கதையாசிரியர் தொகுப்பு: ஸ்ரீ.தாமோதரன்

346 கதைகள் கிடைத்துள்ளன.

இளம் மாங்கன்று

 

 பள்ளிக்கூட இடைவேளையில் அவசர அவசரமாய் சிறு நீர் கழிக்க அந்த புதருக்குள் நுழைந்தவர்களில் ராசுக்குட்டி, பரமன், கட்டாரி, மூவர் மட்டும் “இற்று போய்” எப்பொழுது வேண்டுமானாலும் கீழே விழுந்துவிடும் நிலையில் இருந்த “டவுசர்களை” இழுத்து விட்டு அண்ணாகயிற்றால் பிணைத்து கொண்டனர். இருந்தாலும், ராசுக்குட்டியின் மூக்கில் வெள்ளையாய் வழிந்து கொண்டிருந்த சளி வேறு மேல் உதட்டின் விளிம்பில் நின்று எப்பொழுது வேண்டுமானாலும் உதட்டை தாண்டி விழுந்து விடுவேன் என்று பயமுறுத்த, “சர்ரென்று” மூக்கை இழுத்து பிடிக்க முயற்சித்தான், ஆனால்


குருவி குஞ்சு

 

 கஞ்சப்பனுக்கு பசி உயிரடுத்தது, காலையில் விழித்து எழுந்தவனுக்கு பசி வயிற்றை கிள்ளவும், ஏதோ கத்தியபடி பாத்திரங்களை உருட்டிக்கொண்டிருந்த அம்மாக்காரியிடம் கஞ்சிக்கு போய் நின்றபோது, இவன் அப்பன்காரன் அவள் மறைத்து வைத்திருந்த அம்பது ரூபாயை ‘லவட்டி’ கொண்டு போயிருந்த கோபத்தில் இருந்தவள் அவனை அடிப்பதாக நினைத்து இவன் முதுகில் இரண்டு வைத்தாள். எதற்கு அம்மா அடிக்கிறாள் என்று அறிவதற்கு முன்பே முதுகில் பட்ட அடி வலிக்க கண்களில் தானாக கண்ணீர் வர ஆரம்பித்து விட்டது. இதற்கு மேல் இவளிடம்


மறக்க முடியாதவன்

 

 “குட்மார்னிங் சார்” மலையாளம் கலந்த குரல் கொடுத்தபடியே காம்பவுண்ட் கேட்டை திறந்து உள்ளே வந்தான் “குட்மார்னிங் பாபு” அப்பொழுதுதான் தூக்கத்தில் இருந்து விழித்திருந்தாலும் பதிலுக்கு குரல் கொடுத்தேன். நேரம் காலை ஆறு மணியாக இருக்கலாம், என் அனுமானம். ஏனென்றால் சரியாக ஆறு மணிக்கு இவன் ஆஜராகி விடுவான். ஆரம்ப காலத்தில் எனக்கு இவன் வருகை எரிச்சலூட்டினாலும் போக போக இவன் வருகை என்னையும் விடியலில் நேரத்தில் எழுப்பி விட்டுவிட்டது. ஒரு மாதமாகத்தான் வந்து கொண்டிருக்கிறான். வீட்டின் பின்புறம்


கடன் என்ன பெரிய கடன்?

 

 ரங்கசாமி ரங்கசாமி தோளை பிடித்து உலுக்கிய உலுக்கலில் சட்டென தன் நினைவுக்கு வந்தான் ரங்கசாமி ! என்ன என்ன விழித்து கேட்டான் உலுக்கிய சக தொழிலாளியிடம். ஆமா போ வர வர உனக்கு வேலை செய்யும்போதே தூங்கற பழக்கம் வந்துடுச்சு, “ராக்கப்பன் கடையில இருக்கற “எச்சலை கூடைய” எடுத்துட்டு வந்து வண்டியில போடு, அலுத்துக்கொண்டே சொன்னான் அந்த சக தொழிலாளி ரங்கசாமி இப்பொழுதெல்லாம் யோசனை செய்த மன நிலையிலேயே இருக்கிறான். இல்லையென்றல் பித்து பிடித்தாற் போல் இருக்கிறான்,


இதுவெல்லாம் குற்றமா?

 

 பரபரப்பாக அந்த சாலை இருந்தது. வாகனங்கள் பொறுமையின்றி ஒலிக்க வைத்த ஹாரன் சத்தமும், அதை விட மக்கள் அங்கும் இங்குமாக நடந்து செல்ல அவர்களை திசை திருப்பி கடைக்குள் இழுக்க நடைபாதை ஓரமிருந்த கடைகளின் ஆட்கள் கூவி அழைத்த அழைப்பும், அங்கிருந்த மின் கம்பத்தின் ஓரமாய் நின்றிருந்த இவனை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. அவனை பொறுத்தவரை இப்பொழுது அவன் நினைவுகள் இந்த உலகத்திலேயே இல்லை. அவனுடைய பார்வை அவனுக்கு முன்னால் நின்றிருந்த பின்புறம் திறந்த ஆட்டோவின் மீதே


தானாக வந்த திறமை

 

 குமரேசபுரம் என்னும் ஒரு சிற்றூர், அந்த ஊரில் ஒரு நடு நிலை பள்ளியும், நூலகமும், சிறிய அரசு மருத்துவமனை, பஞ்சாயத்து அலுவலகம் இவைகள் எல்லாம் இருந்தன. அந்த ஊரில் பொதுவாக எல்லாரும் விவசாயம் செய்து கொண்டிருந்தார்கள். ஓரளவு படித்தவர்கள் வெளியூருக்கு வேலைக்கு சென்று இரவு ஊருக்கு திரும்பி வந்து விடுவார்கள். அந்த ஊரிலிருந்து மூன்று முறை பேருந்து வந்து சென்றதால் வெளியூருக்கு வேலைக்கும், மற்றபடி பொருட்கள் வாங்கி வருவதற்கும் அந்த ஊர் மக்களுக்கு வசதியாக இருந்தது. அந்த


கல்பனாவின் மேல் ஏன் இந்த வெறுப்பு?

 

 எப்பொழுதுமே என்னை தலைக்கனம் பிடித்தவன், பிடிவாதக்காரன், தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று விவாதிப்பவன், இப்படியாக என்னென்னமோ என்கிறார்கள். சொல்லட்டுமே, விருதுகளை வெறுத்தவன், ஆரவாரமான வரவேற்புகளை நிராகரித்தவன், இது போதாதா என் தலைக்கனத்துக்கும், பிடிவாதத்திற்கும். இவன் எழுதும் இலக்கியம் புரியவில்லை, இப்படி கூப்பாடு போட்டு புலம்புவர்களும் உண்டு, அவர்கள் எல்லாம் என்னை போன்ற எழுத்தாளர்கள் தான். அவர்களுக்கு என் மீது கிலேசம், அதனால் அப்படி சொல்கிறார்கள், நான் அதற்கெல்லாம் கவலைப்பட்டு கொண்டிருப்பதில்லை. பார்த்தீர்களா நான் எதையோ


திடீர் பாசம்

 

 நீ பாக்கறதுக்கு கொழு கொழுன்னு இருக்கே! கூட இருக்கறவங்க சொல்லும்போது சந்தோசமாய் இருந்தாலும் இந்த ஒரு வாரமாய் மனசு அடிச்சுக்குது, எதுக்குன்னு தெரியவில்லை. முதலாளியும், முதலாளியம்மாவும், அதிகமாக என் மீது பாசத்தை பொழியறதாலாயா? ஒரு வேளை ரொம்ப நாள் கழிச்சு வரும் அவர்கள் மகனுக்கு என்னை?… முதலாளி இப்பவெல்லாம் என்னைய பாக்கற பார்வையே சரியில்லை, தேவையில்லாம என் இடத்துக்கு வர்றதும், என் தலையை தடவறதும், அணைச்சு பேசறதும், எனக்கு ஈரல் குலை எல்லாம் நடுங்குது, பக்கத்துல இருக்கறவங்க


கவிஞனின் குறும்பு

 

 இரவு இரண்டு மணிக்கு மேல் இருக்கலாம், சட்டென விழிப்பு வர எழுந்து பாத்ரூம் போவதற்காக வெளியே வந்தேன். எங்கள் ஹாஸ்டலில் இதுதான் பிரச்சினை. நான்கு ரூம்களுக்கு பொதுவான கழிப்பறை, ஆனால் இரண்டிரண்டாக இருக்கும். அதனால் காலையில் அவ்வளவு சிரமம் இருக்காது. ஒரு அறையில் மூன்று மாணவர்கள் உண்டு. தனித்தனி கட்டில், புத்தக அலமாரி உண்டு. இந்த நடு இராத்திரி எழுந்து பாத்ரூம் செலவது ஒன்றுதான் சிரமம், நல்ல வேளை நாங்கள் இரண்டாம் தளத்தில் இருப்பதால், தூக்க கலக்கத்தில்


“ஆ” வில் ஐந்து

 

 “ஆ” இது என்ன சத்தம் ஆண் குரல் போலும் இல்லை, பெண் குரலும் போல் இல்லை, அதுவும் இரவு பனிரெண்டு மணிக்கு மேல் ! அறைக்குள் படுத்திருந்தாலும் கதவு திறந்து வெளியே வர பயம். ஆனால் அந்த “ஆ” என்ற மயிர்க்கூச்செரியும் சத்தம், பக்கத்தில் படுத்திருந்த மனைவியை பார்த்தேன் ஹூஹூம் எந்த அயர்வுமில்லாமல் தூங்கிக்கொண்டிருந்தாள். சரி படுப்போம் பத்து நிமிடங்கள் கழிந்திருக்கும் மீண்டும் “ஆ” சட்டென எழுந்தவன் மெல்ல அறையை விட்டு வெளியே வந்து மனைவியின் தூங்கிக்கொண்டிருக்கும்