கதையாசிரியர் தொகுப்பு: வினிதா மோகன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

பகுத்தறிவின் சிறப்பு – ஒரு பக்க கதை

 

 ‘அம்மா… எங்க கிளம்பிக் கிட்டு இருக்கீங்க’ என்று நறுமுகை கேட்க, ‘மாலதி அக்காவுக்குக் குழந்தை பிறந்திருக்கு பார்க்கப் போறேன்’ என்றார் அம்மா. ‘சரி, சீக்கிரமா வந்துருங்க..’. ‘வந்தர்றேன் ஹீட்டர் போட்டு வை வந்ததும் குளிக்கணும்’. ‘குழந்தையைத் தான பார்க்கப் போறீங்க அதுக்கு எதுக்கு வந்து குளிக்கவேண்டும்..?’ என்று கேள்வி கேட்டாள் நறுமுகை. ‘அதெல்லாம் தீட்டு.., உனக்குப் புரியாது.’ என்றார் அம்மா. நறுமுகை சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்தாள். ‘ம்மா… முறையாகப் பார்த்தால் குழந்தையைப் பார்க்கப் போறவங்க


அகத்தினியனின் அகம்

 

 எங்கும் வண்ணவண்ணத் தோரணங்கள், ரம்மியமான இசை முழங்கும் ஒரே பரபரப்பு. மாணவர்களின் கொண்டாட்டத்தில் அந்த அரசு கலைக் கல்லூரியே களைகட்டி இருந்தது. இரண்டாம் ஆண்டு மாணவர்கள் கல்லூரியின் பிரதான மண்டபம் முன் அழகான உடைகளுடன் இறுதியாண்டு மாணவர்களை வரவேற்கக் காத்திருந்தனர். கல்லூரி வழக்கமே அமர்களப்பட்டது கல்லூரி வளாகத்தின் மரங்கள் எல்லாம் மாணவர்களுக்குக் குடையாகி கதிரவன் கண்ணிலிருந்து மறைத்து நின்று அன்பை, பசுமையான நினைவுகளை, அவர்கள் ஆட்டோகிராப் வாங்கும் சுழலாகியிருந்தது. இறுதி ஆண்டு மாணவர்களுக்கான பிரிவு உபசார விழா ஏற்பாடுகள் மும்மரமாக நடந்து கொண்டு இருந்தன. கல்லூரி