கதையாசிரியர் தொகுப்பு: ரமேஷ் கல்யாண்

4 கதைகள் கிடைத்துள்ளன.

நெனப்பு

 

 தினமணி – நெய்வேலி புத்தகக் கண்காட்சி – 2015 சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு ரூ.1,250 பெறும் சிறுகதை ஏழெட்டு மணிநேர பயணக் களைப்பிற்குப் பின் ஓட்டலைத் தேடிப் பிடித்து உள்ளே நுழைந்தவுடன் படுக்கையில் விழுந்தால் போதும் என்றிருந்தது. அலுப்பைத் தரும் நெடுநேர பேருந்துப் பயணம். உடலையே குலுக்கிப் போட்டது போல மோசமான சாலைகள். ஊமை வெயில். ஜன்னல் வழியாக அறையும் காற்று. உட்கார்ந்து வந்ததே ஓடிவந்ததைப் போன்ற களைப்பைத் தந்திருந்தது. உள்ளே வந்தவுடனேயே அனைவரும் கழிப்பறைக்கே


சால மிகுத்து

 

 கழற்றாத கண்ணாடியுடன் முகவாய் நெஞ்சைத் தொட நாற்காலியில் உட்கார்ந்தபடியே தூங்கிக் கொண்டிருந்த அப்பாவைப் பார்ப்பதற்கு, ப்ளஸ் டூ படிக்கும் அவரது மகள் சவிதாவுக்குக் கஷ்டமாக இருந்தது. சொன்னால் கோபப்படுவார் அல்லது அறிவுரை சொல்லுவார். இரண்டுமே அவஸ்தை. “”உக்காந்து தூங்கறதுக்கு படுத்து தூங்கலாமில்லையா?” என்ற அம்மாவின் குரலுக்கு விழித்தவர், தாடையின் தூக்க எச்சிலை துடைத்துக் கொண்டார். விடிகாலையில் வெளியூரிலிருந்து வந்தவுடனே அலுவலகம் சென்று வந்த அலுப்பில் கண்கள் சிவந்திருந்தன. “”போய் படுத்துக்கோங்கப்பா. இன்னும் ஒரு சேப்டர் முடிச்சுட்டு தூங்கறேன்.


காற்றின் விதைகள்…

 

 வெகுநேரமாகியும் வீட்டு வேலைக்கான உதவிப்பெண் சாலம்மா வரவில்லை என்பதால், தேடிக்கொண்டு போனபோது அவள் காவேரி நகர் வீட்டுக்கு வேலைக்குச் சென்றிருப்பதாய்ச் சொன்னார்கள். மொபெட்டில் சென்றபோது அவ்வீட்டை தூரத்திலிருந்தே பார்க்க முடிந்தது. மினி வேன் ஒன்றில் தட்டுமுட்டுச் சாமான்களுக்கு சிகரமாக நாற்காலி ஒன்று மல்லாக்கவைத்து அடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அழைக்க வருவதை கவனித்துவிட்ட சாலம்மா வேகமாக வந்து, “”இன்னிக்கு வர்றத்துக்கு ஆவுறதில்லை. இங்க சொல்பா கெலசா (கொஞ்சம் வேலை) இருக்கு” என்றாள் கன்னடம் பிணைந்த தமிழில். “”ஏன்? என்னாச்சு?” என்றபோது,


போன்சாய் மனங்கள்

 

 அதுவரை ஜன்னலில் காத்துக் கொண்டிருந்த ஞாயிறு காலை வெளிச்சம், திரைச்சீலை இழுக்கப்பட்டவுடன் சட்டென ஹாலில் விழுந்து ஒளியும் நிழலுமாக அப்பிக்கொண்டது. மோகனுக்குக் கண் கூசியது. திரும்பி பாத்ரூமுக்குப் போகும்போது ஹாலின் இடப்புற ஓரமாக தூக்கத்தின் சுதந்திரத்தில் படுத்திருந்த வேலைக்காரியின் மேல் தேங்கிய பார்வையை மீட்டு ஃபேனை நிறுத்திவிட்டு முகம் அலம்பப் போனான். ஞாயிற்றுக்கிழமைகளுக்கேயுரிய உப்பிய கண்கள். திரும்பி வந்து செய்தித்தாளைப் புரட்டியபோது வந்து காபி தந்துவிட்டுப் போனாள். செல்போன் ஒலியற்று “ட்ர்ர்… ட்ர்ர்…’ என்று அதிர்ந்தது. அசுவாரசியமாக