கதையாசிரியர் தொகுப்பு: வைகறை கண்ணன்

10 கதைகள் கிடைத்துள்ளன.

மீண்டு வந்த தோடி!

 

 அந்த அதிகாலை வேளையில் முள்ளியாற்றின் கரையில் படபடப்போடு காத்திருந்தான், ஏகலைவன்! சலசலவென ஓடிக்கொண்டிருக்கும் முள்ளியாற்றுக்கோ அளப்பரியா சந்தோஷம். இரண்டுக்கும் ஒரே காரணம் தான். ஆம், டி.என்.ராஜரத்தினம் பிள்ளை! இசையை ரசிக்காத ஜீவன்கள் இந்த உலகத்தில் இருக்க முடியுமா என்ன? அதுவும் தோடி ராகம் புகழ் டி.என்.ராஜரத்தினம் பிள்ளை என்றால், ஜில்லா அத்தனையும் அவர் முன் கை கட்டி நிற்குமே! தோடியும் பிள்ளை அவர்களையும் பிரித்துப் பார்க்க முடியுமா? பிள்ளை அவர்கள் தோடி ராகத்தால் புகழின் உச்சம் தொட்டவர்.


நரபலி

 

 ஜோதிடர் சொன்னது அடிக்கடி ரகுபதி மனதில் நிழலாடிச் சென்றது. ”இன்னைக்கு நம்ம திட்டத்த எப்படியும் நிறை வேத்திடனும்” என்று மனதுக்குள் தீர்மானித்துக் கொண்டான். இப்பொழுதெல்லாம், தனது மகன் விக்னேஸ்வரனை வெறுப்புடன் பார்க்கத் தொடங்கியிருக்கிறான், ரகுபதி. அவனுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. ஹோட்டலில் ஏற்கனவே வேலை செய்த அனுபவம் இருந்ததால், திருமணத்திற்குப் பின் அவன் வசிக்கும் பகுதியிலேயே சிறிய உணவகம் ஒன்றைச் சொந்தமாக தொடங்கி நடத்தி வந்தான். தன்னிடமிருந்த பணத்தையெல்லாம் மூலதனமாக்கி நடத்தி வந்த


பரதனை இனி பார்க்க முடியாது!

 

 தகவல் தெரிந்ததும், மயிலாடும்பாறையிலிருந்து மூணு மைல் தூரத்திலிருக்கும் பரதன் தியேட்டர் இடிக்கப்படுவதற்கு வெகு முன்னாடியே அதிகாலையிலேயே தியேட்டரைச் சுற்றி கூட்டம் அலைமோதி நின்றது! சுத்துப்பட்டு கிராமங்களிலிருந்தும் சாரிசாரியாக கூட்டம் வந்து கொண்டிருந்தது. வண்டிமாடு கட்டியும், டிராக்டர் வைத்தும் தோட்டம் துறவுகளிலிருந்தும், காடு கரைகளிலிருந்தும், வயல்வெளி ஒத்தையடிப் பாதையெங்கும் ஜனத்திரல்கள் இன்னும் இன்னும் மேலே மேலே வந்த வண்ணமிருந்தனர். முப்பது வருசமாக மயிலாடும்பாறை கிராமத்திற்கு மட்டுமல்ல, சுத்துப்பட்டு அத்தனை கிராமங்களுக்கும் விவசாய கூலி ஜனங்களின் சந்தோசத்தின் அடையாளமாக இருந்த


அணில்,ஆடு,இரக்கம்!

 

 அணிலுக்கு மனது சரியாயில்லை! விடிந்தால் பக்ரித் பண்டிகை. பண்டிகைதின சந்தோஷம் சிறிதுமின்றி காணப்பட்டான். அவனது மனது முழுவதும் அந்த ஆடு பற்றிய சிந்தனை தான்! அணில் முகமதுவை எல்லோரும் அணில் என்று தான் அழைப்பார்கள். அணிலின் வாப்பா கறீம் பாய் இராமநாதபுரத்திலிருந்து தேடிப்பிடிச்சு பக்ரித் பண்டிகைக்காக வாங்கிவரப்பட்ட செம்மறி ஆடு தான், அந்த ஆடு! கொம்புகள் இரண்டும் நன்கு வளர்ந்து சுருண்டு சுருள் வடிவில் பக்க வாட்டில் நீண்டிருந்தது. குறுகிய வால்! அடர்த்தியான அதிக சுருள்களை கொண்ட


ஆதார்

 

 நெளிந்து நெளிந்து வளைந்து நீண்டிருந்தது பொதுஜன வரிசை. ஆதார் புகைப்பட மையம் திறப்பதற்கு முன்னாலேயே காலங்காத்தாலே வந்து வரிசையிலே கடைசி ஆளா நின்றிருந்த லட்சுமியம்மாள் மெல்ல மெல்ல நகந்து இப்போது தான் புகைப்பட மைய வாசலைத் தொட்டிருந்தாள்! லட்சுமியம்மாளுக்கு முன்னாடி இன்னும் பத்து பேர்கள் தான் இருப்பார்கள். ” அம்மாடி! பெரிய மலையைத் தாண்டி வந்தாப்புல இருக்கு. கூட்டமா இது? அகூரமான கூட்டமப்பா! ” லட்சுமியம்மாள் தனக்குள் ஆச்சரியப்பட்டுக் கொண்டாள். பெய்யாத மழை சென்னை நகரம் முழுதும்


ஞாபகம் வருதே!

 

 வழுக்குப்பாறை என்றாலே எங்களுக்கு எங்கிருந்து வருமோ அவ்வளவு சந்தோஷம்! கிருக்கன் ஜெயராஜ். மம்பட்டி மூக்கன் தெய்வேந்திரன். குள்ள மொக்கராஜ். வெந்தயன் செல்வம். ஒன்றக்கண்ணன் எங்க எல்லாருக்கும் வழுக்குப்பாறை என்றால் ரொம்பவும் இஸ்டம். எங்களின் குதூகலம். எங்களின் தேவதை. சந்தோஷத்தை வாரி வாரி வழங்கும் அற்புதம். எங்களின் பால்யத்தோடு கலந்துவிட்ட தோழன் என எங்களுக்கு எல்லாமே வழுக்குப்பாறை தான் ! வழுக்குப்பாறையை நம்பி சறுக்கி விளையாடும் குழைந்தைகளுக்கு எந்த கெடுதலும் நேராது. உடம்பில் எந்த காயத்தையும், உராய்வையும், தீங்கையும்


உயிர்

 

 சென்னை-வருசநாடு 163இ விரைவு பேருந்தில் பயணிகள் அனைவரும் தூங்கத்தொடங்கினர். என் மனசு இன்னமும் தவியாய் தவித்தது! என் அம்மாவுக்கு என்னமும் ஆகியிருக்கக்கூடாது. அம்மா…என்னுடன் சென்னையிலேயே நிம்மதியாக இருந் திருக்கலாம். என்னெ படிக்க வச்சு ….கல்யாணம் செய்து வச்சு… ஒரு தனியார் கம்பெனியில் டர்னர் வேலை கிடைத்ததால், அம்மா ஆசைப்பட்டது போல் எனக்கு நல்ல வாழ்க்கையும் அமைந்திருந்தது. என் மனைவிக்கும், அம்மாவுக்கும் அடிக்கடி ஏற்பட்ட மாமியார் மருமகள் சண்டையில்,ஒரு முறை நான் குறுக்கிட வேண்டிய தாகிவிட்டது. “ என்னங்கம்மா


பாசறைச் சிங்கம் பகவத்சிங் !

 

 நீராவி எப்போதும் என் பார்வையில் ஒரு புத்தகப் புழுவாகத்தான் தெரிந்தார். நீராவி என்கிற பெயா் ஏதோ வித்தியாசமாக தெரிகிறதா? அது, அவரது பெற்றோர்கள் வைத்த பெயா்தான். அவரது குல தெய்வமான நீர் காத்தலிங்கம் என்பதின் சுருக்கம் தான், நீராவி! அவர் யாரைச் சந்தித்தாலும் புத்தகத்தைப் பற்றியே தான் பேசுவார். புத்தகம் படியுங்கள். புத்தகம் படியுங்கள் என்று சதா அறிவுரைகள் வழங்குவார். அவரை தெரிந்தவா்கள் மத்தியில் அவருக்கு வைத்திருக்கும் பட்டப்பெயா் புத்தகப் பைத்தியம். தமிழ்வாணணுக்கு கறுப்புக் கண்ணாடி எப்படி


மாமழை போற்றுதும்!

 

 மூன்று மாத காலத்தில் பெய்ய வேண்டிய மழை, ஒரு சில நாட்களிலேயே கொட்டித்தீா்த்து, சற்று நேரம் மழை விட்டிருந்தது. இந்த மழையிலயும் அவங்கவங்க எப்படியெல்லாம் பொழப்பைப் பாக்குறாங்க! கொசுவத்திச்சுருள் பத்து ரூபாய். தீக்குச்சி தடிமத்துல மெழுகுவா்த்தி ஒண்ணு பத்து ரூபாய். பால் பாக்கெட் நூறு ரூபாய். தீப்பெட்டி அஞ்சு ரூபாய். சுடுதண்ணியா? டீத்தண்ணியா? கண்டுபிடிக்க முடியல! பத்து ரூபாய். ஊரே மழையில நடுங்குது, வாங்குற பொருளுக்கு விலை மட்டும் கொதிக்குது!. வீட்டுக்குள்ளாற இருக்குறவங்க எல்லாரும் வீட்டை விட்டு


எதிர்கால மாமனார்!

 

 எனது தூரத்து உறவினரும், எதிர்கால மாமனாருமான சேதுராமன் வந்திருந்தார். அவர் உப்பார்பட்டி எனும் கிராமத்திலிருந்து முதன் முதலாக சென்னை வந்திருக்கிறார். அவர் நல்ல உயரம். உயரத்திற்கேற்ற பருமன். கறுத்த நிறம். ஆரோக்கியமான உடம்பு. ஐயனார் சிலை மாதிரி பார்த்தாலே பயப்படுகிற கம்பீரம். அவருக்கு, மிகவும் நெருக்கமான ஒருவர் மின்சாரத்துறையிலே உயர் பதவியில் இருப்பதாகச் சொன்னார். என்னிடம், அவர் காண்பித்த ஒரு துண்டுச் சீட்டில் மைலாப்பூர் முகவரி இருந்தது. நானும், அவரும் மாநகரப் பேருந்தில் பயணம் செய்யத் துவங்கினோம்.