கதையாசிரியர் தொகுப்பு: மணி வேலுப்பிள்ளை

2 கதைகள் கிடைத்துள்ளன.

கனவும் நனவும்

 

 காலை ஆறு மணி. எங்கள் சமையலறையில் நான். எனது பார்வை வெளியே. வளவில் கொல்லை. நீள்சதுர வடிவில் கூம்பிய புல்தரை. அந்தலையில் பழம்பெரும் எலுமிச்சை. அதற்கப்பால் சாய்ந்தெழும் சூரியன். புல்பூண்டுகளைத் தொடுத்து அடர்ந்து படர்ந்த சிலந்திவலை. காலை வெயிலில் ஒளிரும் அதன் வெண்மை. பூமி சுழல, கதிரவன் மேலெழும் அந்த ஒருசில நொடிகளில் ஒரு கேடயம்போல் எங்கள் புல்தரை பளிச்சிடும். நான் ஒருகணம் மெய்மறப்பேன் – மறுகணம் அது வெறும் பச்சைப் புல்லாய் மாறிவிடும். எனது அன்றாடக்


மொழிபெயர்ப்பாளர்

 

 நான் பறந்து வந்த விமானம் ரொறன்ரோவில் தரையிறங்கியபோது எனது கடிகாரம் காட்டிய நேரம்… அது வன்னி நேரம்… கண்ணாடிச் சாளரத்தின் ஊடாக வெளியே எட்டிப் பார்த்தேன். ஓடுபாதையிலும் அதற்கு அப்பாலும் எரியும் மின்விளக்குகள், கிளம்புவதற்காக அல்லது இறங்குவதற்காக வலம்வரும் விமானங்கள், விமானத்துறையின் எல்லைக்கு வெளியே மின்னிமறையும் வாகனங்கள், மண்ணுலக வாழ்வை ஒரு சொட்டும் சட்டை செய்யாது கொட்டும் பனியின் வெண்மை… ‘உன்னுடைய புத்தகம் என்னிடமே இருக்கட்டும்… அது எனக்குத் திரும்பவும் தேவைப்படும்’ என்று துரை அண்ணா காதோடு