கதையாசிரியர் தொகுப்பு: பி.எஸ்.ராமையா

6 கதைகள் கிடைத்துள்ளன.

அனாதாஸ்ரமம்

 

 குண்டப்பாவை நான் முன்பு ஒரு தடவை கூட அவ்வளவு கவலை தேங்கிய முகத்துடன் கண்டதில்லை, எப்போது பார்த் தாலும் புன்னகை தவழ, உதட்டைச் சுருட்டி “ஜகதோத்தாரணா” என்ற மெட்டில் சீட்டியடித்துக்கொண்டிருப்பார். அந்தப் பாட்டில் அவருக்கிருந்த பிரேமையை அளவிட்டுச் சொல்லிவிட முடியாது. கட்டை குட்டையாக உருட்டிவிட்டது போன்ற உருவம். அதற்கேற்றாற் போல தடித்தடியாக அடர்த்தியான தலைமயிர். அதை ஒரு அங்குல அளவுக்கு, மேல் நாட்டு கிராப்பும், கீழ்நாட்டு குடுமியுமற்ற வகையில் வெட்டிவிட்டிருப்பார். ஆப்பிரிக்கா தேசத்து யானைப்புல் மாதிரி வளர்ந்து


வளையல் துண்டு

 

 தொட்டதெல்லாம் தங்கமாகும் என்கிறார்களே, அந்த ஜாதி பரமசிவம் பிள்ளை. வாழ்க்கையின் மேடு பள்ளங்கள் யாவும் அவருக்குப் பொன் விளையும் பூமி என்றால் பொய்யல்ல. அவர் மன்னிக்க முடியாத தவறுகள் செய்த இடங்களில் கூட அவருடைய குற்றம் பாவிக்கப்படாமல் அவர் தப்பித்துக்கொள்கிறார். நாங்களிருவரும் போன பத்து வருஷங்களாக நண்பர்கள். இருவர் குடும்பத்தினரும் ரொம்ப அன்னியோன்னியமாக அளவளாவிக் குலவுகிறோம். அதனால் எனக்கு அவருடைய வாழ்க்கையைப் பற்றி ரொம்ப அந்தரங்கமாக அறியச் சந்தர்ப்பங்கள் கிடைத்தன. முதல் முதலாக அவருடன் எனக்கு அறிமுகமேற்பட்டு


ஜானகிக்காக மாத்திரமல்ல

 

 சுயம்பிரகாசர் எங்கேயோ ஒரு பொதுக்கூட்டத்திற்குப் போய்விட்டுத் திரும்பியவர், தீவிர சிந்தனையில் ஈடுபட்டவர்போல அறையில் குறுக்கும் நெடுக்குமாக உலாவ ஆரம்பித்தார். நான் முதலில் அவர் முகத்தைக் கவனிக்காததால், “சாப்பிடுவோமா?” என்றேன். நான் சொன்னது அவர் காதில் விழாததுபோல, அவர் மறுபடியும் வளையம் வந்து கொண்டிருந்ததைக் கண்டவுடன்தான் அவர் முகத்தைப் பார்த்தேன். மறுபடியும் அவரைச் சாப்பிடக் கூப்பிட வாய் எடுத்தேன். அறையின் மறுகோடிக்குப் போனவர் வேகத்துடன் திரும்பி, “வால் மீகிதான் எழுதவில்லை ; கம்பரும் ஏன் அதை விட்டு விட்டார்?”


திரிலோகாதிபத்திய ரகசியம்

 

 பூமி அதிர்ந்தது; விந்தியமலை கண்காண நடுங்கியது. மரங்கள் நிலை தடுமாறி மடமடவென்று சரிந்தன. வனவிலங்குகள் உயிருக்குப் பயந்து ஒண்டிப்பதுங்கின. வான வீதியில் பறந்து கொண்டிருந்த பறவைகள் செயலிழந்து சிதறி விழந்தன. மேகக் கூட்டங்கள் கலைந்து பஞ்சாகிக் கரைந்தன. லங்கேசன் ராவணனது குரலொலி இடி முழக்கம் போலத் திசைகளில் புரண்டது. திசைகள் அதன் பயங்கர வேகம் தாங்காது குமுறி முறுமுறுத்தன. “கால தேவா! அவள் என் உடைமை, அந்த ஜீவனைத் தொடாதே” என்று அமரரை அடக்கியாட்டும் அதிகாரக் குரலில்


ஆக்கினைகள் செய்து வைப்போம்

 

 கீழேயிருந்து தாலாட்டுப்பாட்டுக் குரல் வந்தது. என் நண்பன் சுந்தரம் படித்துக்கொண்டிருந்த புஸ்தகத்திலிருந்து திரும்பி அதை கவனித்தான். நான் அவசரமாகப்பத்திரிகைக்குக் கட்டுரை எழுதிக் கொண்டிருந்தேன். பாட்டு என் காதில் விழுந்ததானாலும் மனத்தில் உறைக்கவில்லை. திடீரென்று சுந்தரம் என் கவனத்தைக் கட்டுரையிலிருந்து கலைத் தான். அந்தப் பாட்டைக் கேட்டாயா?” என்றான். நான் கவனம் கலைந்து பொறுமையிழந்து “அதற்கென்ன இப்பொழுது?” என்றேன். என் குரலிலிருந்து அவன் என்னை விட்டு விடுவானென்று எண்ணினேன். விடவில்லை. “பிரமாதமாய்க் கட்டுரைகளும், கதைகளும் எழுதிக் குவிக்கிறாயே; அதிலுள்ள


நட்சத்திரக் குழந்தைகள்

 

 ’அப்பா நட்சத்திரங்களுக்குக் கூட அப்பா உண்டோ?’ ‘உண்டு அம்மா!’ ‘அவர் யார் அப்பா?’ ‘சுவாமி.’ ‘சுவாமியா? அப்பா! அவர் கூட உன்னைப்போலத்தானே இருப்பார்? நட்சத்திரம் ரொம்ப அழகாயிருக்கே. அவர் அப்பா கூட அழகாத்தானே இருப்பார்?’ ‘ஆமாம் அம்மா! சுவாமியினுடைய அழகைப் போல வேறு யாருக்கும் அழகு இல்லை.’ ’சுவாமி கூட உன்னைப் போல நல்லவர்தானே?’ ‘ஆமாம்’ ‘ஆமாம். எனக்குக்கூடத் தெரியறது. சுவாமி ரொம்ப…. ரொம்ப நல்லவர். நட்சத்திரமே பளிச்சின்னு அவ்வளவு நன்னாயிருக்கே. அவா அப்பா எப்படி இருப்பார்!’