கூடலுக்குக் கூழாங்கற்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 8, 2026
பார்வையிட்டோர்: 8,021 
 
 

(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பங்குவின் ஒரு இங்கிதப் பறவையினம்- அண்டார்டிகா போன்ற பனி படர்ந்த பிரதேசங்களில் வாழும் பறவைகள். அவைகள் அனைத்தும் ஒரே தோற்றம் உடையவை. எனவே ஆண் பெண்ணைக் கண்டுபிடிப்பது முடியாத காரியம்.

அப்படியானால் அவைகளின் இனச் சேர்க்கை எவ்வாறு நடைபெறுகிறது. என்று இந்திய விஞ்ஞானி வர்மா அங்கு சென்று ஆய்ந்தார்.

அழகான கூழாங்கற்கள் அங்கு அபூர்வமாகக் கிடைக்கும்.

ஆண் பெங்குவின், ஒரு கூழாங்கல்லைக் கொண்டு வந்து பிறிதொரு பெங்குவின் முன் உருட்டிவிடும். புதிய பெங்குவின் இதனைத் துரத்த ஆரம்பித்தால் அது ஆண் ஆகும். கூழாங்கல்லை ஏற்றுக் கொண்டால் அது பெண் இனமாகும்.

இந்நூதன முறையால் பெண் இனத்தைக் கண்டு ஜோடி சேர்கிறது, கூடி வாழ்கிறது.

இறைவனின் படைப்பில்தான் எத்தனை விநோதங்கள்? இவைகளைக் காட்டிலும் மனிதன் எவ்வளவு மேலானவன்?

“ஆகாயத்து பட்சிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள்” [மத்தேயு 6:26]

– எழுச்சியூட்டும் எழுபது கதைகள், சிரிப்புக் கதைகள், முதற் பதிப்பு: ஜூலை 1989, ஜெயா பப்பிளிகேஷன்ஸ், பாளையங்கோட்டை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *