கதையாசிரியர் தொகுப்பு: மீனாகுமாரி சந்திரமோகன்

4 கதைகள் கிடைத்துள்ளன.

எங்கே தவறு?

 

 என் மகளுக்குக் கதை சொல்லிக் கொண்டே சாதம் ஊட்டிக் கொண்டிருந்தேன். அவளும், பாட்டியிடம் காகம் வடையைத் திருடியதையும், அதை நரி ஏமாற்றிப் பறித்ததையும் கேட்டுக் கொண்டே சாப்பிட்டு முடித்தாள். எனக்கு அவள் முழுதும் சாப்பிட்ட திருப்தி. மறுநாள். எனக்குத் தெரியாமல் ஃப்ரிட்ஜைத் திறந்து சாக்லேட் எடுத்துச் சாப்பிட்டதை அவள் கைகளும் வாயும் சொன்னாலும் தலை மட்டும் இல்லை என்றே சொன்னது. எங்கே தவறு? அன்றும் அதே காகம் நரி கதை சொல்லித்தான் சாதம் ஊட்டினேன். ஆனால் அன்று


ஆசானுக்குப் பாடம்

 

 ”பரிமளம்! கொஞ்சம் காபி தா” கொல்லைப்புறம் கை, கால், முகம் கழுவச் சென்றார் கேசவன். ”காபி டேபிள்-ல வச்சிருக்கேன்” சொல்லிவிட்டு அடுக்களைக்குள் புகுந்தாள் பரிமளம். திரும்பி வந்தவர் கடுப்பாகிக் கத்த ஆரம்பித்தார். ”ஏய் பரிமளம், இங்க வந்து பார்! இந்தப் பூனையை” காபியைக் கீழே கொட்டி முழுசாய் குடித்திருந்தது அது. ”உனக்கு ஆயிரம் தடவை சொல்லிட்டேன்! இதுக்கு சாதம், பால்னு பழக்கம் பண்ணாதேன்னு! நாம என்னதான் தந்தாலும் திருடிச் சாப்பிடறது பூனை புத்தி, வர வரத் தொல்லை


ஐயே! பொட்டப்புள்ள!

 

 ராசாத்திக்கு மயக்கம் தெளிந்தபோது அருகில் யாரும் இல்லை. பிரசவம் பார்த்த மருத்துவச்சி ”ஐயே! பொட்டப்புள்ளடா மருது” சொல்லிவிட்டு சென்றது தெரியும். சிவத்தாயி குடிசை மூலையில் அமர்ந்தபடி கத்திக் கொண்டிருந்தாள். ”அதெல்லாம் பாவம்டா, அவ இவ பேச்செல்லாம் கேட்டுட்டு அந்தச் சிசுவக் கொன்னுடாதடா பாவி! சொல்றதக் கேளு” அவள் முடிப்பதற்குள் அடி, இடி போல விழுந்தது. ”ஏய்! கெழவி வாய மூடு, இத வளத்து சீர், கல்யாணம் காட்சி பண்றதுக்கு எங்கப்பன் எனக்கு சேத்து வச்சிட்டு செத்தான் பாரு”


யாரோ யார் அவன்?

 

 ரயில் புறப்படத் தயாராக இருந்தது. ”என்ன கலா! புரியாமப் பேசற, எனக்கு முக்கியமான ஆடிட்டிங் இருக்கு” என்றான் வாசு. ”பாஷை தெரியாத ஊர், அவ்வளவு தூரம், இவன வேற வச்சுகிட்டு” இரண்டு வயது மகனைக் காட்டிய கலாவுக்குச் சற்றுக் கலக்கமாய் இருந்தது. ”கண்ணனுக்குப் போன் பண்ணிட்டேன்! ஸ்டேஷன்ல வெய்ட் பண்ணுவான். ஏதாவதுன்னா என் செல்லுக்குக் கூப்பிடு! சரி எனக்கு ஆபிஸுக்கு நேரமாச்சு” சென்றுவிட்டான். வாசு மீட்டிங்கில் பேசிக்கொண்டிருந்தான், செல் அதிர்ந்தது இருமுறை. வாசு கண்டுகொள்ளவில்லை. மீட்டிங் முடிந்ததும்