கதையாசிரியர் தொகுப்பு: வ.இரா.தமிழ்நேசன்

7 கதைகள் கிடைத்துள்ளன.

சும்மா

 

 இன்றைக்கு ஏழாவது நாள்; வேலையில்லாத ஏழாவது நாள். அவன் எந்த வேலையும் செய்யாமல் ஒருபோதும் இப்படி ‘சும்மா’ இருந்ததில்லை. அலுவலகத்தில் மட்டுமல்ல, விடுமுறையென ஒரு நாள் வீட்டில் இருந்தால்கூட புத்தகங்களை அடுக்கி வைப்பது, மேஜை டிராயரில் பல நாட்களாக போட்டு வைத்திருந்த இன்சுரன்ஸ் கட்டிய இரசீதுகள், சொசைட்டி மெய்ண்டனன்ஸ் இரசீது, கரண்ட் பில், கேஸ் பில், தொலைபேசி பில் இன்னும் பிற எல்லாம் எடுத்து அதற்கான கோப்புகளில் வைப்பதென, ஏதாவதொரு வேலையை செய்துகொண்டே இருப்பான். தொடர்ந்து ஏழாவது


அழைப்பு

 

 “குமார், முதலாளி கூப்புடுறாரு” “எதுக்கு மாஸ்டர்?” “தெரியல… போ, போய் பாரு…” அவன் கண்ணாடிக் கதவை தள்ளிக்கொண்டு முதலாளியின் அறைக்குள் நுழைந்தான். மீசையெல்லாம் மழித்து இந்திப் பட நாயகன்போல முதலாளி தன் இருக்கையில் அமர்ந்திருந்தார். அவருக்கு முன்னால் ஆறுக்கு மூன்று சதுர அடியில் மேசை. கண்ணாடியிலான மேல்பாகம் உள்ளிருந்த மரத்திலான அழகான வடிவமைப்பை பளிச்சென்றுக் காட்டியது. முதலாளிக்கு எதிரிலிருந்த இருக்கையில் மேனேஜர் அமர்ந்திருந்தார். அவன் உள்ளே நுழைந்த சப்தத்தைக் கேட்டு திரும்பிப் பார்த்தார். அவருடைய முகம் கறுத்துப்


ரிட்டன் கிப்ட்

 

 பள்ளியிலிருந்து வந்ததிலிருந்தே சந்திரன் பரபரப்பாக இருந்தான். இரண்டாம் வகுப்பு படிக்கிறான்; படு சுட்டி, படிப்பிலும் கெட்டிக்காரன். ஒரு நிமிடத்தில் வீட்டில் இருக்கும் பொருட்களையெல்லாம் இழுத்து கீழே போட்டுவிடுவான். சுவரெல்லாம் கலர் பென்சிலால் கோடு, கோடாக வரைந்து வைத்திருந்தான். “பெரிய ஓவியனாக வருவானாக்கும்” என வீட்டுக்கு வருபவர்களிடமெல்லாம் பெருமையாக சொல்லிக் கொள்வார்கள் கணவனும், மனைவியும். அன்றும் அப்படித்தான் அறைக்குள் ஓடுவதும் ஏதாவதொரு ஆடையை எடுத்துக் கொண்டு வந்து அம்மாவிடம் காட்டி “அம்மா, இந்த டிரஸ் நல்லா இருக்கா பாரு”


ஆதி மூதாதையரின் ஜீன்கள்

 

 காலையில் வெகுநேரம் கழித்தே கண் விழித்தேன். தலையின் இரு பக்கமும் கிண்னென்று வலி தெறித்தது. வெளியில் புறாக்கள் ம்உம்… ம்உம்… என அனத்திக் கொண்டிருந்தது. புறாக்களின் அனத்தல் சத்தம் எனது செவிகளில் நாரசமாய் ஒலித்தது. அதற்கும் மேலும் படுத்திருக்க மனமில்லாதவனாய் எழுந்து இரு கைகளாலும் தலையை அழுத்திக் பிடித்துக் கொண்டு உட்கார்ந்தேன். “குட் மார்னிங்” தன் இதழ்களில் புன்னகையை ஏந்தி எனக்கு முன்னால் வந்து நின்றான் நண்பன் சுப்பிரமணி. அவன் குளித்து முடித்து உற்சாகமாக நின்று கொண்டிருந்தான்.


பின்னகரும் ஆசைகள்

 

 அவனுக்குள் ஒரு விசித்திரமான ஆசை முளைவிட ஆரம்பித்தது. நாளாக, நாளாக அந்த ஆசை அவனை ஆக்கிரமித்துக் கொண்டேவந்தது. அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்த ஆசை அவனது உடலெங்கும் பற்றி ஊர்ந்த வண்ணம் இருந்தது. நகரின் திரைச் சீலைகள் விற்கும் பிரபலமான கடைக்குச் சென்றான். கடை சிப்பந்திகளிடம் தனது ஆசையை கூறி அது போல திரைச்சீலையும், மெத்தை விரிப்பானும், தலையணை உறையும் வேண்டுமெனக் கேட்டான். கடை சிப்பந்தி அவனை மேலும் கீழும் பார்த்தான். பைத்தியமாக இருப்பானோ என்று


பச்சை ரத்தம்

 

 ‘இன்றைக்கு வேலைக்குப் போக வேண்டாம்’ என மனதுக்குள் ஒரு குரல் காலையிலிருந்து கேட்டுக்கொண்டே இருந்தது. இரவு நெடுநேரம் கழித்து தூங்கியதால், அயர்ச்சியாக இருக்கிறது போலும். உடல் அயர்ச்சியாக இருந்தால் மனதும்; மனது அயர்ச்சியாக இருந்தால் உடலும் அயர்ச்சி அடைவது இயல்புதானே. அதனால்தான் காலையில் தூக்கம் கலைந்த பின்னரும் கண் மூடி, உடலை தளர்த்திப் படுத்திருந்தேன். ஏதோ நினைவு வந்தவனாய் சட்டென்று சோம்பல் உதறி எழுந்தேன். காலைக்கடன் கழித்து, குளித்து முடிந்ததும், காலை சிற்றுண்டி உண்டு, இதோ பேருந்து


மலரும் வாசம்

 

 ‘அப்பா போன்… அப்பா போன்…’ மகளின் குரலிலேயே அலைபேசியின் அழைப்பொலியை பதிவு செய்து வைத்திருந்தான் அவன். “ஹலோ… ஹலோ… வணக்கம், நான் பிரேம் குமார்.” “எப்படியிருக்கிங்க?” பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டபின் சற்று தயங்கித் தயங்கி, “எனக்கு ஒரு உதவி செய்யனும்” என்று கேட்டார். பிரேம் குமார் பேங்க் ஆஃப் இந்தியாவின் மும்பை சாக்கிநாக்கா கிளையில் சில வருடங்களுக்கு முன் மேலாளராக பணிபுரிந்தபோது அவனுக்கு அறிமுகமானவர்; நல்ல மனிதர். இருவருக்குள்ளும் நல்ல நட்பு இருந்தது. மூன்று வருடங்களுக்கு முன்பு