கதையாசிரியர் தொகுப்பு: வையவன்

5 கதைகள் கிடைத்துள்ளன.

சரயூ

 

 தேவேந்திரன் சரயூ நதிக்கரையில் நின்றிருந்தான். அவனது வாகனம் ஐராவதம் வான்வெளியிலிருந்து அவளை இறக்கிவிட்டு அயோத்தியின் புறவெளி வனங்களில் உலவச்சென்றது. அது சிந்திக்கிற உயிரி. சிந்தித்தது. “தலைவர் தாகம் இந்திராணி இருந்தும் தீரவில்லையே! அன்று ஆகாய கங்கை இறங்கும் அடிவாரத்தில் அகல்யாவுக்காக மனித வடிவில் சென்று சேவலாகக் காவினார். இன்று சரயூவின் கரையில் வந்து நின்றிருக்கிறார்?யாருக்காக?” மனித வடிவில் நின்ற தேவேந்திரன் கம்பீரமாக ஓடும் சரயூவைப் பார்த்து நின்றான். ‘எவ்வளவு காலமாயிற்று சரயூ நதிக்கரைக்கு வந்து! ராம ஜனனத்தின்


சரணடைவாளா சரண்யா?

 

 மாட்டாள்.மனசுக்கு நன்றாகத் தெரிந்தது. இருந்தும் அது – அதாவது மனசு அவனைச் சும்மாவிடவில்லை.முதல் சந்திப்பு திருச்செந்தூர் மூலவர் அருகே. ஒரே ஒரு பார்வைதான். அது தனக்குத்தானா? தெரிந்துகொள்ளச் சுற்றிலும் பார்த்தான். அவன் பார்த்தவரை செந்திலை யாரும் பார்க்கவில்லை. சரண்யாவின் மயில்நடை கூட்டத்தில் எல்லோரையும் சும்மா விட்டுவிடுமா என்ன? இரண்டு கண்கள் அவளது ஒவ்வொரு நகர்வையும் பின்தொடர்ந்துகொண்டே இருந்தன. வலது புறத்தில் இருந்த வள்ளி கோயிலில்தான் அந்த ஒரு பார்வையில் சரண்யா செந்திலைச் சிறைப்பிடித்தாள்.‘பார்வையா அது! ஏழேழு ஜென்மத்துக்கும்


மீதி

 

 டாக்டர் அறையை விட்டு வெளியே வரும்போது சுபாஷ் அவர் புன்னகையை நினைவு படுத்திக்கொண்டான். கவர்ச்சிகரமான சின்னப் புன்னகை. ஒரு சிறிய ஒத்திகை. தமக்காக தாம் மட்டும் பார்த்துக் கொள்ளும் ஒத்திகை. சுலோசனாவிடம் போய் அதே மாதிரி சிரிக்க வேண்டும். நம்பிக்கை ஊட்டுகிற மாதிரி. அவள் நம்புகிற மாதிரி. சர்ரக்… சர்ரக் என்று நர்சுகளும் பேஷண்டுகளும் நடமாடுகிற ஷூ ஒலி. யாரோ ஒரு நர்ஸ் வார்ட் பாய் ஒருத்தனை மிரட்டுகிற குரல். எல்லாவற்றுக்கும் அப்பால் எதிரே வந்த சாமிநாதன்.


அவளும் அவனும்

 

 1 “விளக்கை அணைச்சுடட்டுமா?” வினயா விநோத்தை திரும்பிப் பார்த்தாள், அவளது உள்ளங்கையில் ஒரு மின்மினிப் பூச்சி ஊர்ந்து கொண்டிருந்தது. அது ஊர ஊர, அவள் உள்ளங்கை குறுகுறுத்தது. ஒரு லைட்டைப் போட்டுப் போட்டு அணைப்பது போல், மின்மினியின் வால்புறத்தில் மிளிர்ந்து அணையும் ஓர் ஒளித்துளி. திரும்பிய வினயாவின் முகவெட்டுத் தோற்றத்தில் ஒரு செல்லக் கோபம். இகழ்ச்சி. ‘சீ, நீ இவ்வளவு மட்டமா?’ “ஏய்.. வௌக்கை அணைச்சா மின்மினி எஃபெக்ட் நல்லாத் தெரியும்னு சொன்னேன்.” வைபவிகண்களைத் திருப்பி வினயா


மிஸ்டர் ராமுடு ஐ.ஏ.எஸ்

 

 கதை கேட்க:https://www.youtube.com/watch?v=0RAWV1-NK1U ஜி.வி.ராமுடு ஐ.ஏ.எஸ்., கிரீமைத் தடவி தலை வாரிக்கொண்டிருந்தார். கண்ணாடியில் தெரிந்த அவரது முகத்தைப் பார்க்க அவருக்கே திருப்தியாக இருந்தது. முன்னைவிட இப்போது சற்று சிவந்து விட்டிருப்பதுபோல அவருக்குத் தோன்றியது. ரஷ்யாவிற்குப் போய் ஒரு வருஷம் தங்கினால், இன்னும் நன்றாகச் சிவந்து விடலாம் என்று அவர் எண்ணினார். ரஷ்யா என்று எண்ணியதும், அவர் பார்வை கண்ணாடியிலிருந்து நகர்ந்து, சுவரின் நடுவில் மாட்டப்பட்டிருந்த காலண்டரின் பக்கம் பாய்ந்தது. ஏப்ரல் 24. அந்தத் தேதியைக் கண்டதும், அவரு டைய