கதையாசிரியர் தொகுப்பு: பவளமணி பிரகாசம்

1 கதை கிடைத்துள்ளன.

எலிப்பொறி

 

 எனக்கு கற்பனை பிடிக்கும். கல்கண்டாய் இனிக்கும். கவிஞர்களும், ஓவியர்களும், அனைத்து கலைஞர்களும் வெளிப்படுத்தும் அற்புத கற்பனை அழகில் மூழ்கித் திளைப்பதே எனக்கு முழு திருப்தியளிக்கும் வாழ்க்கை அனுபவமாய் இருக்கிறது. சதா சர்வ காலமும் ஒரு கற்பனை சொர்க்கத்தை சிருஷ்டித்து அதில் பவனி வருவதையே விரும்புகிறேன். என்னை பெற்றவர்கள் எனக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணிப் பார்த்துவிட துடித்துக் கொண்டிருக்கிறார்கள். நானோ பிடி கொடுக்காமல் நழுவிக் கொண்டிருக்கிறேன். தங்கள் ஒரே மகன் முப்பத்து மூன்று வயதுக்கு கட்டை பிரம்மச்சாரியாய் தூரிகையும் கையுமாய் ஓவியம் தீட்டிக்கொண்டோ, உண்ணவும் உறங்கவும் மறந்து