கதையாசிரியர் தொகுப்பு: மாலதி சிவராமகிருஷ்ணன்

4 கதைகள் கிடைத்துள்ளன.

சக்ர வியூகம்

 

 கிட்டத்தட்ட ஒரு பத்து வருடத்துக்கு முன்னால் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி பார்த்தேன். கங்கை ,மற்றும் அதன்கரை ஓரப் பகுதிகளின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவலர்களைப் பற்றின ஆவணப் படம் என்று ஞாபகம். கங்கையில் பயணம் செய்து கொண்டிருந்த போது தற்கொலை செய்து கொள்ள முயன்ற ஒரு பெண்ணைக் காப்பாற்றி அவளிடம் விசாரணை செய்து கொண்டிருந்த தருணத்தில்தான் பார்க்க ஆரம்பித்தேன்.அதற்குள்நல்ல உலர்ந்த ஆடைகளைக் கொடுத்து, உணவையும் கொடுத்து ஆசுவாசப்படுத்தி அவளிடம் கனிவாக கேள்வி கேட்டு கொண்டிருந்தார்,ஒரு வயதான காவலர்.உருண்டை


கெட்டாலும் மேன் மக்கள்

 

 மனித உடல்களாலும்,மண்டையை உடைக்கும் சத்தங்களாலும்ஆன ஒரு மாபெரும் மலைப்பாம்பு மாதிரி இருந்த அந்த தெருவிலிருந்து ஒரு வழியாக வெளியே வந்தோம். “சே! மனுஷன் வருவானா இந்த தெருவுக்கு? என்ன கூட்டம், என்ன கூட்டம்!” ராம் யுத்தகளத்திலிருந்து வந்தவர் போல இருந்தார் . நானும் அதை விட பயங்கரமான தோற்றத்தில்தான் இருந்திருப்பேன் என்று தோன்றியது.,ஆனாலும் அதை நம்ப விரும்பவில்லை. “வராங்களே!” என்றேன். “என்ன! திரும்பி ஷாப்பிங் வருவேன்கிறாயா?” பல்லைக் கடித்தார். “இல்ல, இல்ல, எப்படித்தான் வராங்களோன்னு உங்களோடு சேந்து


சிதம்பரம்

 

 அந்த ப்ரசித்தி பெற்ற கோவிலின் அவ்வளவாக ப்ராதான்யமாக இல்லாத கோபுர வாசல் அருகே பஸ் எங்களை இறக்கி விட்டு சென்றது.கோவில்களுக்கு உரித்தான கடைகள் எதுவும் இல்லாமல் ஒரு பழைய இரும்பு கடை,ஜெராக்ஸ் கடை,எலக்டிரிகல் சாமன்கள் கடை, ஸ்டேஷனரி கடை என்று பல பட்டரையாக இருந்த கடைகளை கடந்து கோபுர வாசலை அடைந்தோம்.பெரிய கல் பாவிய படிகளுடன் கூடிய இரண்டு, மூன்று நிலைகளை கடந்தவுடந்தான் தோன்றியது” அடடா ! செருப்பு போடும் இடம் எதுவும் இருப்பதாக தெரியவில்லையே”என்று. “பரவாயில்லை!


என்பும் உரியர் பிறர்க்கு

 

 என் அம்மா ரொம்ப நன்றாக சமைப்பாள் . அம்மா செய்த ரவா தோசை , அடை மாதிரி நான் எங்கேயும் எப்போதும் சாப்பிட்டது இல்லை என்று சொன்னால் பொய்யோ என்று கூட உங்களுக்குத் தோன்றும். ஆனால் அது எங்களின்அபிப்ராயம் மட்டும் இல்லை, எங்கள் வீட்டுக்கு அநேகமாக தினந்தோறும் வந்து போகிற என் அண்ணாவின் சிநேகிதர்கள், என் சிநேகிதிகள் எல்லாருடைய ஏகோபித்த அபிப்ராயமாகவும் இருந்தது.அடர்ந்த பொன் நிறத்தில் முறுவலாக கையில் எடுத்தால் படக்கென்று உடையும் ரவா தோசையையும்,கார சாரமான