வி.ஜே.பிரேமலதா




சிறுகதை என்று 1998ல் ஒரு இதழ் வெளிவந்தது. அதற்குப் பிறகு தற்போதுதான் சிறுகதைகளுக்கென்றே இணைய இதழ் வெளிவருகிறது. புதிய எழுத்தாளர்களுக்கு வாய்ப்பும் ஆர்வமும் தூண்டும் மிகச்சிறந்த முயற்சி. தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு சிறந்த பங்களிப்பு. உலகத்தமிழர்களின் வாழ்க்கையைச் சிறகதைகளின் வழி அரிய கிடைத்த பொக்கிசம். சிறுகதையையை விட வேறெந்த வடிவமும் அத்துணை அழகாய் உணர்ச்சிகளைச் சொல்ல முடியாது என்பதால்தான் அது இன்றும் படிக்கப்பட்டும் எழுதப்பட்டும் வருகிறது. இதற்கென்று ஒரு இணைய இதழைத் தொடங்கிய தங்களின் முயற்சி பாராட்டுக்குரியது. வரவேற்பிற்குரியது. நூலகத்திற்குச் சென்றோ, நூல்களை வாங்கியோ(எத்தனை தான் வாங்குவது?எப்படித்தான் பாதுகாப்பது?) படிக்க முடியாதவர்களுக்கு இது வரப்பிரசாதம்.