சிறுகதைகளுக்கான இணைய தளங்கள் காளான்போல பெருகிவிட்டிருந்தாலும், சிறுகதைகள்.காம்…தனித்து நிற்பதன் காரணம் வியாபார நோக்கம் அறவே இன்றி, தரமுள்ள கதைகளை பாரபட்சமில்லாமல் வெளியிடுவதை அதன் ஆசிரியர் ஒரு குறிக்கோளாக வைத்திருப்பதேயாகும். மூன்று வருடங்களுக்கு முன் எனது சிறுகதை வெளியாகும்போது நான் அதிகம் அறியப்படாத எழுத்தாளர்களில் ஒருத்தியாக இருந்தேன். தொடர்ந்து எனது கதைகளை வெளியிட்டு, என்னை ஊக்குவித்தது மட்டுமல்லாமல், உலகம் முழுவதிலிருந்து எனக்கு ஆயிரக்கணக்கான வாசகர்களை பெற்றுத்தந்த இணையதளத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள். எழுத்துலகுக்கு அவர் ஆற்றும் பணி மகத்தானது…இந்த இணையதளம் புதுப்பொலிவுடன், பல்லாண்டுகள் தனது பணியைத் தொடர வாழ்த்துக்கள்…