கதையாசிரியர் தொகுப்பு: நீர்கொழும்பூர் முத்துலிங்கம்

1 கதை கிடைத்துள்ளன.

அரணை

 

 (1998 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அதிகாலை நேரம் மீனாசாதியாத் பிரதேசத்தை பனி மூடியிருந்தது. அபுதாபி நகரின் ஆரவாரங்களிலிருந்து சற்று ஒதுங்கி கடற்கரையோரமாக இருக்கும் மீனாசாதியாத் கடற்கரையில் தான் நான் பணிபுரியும் பிரிட்டிஸ் கிளப் இருக்கிறது. பல ஏக்கர் நிலத்தை வளைத்துப் போட்டுக் கொண்டு ஒரு பக்கம் கடலாலும், மற்றைய பக்கங்கள் நீண்டு உயர்ந்த மதில்களாலும், ஏராளமான கட்டடங்களையும், நீச்சல் குளங்களையும் அழகிய பூந்தோட்டங்களையும் தன்னுள்ளே கொண்டு அந்த நாட்டில்