கதையாசிரியர் தொகுப்பு: ராஜ்திலக்

3 கதைகள் கிடைத்துள்ளன.

சந்தேகத்தின் பலன்

 

 கோர்ட்டில் ஒரு கொலை வழக்கு. குற்றவாளி கொலை செய்திருப்பதற்கான பலமான சாட்சிகளும் ஆதாரங்களும் இருந்தன. ஆனால், கொலை செய்யப்பட்டதாகச் சொல்லப்பட்ட உடல் மட்டும் கிடைக்கவில்லை. விடுவாரா, குற்றவாளியின் வக்கீல்? இதை வைத்து, ஒரு தந்திரம் செய்ய எண்ணினார். ”கனம் கோர்ட்டார் அவர்களே, என் கட்சிக்காரர் யாரைக் கொலை செய்ததாகச் சொன்னீர்களோ, அவர் வெளியில்தான் நின்றுகொண்டு இருக்கிறார். உங்கள் அனுமதியோடு அவரை உள்ளே அழைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு, வாசல் பக்கம் பார்த்தார். அத்தனை பேரின் கண்களும் ஆவலோடு வாசல்


இரண்டு பொய்யர்கள்!

 

 கேசவன் கம்ப்யூட்டரை ஷட்டவுன் செய்துவிட்டு, சட்டைப் பையில் சினிமா டிக்கெட் இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக்கொண்டு, தன் பையை எடுத்துக்கொண்டு மேனேஜரின் அறைக்குச் சென்றான். ”சார்! ஹாஃப் டே லீவு வேணும். என் வொய்ஃபுக்கு ரொம்ப உடம்பு சரியில்லை. அவளை ஆஸ்பத்திரிக்கு அழைச்சுட்டுப் போகணும்!” என்றான். அவனை சில விநாடி நேரம் உற்றுப் பார்த்த மேனேஜர், ”ஸாரி கேசவன், உங்க லீவை சாங்ஷன் பண்ண முடியாது! போய் உங்க வேலையைப் பாருங்க!” என்றார். ”ஏன் சார்?” ”நீங்க பொய்


அப்பாமார்களும் அண்ணன்மார்களும்!

 

 மகாதேவன் மேனேஜராகப் பணியாற்றும் கம்பெனியில் ஸ்டெனோவாக இருப்பவள், 22 வயது சுமித்ரா. சங்கோஜமின்றி சக ஊழியர்களை ஆண், பெண்பேதமின்றி தொட்டுத் தொட்டுப் பேசுவாள்.சகஜமாகப் பழகுவாள். மகாதேவனிடமும் அப்படி நெருக்கமாகவே பழகினாள். மனதில் கல்மிஷமில்லாமல் வெகுளியாய் அவள் பழகுவது புரிந்தாலும் வயதில் இளையவர்களிடமும் அவள் அப்படிப் பழகுவது நெருடலாக இருந்தது அவருக்கு. குறிப்பாக அன்றைக்கு, எதையோ மகேஷிடமிருந்து பிடுங்க அவள் முயல, அவன் கைகளைப் பின் பக்கம் கொண்டுபோக, அவள் அவன் கைகளை முன்னுக்கு இழுத்து, விரல்களைப் பிரித்து…