கதையாசிரியர் தொகுப்பு: விடுதலை மணி

1 கதை கிடைத்துள்ளன.

மருத வஞ்சம்

 

 “இவொள நாழியா எவ கால்லடா விழுந்து கெடந்த, ஊருச்செருக்கியளோட சேக்கதான்டா சோறு போட போவுது” கனகாத்தாள் இரைச்சலை பொருட்டாகவே மதியாமல் வீட்டினுள் நுழைந்தான் ராசு, அவனுக்கு மூன்று வயதிருக்கும்போது அவன் பெற்றோர்கள் ஒரு விபத்தில் இறக்கவே, பாட்டி கனகாத்தாள் வீட்டில்தான் வளர்ந்து வந்தான். “யாருச் சொன்னாவோ பொம்புள பின்னாடித் திரியிரும்னு, ஓன் சோலியப்பாரு, சோத்தப் போடு மொதல்ல, ச்சும்மா எப்பயும் கத்திக்கிட்டு” சோத்துப்பானையும், குழம்புச்சட்டியும் அவன் அருகில் வந்தது, பனையோலை வேய்ந்த அந்த வீட்டினுள் படுத்து காலை