கதையாசிரியர் தொகுப்பு: நிக்கோலஸ்

1 கதை கிடைத்துள்ளன.

கழிவறை

 

 தலைவர் நரசிம்மனும், சின்னப்பா வாத்தியாரும் வழக்கத்துக்கு மாறாக கிருஷ்ணர் கோயிலின் பின் பக்கம் இருக்கும் குப்பை மேட்டை ஒட்டிய நிலத்தினை, பார்த்து கொண்டும் அளந்து கொண்டும் இருந்தது அங்கிருந்தவர்களுக்கு சற்று வித்தியாசமாக இருந்தது. நேரம் போகப்போக ஒன்றிரண்டு பேராக சுற்றி பார்ப்பவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருந்தது. எதிர் நிலத்தின் பக்கவாட்டில் தான் சின்ன மொட்டையின் கூரை கொட்டகையும் இருக்கிறது. அவனை எல்லோரும் சின்ன மொட்டை என்று கூப்பிட்டாலும், அவனது நிஜ பெயர் என்னவோ ராமச்சந்திரன் தான், புரட்சித்தலைவரின்