கதையாசிரியர் தொகுப்பு: லட்சுமி வெங்கட்ராமன்

1 கதை கிடைத்துள்ளன.

புதை மேடு!

 

 தொலைவில் தெரிந்தது புதைமேடு. அதன் நாற்புறங்களிலும் வயற்காட்டில், பச்சைப் பசேலென்று நெற்பயிர் வளர்ந்திருந்தது. தங்களுக்கு நடுவே ஒரு கோரமான நிகழ்வு நெடுங்காலமாக நடந்து கொண்டிருப்பது தெரியாதது போல், நீரில் நின்று, காற்றில் தலை ஆட்டிக் கொண்டிருந்தன கதிர்கள். காற்று வீசும் திசையில் அவை, உடம்பை வளைத்து, தலையை சாய்த்துக் கொள்வதும், காற்று நின்றதும், மறுபடியும் நின்ற இடத்திலேயே ஆடாமல், அசையாமல், வளையாமலும் நின்று கொண்டுமிருந்தன. இடுப்பில் மூங்கில் கூடையுடன், புதைமேட்டை நோக்கி, வயல் வரப்பின் மீது நடந்து