கதையாசிரியர் தொகுப்பு: மு.குலசேகரன்

1 கதை கிடைத்துள்ளன.

ஆறு ஓடிய தடம்

 

 இதுவரையில் மற்றவர்களால் அதிகம் அறியப்படாத எங்களூருக்கு ஒளிப்பதிவாளர் ஆறுமுகத்துடன் வைஜெயந்தி வந்தார். வழியில் காத்திருந்து அவர்களை வரவேற்றேன். ஆட்டோவை அனுப்பிவிட்டு வைஜெயந்தி “நல்லாயிருக்கீங்களா? பார்த்து ரொம்ப நாளாகுது . . .” என்றார். “ஆமா, கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவில கடைசியா சந்திச்சது” என்றேன். நண்பர் நடத்திய அந்தக் கூட்டத்தில் படமெடுத்து முடித்ததும் ஒளிப்பதிவாளரை அனுப்பிவிட்டு வைஜெயந்தி முழு நாளும் கலந்துகொண்டார். அவர் சார்ந்த தொலைக்காட்சியில் ஏதோ ஒரு நிகழ்ச்சியில் கவிதைப் புத்தகம் வெளியிடுவதைக் கொஞ்ச நேரம்