கதையாசிரியர் தொகுப்பு: வே.குருநாதன்

3 கதைகள் கிடைத்துள்ளன.

ஆடம்பரம்!

 

 தினசரி உடுத்தும் புடவையாகட்டும், தினுசு தினுசாய் அணியும் நகைகள் ஆகட்டும், வீட்டு உபயோகப் பொருட்களுமே ஆகட்டும்… இன்று இந்த நிமிடம் சந்தைக்கு வருவதையே, முதல் ஆளாய் வாங்கி வந்து, அடுத்த வீடுகளின் பிரமிப்பான பார்வைக்குள்ளாக்குவதே, தன் மதிப்பை உயர்த்தும், தன் தகுதியை உயர்த்தும் என்ற கொள்கைக்காரிதான் வேதவல்லி.கல்லூரிக்கு ஓட்டிச்செல்லும் டூவீலர், கையில் எடுக்கும் மொபைல் போன், தேர்ந்தெடுத்து அணியும் சட்டை, அதில் தெளித்துக் கொள்ளும் சென்ட்… இப்படி, தான் வாங்குவதிலும், தாயின் கொள்கையே, தன் கொள்கையாய் வைத்திருந்தான்


நல்லதோர் வீணை!

 

 சென்ற நூற்றாண்டின், நாற்பதுகளில் நம் நாட்டின் குக்கிராமங்கள் என்பவை, குகைகளை விட கொஞ்சம் வெளிச்சமானவை என்பது தான் உண்மை. மின்சாரம் கிடையாது, சாலை வசதி, தபால் தகவல் தொடர்பு, எந்த வசதியுமே இல்லாத இருண்ட தீவுகளாகத் தான் இந்தியக் கிராமங்கள் இருந்திருக்கின்றன. அப்படியொரு கிராமத்தில், படிப்பறிவே இல்லாத ஒரு பாமரனுக்கு மனைவியாய், பதினாறு வயதில், தன் வாழ்வை பலிகொடுத்த, பரிதாபத்திற்குரியவள்தான் என் அம்மா கல்யாணி. அவர் தந்தை அதாவது என் தாத்தா, ஒரு கர்நாடக சங்கீத வித்வான்.


தகுதி

 

 இருபத்தி ஆறு வயது வரை, எந்த வேலைக்கும் போகாமல், ஊர் சுற்றும் வேலையை மட்டுமே ஒழுங்காய் செய்து வந்த மகன் செல்வ கணபதியை பற்றிய கவலையிலேயே, கண்ணை மூடி விட்டார் ராமசுப்பையா. அவர் இறந்த பின், இருந்த காடு கரையை விற்றதில், கணபதியின் கையில், இருபது லட்சம் ரூபாய் மிஞ்சியது. அவனது ஒரே அக்காவான அரியலூர்க்காரி பங்கு கேட்க வந்து நின்றாள். “வேண்டாம்… அவன் ஏதாவது ஒரு தொழில் செய்து முன்னேறட்டும்… நீ எதுவும் கேட்காதே…’ என்று