கதையாசிரியர் தொகுப்பு: யோகி

1 கதை கிடைத்துள்ளன.

தேங்கும் மழைத்துளிகள்

 

 தலைநகரிலிருந்து சில மைல் தூரத்தில் அமைந்திருக்கும் ஆயேர் பானாஸ் எனும் இடத்தில் நுழைந்தால் வரிசையாகப் பணக்காரர்களின் மாளிகைப்போல் வடிவிலான வீடுகள். அத்தனை வீட்டின் முன்பும் நான்கு ஐந்து வெளிநாட்டு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது கட்டாயமாக்கப்பட்டிக்கிறதோ என கடந்து செல்லும் போதெல்லாம் தோன்றும். அந்தப் பாதையில் ஆயேர் பூத்தே, ஆயேர் ஹித்தாம், ஆயேர் ஜெர்னி, ஆயேர் பினாங் என்று தண்ணீரை இத்தனை வகையில் தரம் பிரிக்கலாமா என்று வியக்க வைக்கும் அளவுக்கு பலவாறாகப் பிரியும் சிறிய சாலைகளுக்குப் பெயர்