கதையாசிரியர் தொகுப்பு: வே.சிவராஜா

8 கதைகள் கிடைத்துள்ளன.

இனியும் முட்செடிகள் முளைக்கலாம்

 

 (இக்கதை பரிசு பெற்ற மூலக்கதையிலிருந்து மீள்வடிவமைக்கப்பட்டது) ‘ தம்பி! இனியும் பிரிவினையும் வேற்றுமையும் பேசித்திரிஞ்சு பிரயோசனமில்லை. அவங்கள் மட்டும் இனவாதம் பேசயில்லை. அவங்கள் மொழிச்சட்டம் கொண்டு வந்து இனவாதம் பேசின மாதிரி எங்கடை ஆக்களும் நாட்டைப்பிரிப்பம், எல்லை போடக் கிளுவங்கதியால் தாருங்கோ எண்டு பேசி சனத்தை உசார்படுத்தி விட்டதின்ரை பலன்தான் எங்களை இண்டைக்கு சாம்பல் மேட்டிலை கொண்டுவந்து விட்டிருக்குது . இனியெண்டாலும் இந்தக் கதையளை விட்டிட்டு சேர்ந்து போனாத்தான் எங்கடை சனத்துக்கு ஏதாவது கிடைக்கும். வாய்ப்புக்கிடைச்சால் நில்லும்.


கனபேர் வந்து போயிருக்கினம்

 

 கதைக்கிற ஒருத்தருக்கும் உண்மையிலை சனத்திலை அக்கறையில்லை, எல்லாரும் தங்கடை சுயநலத்துக்கும், நாங்களும் இருக்கிறம் எண்டு அடையாளம் காட்டவும் கதைக்கினம். இன்னொருத்தருக்கு ஒரு கஸ்டம் எண்டால் அரைவாசிப்பேருக்கு சந்தோசம். அரைவாசிப்பேருக்கு அக்கறையில்லை. உண்மையான அக்கறையுள்ளவன் கதைக்கமாட்டான், கதைக்கிறதைவிட செய்யவேண்டிய காரியங்கள் நிறைய இருக்குது’ அதிகமான சமூக அக்கறை காரணமாகவோ, இந்த சமூகக்கட்டமைப்பின் மீதான திருப்தியீனமோ, எனக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணமோ தெரியவில்லை, சரவணன் பேச்சில் எப்போதும் இப்படியான ஒருவித கோபம் தெரியும். இரண்டுமே மணல்தான் என்றாலும் வடமராட்சி


நான் கதை சொன்னால் கேட்காது

 

 மிகச் சிறிய குழந்தை, குழந்தை என்று கூட சொல்ல முடியவில்லை. சிசுபோலத் தெரிந்தது. விஞ்ஞான – உடற்கூற்றியல் விரிவுரைகளின் போது காண்பிக்கப்படுகின்ற ஒளிப்படங்கள், காணொளிகளில் இருப்பது போல தலைபெரிதாகத் தெரிந்தது. முழுமையாக வளர்ச்சியடையாதது போலத் தெரிந்த உடலைக் குறுக்கிக்கொண்டு படுத்திருந்த அந்தக் குழந்தையின் கால்களை கத்தரிக்கோல் போல இருந்த பெரிய ஆயுதமொன்றால் யாரோ நறுக்கினார்கள். குழந்தை வேதனையில் துடிப்பது தெரிந்தது. அவர்களிடம் எந்த சலனமும் இல்லை. தங்கள் காரியத்தில் கண்ணாக சாம்பாருக்கு கத்தரிக்காய் நறுக்குவது போல அனாயாசமாக


தமிழ் பௌத்தன்

 

 1 உலக போகம் குரல்வளையிலிருந்து கழுத்தின் பின்புறம் வரை வெட்டப்பட்டிருந்தது. கழுத்தின் முள்ளந்தண்டு; எலும்பு மட்டும் நறுக்கப்படாமல் தலையை உடலோடு இணைத்து வைத்திருந்தது. சிதைவில்லாத திருத்தமான வெட்டுக்காயம் மிகக்கூர்மையான ஆயுதமொன்றால் அறுக்கப்பட்டிருப்பதை ஊகிக்க வைத்தது. தலை பின்புறமாகச் சாய்ந்து வெட்டப்பட்ட காயப்பிளவு விரிந்து கருமையான பின்னணியில் பக்கவாட்டான பார்வைக்கு தெரிந்த காட்சி உயிரை நடுங்க வைத்தது. குரல்வளைப் பகுதியிலிருந்து வழிந்த குருதி முன்புற உடலெங்கும் பரவி நிலத்தையும் தொட்டிருந்தது. இவ்வளவிற்கும் வெட்டப்பட்ட மனிதன் விழாமல் பூமிக்கு செங்குத்தாக


ஊர்வன, நடப்பன மற்றும் பறப்பனவற்றைப் பாதுகாப்பதற்கான அமைப்பு

 

 ‘சட்டமும் நிர்வாகமும் சரியாக வேலை செய்யவேணும்;. இந்த இடத்திலை சரியான நேரத்திலை சரியான வேலை செய்திருக்கினம். இப்பிடிச் செய்தால்தான் நாங்களும் நின்மதியோடையும் பாதுகாப்பாயும் வாழலாம். பறிமுதல் செய்தது உண்மையாய் நல்ல வேலை. இப்பிடிச் செய்தால்தான் மற்றவைக்கும் ஒரு பயமிருக்கும். வந்தவன் போனவன் எல்லாரும் இந்த மண்ணை நாசப்படுத்தேலாது. அதுக்கு நாங்கள் அனுமதிக்கவும் ஏலாது இல்லையோ? ‘ மாலைநேரத்தில் காலைப்பத்திரிகையை காட்டி ஆவேசமாய் பேசிக் கொண்டிருந்தவரை எங்கேயோ பார்த்த ஞாபகமிருந்தாலும் உடனே நினைவு படுத்த முடியவில்லை. எனக்குள்ள குறைபாடுகளில்


மௌனமான நேரம்

 

 காலையில் மனைவி கொடுத்து அனுப்பிய மதிய உணவினை வேண்டா வெறுப்பாக சாப்பிட்டு முடித்த போது வழமைபோல ஒரு சிகரட் பிடிக்க வேண்டும் என்ற ஆவல் தொற்றிக் கொண்டது. கடையில் சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய செலவினையும் ஆரோக்கியக் குறைவினையும் கருத்தில் கொண்டு மதியச்சாப்பாட்டினையும் காலையில் வீட்டிலிருந்தே கொண்டு செல்வது என்ற என் மனைவியின் தீர்மானம் அவளின் ஏனைய தீர்மானங்களைப் போலன்றி கிரமமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துதில் அவள் தீவிரவாதியாகத் தொழிற்படுவதற்கு இன்னும் சில காரணங்கள் உண்டு. காலையிலேயே மதிய


சுகமாக அழ வேண்டும்

 

 “கஸ்டங்களும் பிரச்சினையளும் நடக்கிற காலத்திலைதான் பிள்ளை வேதனை. காலங்கடந்த பிறகு அதுகளை நினைக்கேக்கை இவ்வளவையும் தாண்டி வந்திருக்கிறம் எண்ட பிரமிப்பும், சந்தோசமும் வரும். ஆனால் சந்தோசங்கள் அப்பிடியில்லை நடந்து முடிஞ்சபிறகு காலங்கடந்து நினைக்கேக்கை நடந்ததெல்லாம் அப்பிடியே தொடர்ந்திருக்கக்கூடாதோ எண்ட ஏக்கமும் கவலையும் தான் மிஞ்சும்.” “நீ ஒண்டுக்கும் யோசியாதை பிள்ளை. எங்களுக்கும் விடிவுகாலம் வரும் அப்ப இதையெல்லாம் நினைச்சுப்பார் நான் சொன்னது சரியெண்டு விளங்கும்.” எதிர்காலம் என்பது என்னவென்றே தெரியாத சூழலில் யாரும் யாருக்கும் ஆறுதல் சொல்ல


எனக்குப் பயமாய்க்கிடக்குது

 

 ‘ஒருகாலத்திலை சரியெண்டு சொல்லப்பட்ட விசயம் இன்னொரு காலத்தில் பிழையாய் கேவலமானதாய் பேசப்பட்டிருக்குப்பிள்ளை. அஞ்சுபேருக்கு ஒருபொம்பிளை பெண்சாதியாய் இருந்ததைச் சரியெண்டு சொல்லியும் கதை வந்திருக்கு. ஒருத்தனுக்கு ஒருத்தி என்றும் ராமர்-சீதை கதை இருக்கு. இரண்டும் அந்தந்தக்காலத்துக்குச்சரி. காலம் மாறமாற நியாயங்களும் மாறும். இதுதான் சரியென்டு நிரந்தரமாய் ஒண்டும் இல்லைப் பிள்ளை. நீ ஒண்டைப் பற்றியும் யோசிக்காதை. இஞ்சை நாங்கள் உயிரோட இருக்கிறது தான் பெரிய விசயம்.’ நலன்புரிமுகாமில் இருந்து முதற்கட்டமாக அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டபோது விடுதலையாகிச்சென்றுவிட்ட இந்ததத்துவ