கதையாசிரியர் தொகுப்பு: பிரேமா ரத்தன்

9 கதைகள் கிடைத்துள்ளன.

எனக்கான காற்று

 

 இன்றைக்குத் தூங்கி எழுந்திருக்கும் போதே காலை 7 மணி. கண்ணிமைகளைத் திறக்கவே முடியவில்லை. விடியற்காலை 4 மணி வரை தூங்காமல் இருந்தது அசதியாக இருந்தது. நல்ல வேலை கொரோனா காலம் என்பதால் வேலை செய்யும் அம்மாவும் வரவில்லை. மூன்று மணி நேர தூக்கம கிடைத்தது. சோம்பல் முறித்துக்கொண்டு படுக்கையை விட்டு எழுந்தேன். வீட்டில் ஒரு சத்தமும் இல்லை. கணவரும் பையனும் எழுந்திருக்க 12 மணியாவது ஆகும். ‌ அடுப்பைப் பற்றவைத்து அவசரமாக ஒரு காபி போட்டுக் குடித்துவிட்டு


நீ எனக்கு மனைவி அல்ல…

 

 அந்த நாளை நினைத்தாலே நெஞ்சு பதைபதைக்கிறது. அந்த நிமிடம் இனி யாருக்கும் வரக்கூடாது என்பது தான் என்னுடைய பிரார்த்தனையாக நாள்தோறும் அமைகின்றது. மகளுக்குக் கோடை விடுமுறை. வழக்கம் போல அம்மா வீட்டிற்கு ஒரு மாதம் சென்றுவிட்டு அன்றுதான் வீடு வந்து சேர்ந்தேன். அம்மா கொடுத்தனுப்பிய அரிசி மாவு, ஊறுகாய் , ஒரு வருடத்திற்கான புளி, மிளகாய் வற்றல் எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தேன். வந்ததிலிருந்து ராம் என்னோடு சரியாகப் பேசவில்லை. ‘என்ன ஆயிற்று உங்களுக்கு. ஊரில் இருந்து


எங்களோட கதை

 

 இந்த மாதிரி நாங்கள் சந்தித்துக் கொள்வது ரொம்ப அபூர்வமாகப் போயிற்று. இந்த வாட்ஸப் யுகத்தில் அரட்டை அடிப்பதற்குக் கைபேசியே போதும் என்கிற நிலை வந்துவிட்டாலும், நாங்கள் தோழியர்கள் நேரில் சந்திக்க வேண்டுமென்ற ஆவலில் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தோம். இரண்டு மாதங்களாக முயற்சி செய்து இன்றைக்குத் தான் அது நிறைவேறியது. ரேணு வீட்டில் தான் இந்தச் சந்திப்பு நடந்தது. பன்னிரண்டு தோழியர்கள் சந்திக்க வேண்டும் என்ற ஏற்பாட்டில் எட்டு பேர் தான் சேர முடிந்தது. மஞ்சுவிற்குத் திடீர் என்று


இது தான் காதல் என்பதா?

 

  அன்று சோழர் தலைநகரமான புகார் விழாக்கோலம் பூண்டிருந்தது. கற்பக கோட்டத்தில் வெள்ளை யானை கொடி ஏற்றப்பட்டு, அமரர் கோன் இந்திரனுக்காக எடுக்கப்பட்ட விழா தொடங்கியது. விழாவின் போது சமயக்கணக்கர்களும் , அமயக் கணக்கர்களும் , பல்வேறு மொழி பேசும் மக்களும், ஐம்பெருங்குழுவும், எண்பேராயமும் புகாரில் ஒருங்கே நிறைந்திருந்தனர். வச்சிர கோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த போர் முரசு, பட்டாடை அணிந்த யானையின் பிடரியின் மேல் ஏற்றப்பட்டது. முதுகுடிப் பிறந்த முரசு அறைவோன் வீதி வீதியாகச் சென்று மன்னனின் விழா


பிரம்மாண்டம்

 

 சிகாகோ நகரின் ஓ’கேர் சர்வ தேச விமான நிலையத்தில் சுந்தரி பயணித்த விமானம் தரை இறங்கிய பொழுது அவள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இந்தியாவில் லோக்கல் விமானங்கள் ஏறி பழக்கமில்லாத அவள், முதன் முறையாக சர்வதேச விமானத்தில் பயணித்து, அதுவும் 21 மணி நேரம் பயணித்து, சிகாகோ வந்து அடைந்திருக்கினறாள். அதை விட அவள் மகிழ்ச்சிக்கு எல்லை ஏது? சுந்தரி, உள்ளூரில் தனியாகச் செல்வதற்கே பயந்து கொண்டிருப்பவள். இன்று கிட்டத்தட்ட 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வான் மைல்களைக்


அக்கினி மனசு

 

 மூணு மாசம் ஆச்சு. வேலை வெட்டிக்கு போக முடியல. சாப்பாட்டுக்கு கஷ்டம். இந்த சூழல்ல என்னதான் பண்றது. தினமும் பொலம்பி தவிக்க வேண்டியதுதான். மணி மனசுக்குள்ள பொலம்பி கொண்டிருந்தான். “ஏங்க , இப்படியே உட்கார்ந்திருந்தால் சாப்பாட்டுக்கு என்ன தாங்க செய்யிறது. நாளைக்கு பொட்டு அரிசி கூட கிடையாது”. “என்னங்க .நான் பாட்டுக்கு கத்திக்கிட்டு இருக்கேன். நீங்க பாட்டுக்கு ஒக்காந்து இருக்கீங்க” “ஏம்மா , என்னை என்ன செய்ய சொல்ற. துட்டு வச்சுக்கிட்டா ஒக்காந்து இருக்கேன். எனக்கு என்ன


கள்ளிப் பாதையும் நுணாப் பூவும்

 

 ’ரீது…….’. ’என்னம்மா’ ‘இன்னைக்கு அம்மாவுக்கு ஆபிஸில் ஒரு மீட்டிங். முடிய 8 மணி ஆகிவிடும். வழக்கம் போல நீ டியூசன் முடிந்து வந்தவுடன் அம்மா வீட்டில் இருக்கமாட்டேன். இன்று ஒரு நாள் மட்டும் நீ பக்கத்து வீட்டு ஆண்டியோட இருக்கிறாயா? நான் சொல்லிட்டுப் போறேன்’. ’சரிம்மா. சீக்கிரம் வந்துவிடு. எனக்கு நீ இல்லாட்டி போர் அடிக்குமா…..’ ’ஓகே ரீது…எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்து விடுவேன்.’ ‘என் செல்ல அம்மா’. ரீது ஓடி வந்து என்னைக்


மாயை

 

 ரமா இன்றைக்கு மிக சந்தோஷமாக இருந்தாள்.ஒரு மாதத்திற்குள் 5 கிலோ வெயிட் இறங்கி இருப்பது பெரிய சாதனைதான். கல்யாணத்தின் போது 42 கிலோ வெயிட் இருந்தாள். ஒடிந்து விழக் கூடிய இடுப்பு . பட்டு சேலை இடுப்பில் நிற்கவே இல்லை. எல்லாம் கனவா போயிடுச்சு. கல்யாணமான நாலாவது மாசமே கணவரோட அமெரிக்கா பயணம் . மகிழ்ச்சிக்குக் கேட்கவா வேண்டும். எப்பவும் ஜாலிதான். வெளியில சாப்பாடு. ஊர் சுற்றல். சரண் வேலை நேரம் போக மற்ற நேரமெல்லாம் ரமாவோடு


பரிதவிப்பு

 

 ரிப்போர்ட் வந்தவுடன் அதிர்ந்து போனாள் சுருதி. அதுவும் இரண்டு கிட்னியும் வேலை செய்யவில்லை என்று தெரிந்தவுடன் தன்னை அறியாமலேயே கண்ணீர் வடிந்தது சுருதிக்கு.. ரிப்போர்ட்டை கையில் வாங்கிக்கொண்டு ரிசப்ஷனில் அமர்ந்து விட்டாள். எப்படி இதை அம்மாவிடம் தெரிவிப்பது. அதிர்ச்சியில் அப்படியே உறைந்து நின்றாள். அப்பா இல்லாத  தன்னையும் தன் தம்பியையும் அம்மா வளர்த்த விதமே தனி அழகுதான். கண்ணின் மணி போல எங்களைக் காத்தது…. சிறிது நேரம் யோசித்துவிட்டு, சரி நேரடியாக இதைப்பற்றி குருவிடம் பேசி விடலாம்.