கதையாசிரியர் தொகுப்பு: முத்து சுப்ரமணியன்

7 கதைகள் கிடைத்துள்ளன.

வாத்தியார் பெரியப்பா

 

 கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து கொண்டிருந்த நேரம். உண்டு களைத்த ஒரு மதிய வேளை. ஸ்டிரெந்த் ஆப் மெட்டெரியல்ஸ் என்ற ஏற்கனவே மொக்கையான ஒரு சப்ஜக்டை படு மொக்கையாக்கி தாலாட்டு பாடி கொண்டிருந்தது, கோமளா மேடம். தீடீரென்று அப்பா வந்தார். ஏதோ பேசினார்.. உள்ளே வந்து தூக்க கலக்கத்தில் இருந்த என்னை பார்த்து ‘You can Go’ என்றது மேடம். நானும் பையய் தூக்கிக்கொண்டு பக்கத்தில் இருந்தவனிடம் நோட்ஸ் எடுக்க சொல்லிவிட்டு வெளியே வந்தேன். “என்னப்பா ஆச்சு”?


ஒரு பிறப்பும் மறுபிறப்பும்….

 

 ஜூன் பத்து என்று நாள் கொடுத்திருந்தார்கள். வழக்கம்போல் வாரா வாரம் செக் அப் போவது போல் அன்றும் சென்றிருந்தாள். அன்று சனிக்கிழமை . இரவு டிக்கட் புக் செய்யபட்டிருந்தது . அலுவலகத்தில் இருந்து சற்று முன்னதாக புறப்பட வேண்டும் . இதே நாள் அடுத்த வாரம் பாப்பா கையில் இருக்கும் என்று நினைத்து கொண்டே கிளம்பினேன் . பெண் குழந்தையா இல்லை பையனா ? ஸ்கேனில் தெரிந்து கொள்ள முயற்சி செய்யவில்லை . ஒன்பது மாதம் உள்ளே


ஓர் இரவு

 

 அப்பொழுது இரண்டாம் ஆண்டு கல்லூரியில் பயின்று கொண்டிருந்த நேரம். Group Study என்ற பெயரில் ஒவ்வொருவர் வீடாக மாறி மாறிபடித்தோம்.இல்லை அப்படி சொல்லிக்கொள்வோம். அன்று ரகு வீட்டில் என்று முடிவானது. வழக்கம் போல் இரவு ஒரு கடைக்கு சென்று மூக்கு பிடிக்க சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு வந்தோம். ரகு மற்ற பைய்யன்களை போல Hosteliல் தங்காமல் வீடு எடுத்திருந்தான்.தனி வீடாக இருந்தது. சுற்றிலும் புறம்போக்கு நிலம் தான்.எப்படி தான் அப்படி ஒரு வீடை தேடி பிடித்தான் என்று


ஒரு அதிகாலை மரணம்

 

 1 மிகவேகமாக அந்த திருப்பத்தில் திரும்பிக்கொண்டிருந்தேன்.எதிரே வந்த கண்டெய்னர் லாரி கண்ணுக்கு தெரிந்து சுதாரிப்பதற்குள் ‘படார்’ என்று என் மீது இடித்து ஆறடிக்கும் குறையாமல் பறந்து மின்கம்பத்தில் மோதி……. கண் விழித்து பார்த்தேன். உடல் முழுவதும் வேர்த்திருந்தது. கெட்ட கனவு. இருட்டில் கட்டிலை தடவி மொபைலை எடுத்து மணி பார்த்தேன். ஐந்து முப்பது. இனிமேலும் தூக்கம் வரும் என்று தோன்றவில்லை. முழுவதும் கலைந்துவிட்டது. அறையை விட்டு வெளியே வந்தேன். மழை பெய்து கொண்டிருந்தது. மழை என்று சொல்ல


இலையுதிர்ந்த மரங்கள்

 

 வீட்டில் நடக்கும் ஒரு விசேஷத்திற்காக நண்பன் வீட்டிற்கு அழைக்க சென்றிருந்தேன். நண்பன் அமெரிக்காவில் செட்டில் ஆகியிருந்ததினால் மெயிலில் அவனை விழித்துவிட்டு அவன் பெற்றோரை அழைப்பதற்காக ஈரோடு பயணமானோம். காலை ஐந்து மணிக்கே ரயில் நிலையத்தை நெருங்கி கொண்டிருந்தது. வாடை காற்று வேறு. தூக்க கலக்கமாக இருந்ததால் முகம் அலம்பி வரலாம் என்று மெதுவாக நடந்து சென்றேன். கண்ணாடி மேலேயே ஒளிர் விளக்கு. உயரம் அதிகமாக இருந்ததால் குனிந்து தலை சீவலாம் என்றால் தலையில் முடி குறைந்து வருவதை


கலைந்த மேகங்கள்

 

 மூர்த்தி.இவனை நீங்கள் பாளை மத்திய சிறை அருகில் பார்த்திருக்க வாய்ப்புண்டு. அந்த ரெயில்வே கிராசிங் அருகில் இருக்குமே. அங்கு தான் ஜெயிலராக வேலை பார்க்கிறான். ஆறடி குறையாமலிருப்பான். அகன்ற மார்பு. கணீரென்ற குரல். ‘டேய்…..மவனே என்று கத்தினால் மிரண்டோடும் கைதிகள். புத்தகத்தை பிடிக்காது. இதயம் பேசுகிறது மட்டும் படிப்பான். அதுவும் இப்போது நின்று விட்டதால் அவன் இலக்கிய ரசனை தூங்கி கொண்டிருந்தது.இரண்டு நாளைக்கு ஒரு சிகரெட் பாக்கெட்டும், சனிக்கிழமை மட்டும் உ.பா. தொடும் மத்தியஸ்த்தன். ரஜினி கமல்


ஆச்சி

 

 அந்த மூதாட்டியை அடிக்கடி கோவிலில் பார்க்க முடிகிறது. குறைந்தது எழுபது வயது இருக்கும். வெளிப்பிரகாரத்தில் ஒரு கேள்விக்குறியின் வளைவுகளோடு முதுகு வளைந்து சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்திருக்கிறாள். கைய்யில் ஒரு பழைய பை. அருகில் யாரும் இல்லை. எப்பொழுதும் வாய் ஏதோ ஸ்லோகத்தை முணுமுணுத்து கொண்டிருக்கிறது. கண் நிலைகுத்தி வானத்தை நோக்குகிறது. ஒவ்வொரு தடவை பார்க்கும்போதெல்லாம் எனது ஆச்சியை(பாட்டி) ஞாபகப்படுத்துகிறாள். நான் பிறந்த பிறகு பார்த்த ஒரே ஆச்சி- மூக்கம்மாள் ஆச்சி. அப்பா வழி பாட்டி மற்றும் தாத்தா