கதையாசிரியர் தொகுப்பு: மாரி செல்வராஜ்

2 கதைகள் கிடைத்துள்ளன.

கோழியாப்பண்ணை

 

 ‘சீனிக்கிழங்கு மூக்கும் கத்திரிக்கா காதும் நவாப்பழக் கண்ணுமா… கிழவன் அப்போ எப்பிடியிருப்பான்! இந்த போட்டோவுல இப்போ அப்பிடியா இருக்கான்? சுருட்டு குடிச்சிக் குடிச்சி பொசுங்கிப்போன வாயும், ஆடு-மாடு மேய்ச்சி முழுசா மொத்த மயிரையும் வெயிலுக்குத் தின்னக்கொடுத்த தலையுமா, எவனோ சாமக்கோடங்கி மாதிரிலா இருக்கான். சனியன்… இந்த போட்டோ எப்படியும் கீழ விழுந்து உடைஞ்சி, நொறுங்கி ஒண்ணும் இல்லாமப்போவுணும்னு பார்த்தா, இந்தச் சிலந்திவலையில தொங்கிக்கிட்டுலா இத்தனை வருஷமா கூடவே கிடக்கு. இப்போ போய் திடீர்னு எடுத்தா, இந்தச் சிலந்திங்க


காட்டுப்பேச்சிகள் காடுகளில் வசிப்பதில்லை!

 

 பெரியவர் நிறைக்குலத்தானுக்கு இன்று நிச்சயமாகக் கடைசி நாள்தான்! ‘நிறைக்குலத்தான்’ – இந்தப் பெயரை, ஒரு முறை உங்களின் வாய் திறந்து நாக்கைக் கடித்து ஒலி எழுப்பிச் சொல்லிப் பாருங்களேன். பெரிய ஓர் ஆலமரம், அந்தப் பெயர் முழுவதும் தன் நிழல் பரப்பி இருப்பதுபோல உங்களுக்குத் தோன்றும். ஆனால், அந்த ஆலமரம் விழுதுகள் இல்லாத ஆலமரமாக, இலைகள் இல்லாத ஆலமரமாக, துளி பச்சைகூட இல்லாத ஆலமரமாக, பங்குனி வெயிலில் எப்போது வேண்டுமானாலும் பற்றி எரிகிற மொட்டை ஆலமரமாக இருந்தால்