கதையாசிரியர் தொகுப்பு: ரேணுகா விசுவலிங்கம்

3 கதைகள் கிடைத்துள்ளன.

பார்வை

 

 அலுவலக கடிகாரத்தில் மணி சரியாக ஐந்தரை என்று காட்டியது. அலுவலகத்தில் முக்கால்வாசி பேர் வீட்டிற்குப் பரப்பரப்பாகக் கிளம்பிக் கொண்டிருந்தனர். அல்லியும் இன்னும் முடிக்காமல் இருக்கும் வேலைகளை அழகாக ஒரு புறமாக ஒதுக்கி வைத்துவிட்டு, மறுநாள் முக்கியமாகச் செய்ய வேண்டிய வேலைகளை மட்டும் மேஜையின் முன்பக்கம் எடுத்து அடுக்கி வைத்துவிட்டு வீட்டிற்குக் கிளம்பத் தயாரானாள். நாள் முழுவதும் கண்களுக்கு ஓய்வு கொடுக்காமல் கணக்கு வழக்குகளைப் பார்ப்பதனால் அவளுக்கு அடிக்கடி தலைவலி வரும். அன்றும் அவள் தலைவலியுடன் போராடிக் கொண்டிருந்தாள்.


என்றும் காதல்!

 

 “சுமதி. இப்படி கொஞ்சம் வாம்மா.” முத்துராமன் தன் பேத்தியைப் பக்கத்தில் அழைத்தார். “என்ன தாத்தா? நான் அவசரமா சின் மிங் கூட விளையாட கிளம்பிட்டு இருக்கேன்.” “இல்லை, விடிந்ததிலிருந்து உன் பாட்டியைக் காணோமே. அதான் பாட்டியை எங்கேயாவது பார்த்தியான்னு கேட்கத்தான் கூப்பிட்டேன்.” “போங்க தாத்தா. நான் எவ்வளவு அவசரமா ‘பார்பி’ டால் மீட்டிங்க்குப் போய்க்கொண்டிருக்கேன். நான் பாட்டியை எங்கும் பார்க்கவில்லை. பை தாத்தா.” பட்டுன்னு கூறி பக்கத்து வீடு சீனத் தோழியைச் சந்திக்கச் சென்றுவிட்டாள் 6 வயது


போராட்டம்

 

 கடல் அலைகள் ஓயாமல் அடித்துக்கொண்டே இருக்கின்றன. எப்போதும் கரையை நோக்கி வந்து கொண்டேதான் இருக்கின்றன. கரை மீது அவைக்கு என்ன கோபமோ…. சீற்றத்துடன் சீறிக்கொண்டு ஆவேசமாக அடித்துக் கொண்டிருந்தன. மணலில் ஒரு சிறிய கடல் நண்டு தன் வளைக்குள் செல்லப் போராடிக் கொண்டிருந்தது. வளையின் அருகில் செல்லும்போது அலை அதைக் கரையை நோக்கித் தள்ளிவிடுகிறது. நண்டும் விடாமல் வளையின் உள்ளே செல்ல முயன்று கொண்டேயிருந்தது. எதைப் பற்றியும் கவலை இல்லாமல் கடற்மணலில் வீடு கட்டி மகிழ்ச்சியாக விளையாடிக்கொண்டிருந்த