட்கார்ந்து கொண்டிருந்தாள் சங்கரி. அங்கிருந்து பார்த்தால் ஹால் நன்கு தெரியும். ஒரு நாற்காலியில், இரு கால்களையும் தூக்கி வைத்து உட்கார்ந்திருந்தார், அவள் கணவன் சபேசன். அவரெதிரே கை வைத்த ஒரு மர நாற்காலியில், சாய்ந்து உட்கார்ந்திருந்தார், அவர் நண்பர் ...
மேலும் கதையை படிக்க...
தன்மானம்
தன்னை பெண் பார்க்க வந்த பையன் சேகரை, மீனாவுக்கு மிகவும் பிடித்து விட்டது. அவன், அவளை பெண் பார்த்துவிட்டுச் சென்று, பத்து நாளாகியும், அவன் முகமே அவள் மனதில் நிறைந்திருந்தது. அழகாக இருந்தான் சேகர். இந்தக் கால இளைஞர் போல் இல்லாமல், தலைக்கு ...
மேலும் கதையை படிக்க...
பூவும் நாரும்!
"உள்ளே வரலாமா?' என்ற குரல் கேட்டதும், ஹால் சோபாவில் உட்கார்ந்து, பேப்பர் படித்துக் கொண்டிருந்த கோபாலன், பேப்பரை தாழ்த்திப் பிடித்து, வந்திருப்பது யார் என்று பார்த்தார். நான்கு நாட்களுக்கு முன், அவர் மகள், அகிலாவை பெண் பார்த்து விட்டுச் சென்ற ராஜம் மாமி! அவசர ...
மேலும் கதையை படிக்க...
கல்லும் புல்லும்!
அறைக் கதவுக்கெதிரே கட்டில் போடப்பட்டு, கல்யாணி படுத்திருந்ததால், அவளால் அங்கிருந்தே ஹாலில் நடப்பதையெல்லாம் பார்க்க முடிந்தது. ஹாலின் நடுவே உட்கார்ந்து, காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தாள் நாராயணி. ""என்ன மாமி... பூசணிக்காய் சாம்பார், தக்காளி ரசம், கத்திரிக்காய் கறி செய்யட்டுமா?'' என்று அங்கிருந்தபடியே கேட்டாள் நாராயணி. ""பண்ணுடியம்மா ...
மேலும் கதையை படிக்க...
சித்தி தான் அம்மா!
டூவீலரில் ஆபீசுக்கு வந்து கொண்டிருந்தான் மோகன். ஆபீஸ் புறப்பட நேரமாகி விட்டது. வேகமாக டூவீலரை ஓட்டி வந்தான்; மனம் வேறு சரியில்லை. முன்னே போய் கொண்டிருந்த ஒரு காரின் மீது, மோத இருந்தான் மோகன். "சட்'டென்று வண்டியின் வேகத்தைக் குறைத்து, வண்டியை நிறுத்தினான்; ...
மேலும் கதையை படிக்க...
நெகட்டிவ்வும், பாசிட்டிவ்வும்!
அப்போது தான் துர்காவை பெண் பார்த்து விட்டு ஆனந்த், அவன் அம்மா, அப்பா வந்திருந்தனர். ஆனந்துக்கு துர்காவின் ஞாபகமாகவே இருந்தது. லேசில் மறந்து போய் விடக்கூடிய அழகல்ல துர்காவின் அழகு. சிவப்பு நிறம், கரிய கூந்தல், நீண்ட கண்கள், எள் பூ போன்ற ...
மேலும் கதையை படிக்க...
ஆத்ம திருப்தி!
இரவில் தூங்குகிறாளோ, இல்லையோ... அதிகாலையில், திருச்செந்தூர் செல்லும் ரயில் சப்தம் கேட்டதுமே எழுந்து விடுவாள் அஞ்சலை. மணி நான்கு. இப்போதே எழுந்து வேலையை துவங்கினால் தான், ஆறு மணிக்கு எல்லாம் தயாராகிவிடும். இட்லி, சாம்பார், சட்னி, மெதுவடை செய்ய வேண்டும். பத்து, இருபது ...
மேலும் கதையை படிக்க...
போதும் என்ற மனம்!
சந்தோஷம்
சலனம்
சங்கரி!
தன்மானம்
பூவும் நாரும்!
கல்லும் புல்லும்!
சித்தி தான் அம்மா!
நெகட்டிவ்வும், பாசிட்டிவ்வும்!
ஆத்ம திருப்தி!

அவரவர் இடம் மீது ஒரு கருத்து

  1. //அம்மா புத்திசாலி; புரிந்து கொண்டாள்//
    கடைசி வரியில் நச்சுன்னு செம அடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)