கதையாசிரியர் தொகுப்பு: வாணமதி

5 கதைகள் கிடைத்துள்ளன.

வாழப்பழகிவிட்டாள்…

 

 ஏனம்மா என்னை இலண்டன் அனுப்பினீங்க சொல்லுங்கம்மா!எனக்கு இங்க பிடிக்கல்ல அம்மா நான் உங்களுடனும் அம்மம்மாவுடனும் தாத்தாவுடனும் அப்பம்மாவுடனும் நல்லா ஜாலியா இருந்தேன்.இங்க ஒரே போர் அம்மா.எனக்கு பிடிக்கல்ல அம்மா என்னை கூட்டிட்டு போங்கம்மா பிளீஸ் ….எனகண்களில் நீர் முட்ட ஸ்கைப்பில் விம்மினாள் ஆராதனா. தாயுள்ளம் தவியாய் தவித்தது.இந்த மூன்று வயதுக்குழந்தைக்கு எதை எப்படிச் சொல்வேன்.இறுக்கத்துக்குப் பழக்கப்படுத்திவரும் மனதுடன் இங்க பாரு ஆரா… நீ மாமாவுடனும் அத்தையுடனும் இருந்து நல்லா படி நான் கெதியில வேலையெல்லாம் முடிச்சுட்டு எல்லாரையும்


கலைந்த கனவு…

 

 காதலில் மயங்கி ராஜா மார்பில் சாய்ந்திருந்தாள் சம்யுகி.எந்த சிந்தனையும் இல்லாமல் ஏதோவொரு அமைதி கிடைத்ததாக உள்ளுணர்வு சொன்னது. நீண்ட மூச்சை இழுத்து விட்டவளை … கண்களால் மேய்ந்த ராஜா என்ன ? என்றான்! பதிலை இளமுறுவலாக கொடுத்தவள் கண்களை இறுகமூடிக்கொண்டாள். அவளுக்குள் இருக்கும் இந்த அமைதி அவனுக்கும் ஏற்பட்டிருக்குமா? அல்லது தான் ஆசைப்பட்ட பெண் தன் மார்பில் என்ற மனோநிலையில் இருக்கிறானா? அல்லது …. அல்லது….இந்த நிமிடம் சந்தோஷம் அவ்வளவுதான் என்று யோசிப்பானோ? இத்தகைய சிந்தனையோட்டங்களை ஒன்றன்பின்


உபதேசம்…

 

 நெஞ்சுக்குள் ஏதோ பிசைவது போல மாதுமைக்குத் தோன்றியது.இன்று அவள் தன்னந்தனியாக டாக்டரை பார்க்கப்போகிறாள்.அதுவும் சுவிசுக்கு வந்து மூன்று வருடம் கடந்த நிலையில் தன்னந்தனியாக தனது கணவனாகிய செல்வம் இல்லாமல் ……. அடிவயிற்றில் புளியை கரைத்தது போல ஏதோ பயமாகவே இருந்தது.பல முறை டாய்லட்டுக்குள் போய் வந்து விட்டாள்.இன்று காலை பத்துமணிக்கு டாக்டரை பார்க்க வேண்டும்.ஆனால் காலை ஆறு மணியிலிருந்தே பரபரப்பாக அங்கும் இங்கும் நடந்து விட்டாள்.சீ…என்ன சிறுபிள்ளைத்தனம்! ஈழத்தில் தனியாக எல்லா இடமும் போகவில்லையா? இல்லை படிக்கத்தான்


தமிழருவி

 

 ” தமிழருவி..”.. அம்மா…எனக் கத்தியவாறு தமிழருவி வீட்டுக்குள் ஓடி வந்தாள்.சமையலறையில் கோழிக்கறியை புரட்டிக்கொண்டிருந்த வாசுகி குழந்தைக்கு ஏதோ ஆயிற்று என்று தாய்க்கு உரிய பதட்டத்தில் அரக்கப்பரக்க ஓடி வந்தாள். குட்டி மானைப்போல ஓடி வந்து தாயை கட்டிக்கொண்ட தமிழருவி தனது மருண்ட விழியில் கண்ணீர் வழிய மெல்ல மெல்ல விசும்பினாள்.மனதுக்குள் பதட்டம் தொற்றிக்கொள்ள மூளை எல்லையற்ற கற்பனைகளை சித்தரித்துக் கொண்டிருந்தது.ஓரளவு குழந்தை சமாதானம் அடையும் வரை மூச்சை பிடித்துக்கொண்டு பொறுமையாக குழந்தையின் தலையை தடவிக்கொண்டிருந்தாள் வாசுகி. மெல்ல


ஞானம்

 

 இன்று சித்திராப்பௌர்ணமி இந்த உலகத்தினை நமக்கு அடையாளப்படுத்திய தாயவள் நம்மை விட்டுச் சென்றாலும் அவளின் உன்னதங்களை ஞாபகப்படுத்திச் செல்லும் நாள்..இதனை மறவாத தாமரை கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டை இரண்டு படுத்துக்கொண்டு இருக்கிறாள்.சமையலறையில் அவள் செய்யும் ஆரவாரம் இறந்து போன பாட்டிக்கும் கேட்டு விடும் போல இருந்தது. இலைதுளிர் காலத்தின் இதமான குளிரில் சுருண்டு படித்திருந்த அர்ச்சனாவுக்கு ஒன்றுமே புரியவில்லை.இந்த அம்மா நேற்று வேலைமுடிந்து வீட்டுக்கு வந்து சேர இரவு பத்துமணியாயிற்று அதற்கு பிறகு சில வீட்டு