கதையாசிரியர் தொகுப்பு: வினோத்சந்தர்

4 கதைகள் கிடைத்துள்ளன.

கண்ணா, லட்டு திங்க ஆசையா ?

 

 2019 ஆண்டின் தீபாவளி நாள் . பேரரசன் நரகாசுரனை வாழ்த்தியும் , தீபாவளி வாழ்த்து சொல்லியும் whatsup செய்திகள் வந்து கொண்டிருக்க , மதியம் ஒரு மணிக்கு , ஒரு கார்கள் கூட இல்லாத பார்க்கிங் லாட்களை பார்த்தபடி , நான்கு நாட்களுக்கு முன் செய்த “காளிபிளார்” குழம்பை சாப்பிடலாமா வேண்டாமா என யோசித்துக்கொண்டிருக்கையில் , லட்டு சாப்பிட வேண்டும் என்று கட்டுக்கடங்காமல் ஒரு வெறி வந்தது “கார்த்திக்” ஆன எனக்கு , கூடவே வந்தது “கீர்த்தனாவும்”


ஒரு பாடம்

 

 ஜனவரி மாதத்தின் இறுதிக்கட்டத்தில் குளிரும் குளிர் சார்ந்த இடமுமாக மாறிப்போன மிச்சிகன் மாநிலம் . அண்டார்டிக்காவிலும் , மிச்சிகனிலும் ஒரே விதமான குளிர் -34 . பாதரசத்தின் அளவு கீழே இறங்க இறங்க குளிரின் அளவு மேலே ஏறிக்கொண்டிருந்தது . -50 வரை போக வாய்ப்பிருப்பதாக அலறிக் கொண்டிருந்தன செய்தித்தாள்கள் . polar vortex என்று தினுசாக ஒரு பெயரை சொன்னார்கள் . விளக்கத்தை தேடினால் , வட துருவத்தில் இருக்கும் காற்று மண்டலத்தில் அழுத்தம் அதிகமாகி


கேள்விக்கென்ன பதில்

 

 என் அருமை மகள் அவள் அம்மாவின் மூலமும், கார்ட்டூன்களின் மூலமும் எண்களை கற்றுக் கொண்டிருக்கிறாள். ஆனால் கேள்வி கேட்டு முழிக்க வைப்பது மட்டும் என்னிடம் . அறிவாளி என்று நினைத்து கேட்கிறாளோ இல்லை எப்படியும் தெரிய போவதில்லை கேட்டு வைப்போம் என்று கேட்கிறாளோ தெரியவில்லை . நாங்கள் சென்ற கடையில் நிறைய லேன்கலில் எண்கள் இடம் பெற்று இருந்தன . அதனை பார்த்துக் கொண்டிருந்த மகளை, ‘என்ன கண்ணு பார்க்கிறாய்?’ என்று கேட்டுவிட்டேன். அமைதியாக இருந்திருக்கலாம். ‘அப்பா


அது ஒரு “கறி”க் காலம்!

 

 முந்தாநாள் தான் இந்தியாவில் இருந்து வந்தேன். இந்த இந்தியா பயணத்தில் போய் இறங்கிய முதல் நாள் காலையில் இட்லி குடல் குழம்புடன் ஆரம்பித்து , பயணத்துக்கு முந்தைய தினம் மாரியம்மன் பொங்கலும் , கறி விருந்தும் என்று முடிந்த காலம் முழுவதும் கறிக்காலமாக இருந்தாலும் ( அதிலும் இந்த பொங்கல் வைத்து குழைந்து போன வெள்ளை சாப்பாட்டில் அப்படியே எலும்புக் குழம்பை பிசைந்து அடிப்பது தனி சுவைத்தான் ) , அதற்கும் மேல் என்ற அனுபவத்தை தந்த