கதையாசிரியர் தொகுப்பு: யுகபாரதி

1 கதை கிடைத்துள்ளன.

காமூஷியாவும் கருணாகரனும்

 

 ‘எழுதத் தெரியும் என்ற ஒரே காரணத்துக்காக கதை வேறு எழுத வேண்டுமா? என யோசித்து இத்தனை காலம்வரை ஒரு கதைகூட எழுதாமல் போய்விட்டேன். இப்போது எழுதி யார் சாபத்துக்கு ஆளாகப்போகிறேனோ?’- கருணாகரனுக்கு அவ்வப்போது இம் மாதிரி எண்ணங்கள் வருவது உண்டு. எதைச் செய்தாலும் அதைச் செய்வதற்கு முன்பே நூத்தி எட்டு முன் அபிப்ராயம் வந்துவிடும். அந்த அபிப்ராயத்துக்கு அவனே மரியாதை தராததுதான் இதில் விசேஷம். சமீப காலங்களில் அவனுக்கு ஒரு காதல் வந்து, அந்தக் காதல் அவனை