கதையாசிரியர் தொகுப்பு: ஹரி கிருஷ்ணன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

கடப்பைக் கல்மேல் ஒரு கால்சுவடு

 

 யல்லாம் யேசுவே – யெணக்கல்லாம் யேசுவே தொல்லேய் மீகூம் யிவ்வூலாகில் தூஊணை யேசுவே மின் வண்டி திரிசூலத்தைத் தாண்டியிருக்கும். கிழிந்துபோன கட்டம்போட்ட கம்பளிப் போர்வையும், மடக்கக் கூடிய அலுமினிய ஊன்று கோலும், இடுங்கிப் போய் பாதாளமானதும், திறந்திருக்கும் சின்ன இமை இடுக்கு வழியே தெரியும் ரத்த நரம்போடும் வெள்ளை விழிக்கோடு மட்டுமாகவும் பிச்சைக்காரன் பெரிய குரலில் பாடினான். பிச்சை நாணயங்கள் விழுந்திருந்த குவளையின் வாயைக் கையால் மூடிக்கொண்டு தாளத்திற்காக அதைக் குலுக்கிக் கொண்டிருந்தான். ஏழெட்டு நாணயங்கள் இருந்திருக்க


படிக்காத குதிரை!

 

 ஸ்கூட்டரில் நானும் நண்பனும் போய்க் கொண்டிருக்கிறோம். வண்டி, கிண்டி குதிரைகள் ஆஸ்பத்திரியைத் தாண்டியது. மொழுமொழுவென்று, ஆரோக்கியமான பளபளப்புடன் வரிசையாகக் குதிரைகள் தார்ச்சாலையில் குளம்பொலி கிளப்பித் தாளம் தப்பாமல் நடைபயின்று சென்றன. ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று திரும்புகிறார்கள். பாரவண்டிக் குதிரையா! பந்தயக் குதிரையாயிற்றே! உயரமான அரபுக் குதிரை. ஒவ்வொன்றின் முதுகே ஒரு மனிதனின் சராசரி உயரத்துக்கும் மேல் இருக்கும். கண்டு கண்டாக முறுக்கேறித் திமிறும் தசைகள் புடைத்துத் தெறிக்கும்படியான கால் அசைவு. சீராக வெட்டிவிடப்பட்ட பிடரி மயிரும், வாலும்.