கதையாசிரியர் தொகுப்பு: நா.முத்துநிலவன்

4 கதைகள் கிடைத்துள்ளன.

மாமா கையில குப்பை

 

 “மாமா…! மாமாவ்…” பள்ளிக்கூடத்திலிருந்து வந்த வாக்கில் புத்தக மூட்டையைக் கடாசிவிட்டு மாமனைத் தேடினாள் பத்து. “என்னடீ! நான் இங்கிருக்கேன்..” “ம்.. வந்து…மாமா ‘பொங்கல்’னு சொல்லேன்.” “ஓகோ! இன்னிக்குப் பள்ளிக்கூடத்திலேர்ந்து புது விளையாட்டு கத்துக்கிட்டு வந்திருக்கியாக்கும்..ம்..சரி ‘பொங்கல்.” “உங்க வாயில செங்கல்…ஹய்யா… மாமா வாயில செங்கல்…” குதித்துக் குதித்துச் சந்தோஷப்பட்டுக்கொண்டே கொல்லைப் பக்கம் ஓடினாள். கொஞ்சநேரத்தில் ராஜசேகர் ஆபீஸில் இருந்து வந்தார். பத்துவின் அப்பா. அவர் கைலியில் நுழைந்து கால்கை கழுவி முகத்தைத் துடைத்துக் கொண்டே சாம்புவிடம் “என்னடா


கன்வார்

 

 கதைக் காலம்: கி.பி. 1564 கதைக் களம் :அக்பரின் அரசில் போரின் பிறகு இணைக்கப்பட்ட ‘கோண்டுவானா’ சிற்றரசு. (தற்போதைய ஒரிஸ்ஸா-ம.பி. எல்லை) நர்மதா நதியின் வடகரையை அடைந்ததும் கரையேறி அமர்ந்தாள் கன்வார். மூச்சு வாங்கியது. மார்புக் கச்சைக்குள் செருகியிருந்த கட்டாரியை உருவி எடுத்து அடர்ந்த மரங்களுக்கிடையே பரவிக்கிடந்த கற்களின் மீது போட்டுவிட்டு கைகளைப் பின்தாங்கலாக ஊன்றியவாறு ஒரு நிம்மதிப் பெருமூச்செறிந்தாள். ஈரத் துணியைப் பிழிந்து உடல் முழுவதும் துடைத்தாள். மஞ்சள் வெய்யிலில் மேலும் சிவந்து காணப்பட்டட அவள்


காந்திபுரத்து ராமுக்கண்ணு

 

 ஆச்சர்யம் பூக்க அந்தச் சிறுவனை மீண்டும் பார்த்தேன். சைக்கிள் கேரியரில் அனசலாக இருந்த டீ கிளாஸ் சாய்ந்துவிடாமல் கவனமாக இருந்தான். ‘பன்’னைப் பிய்த்து மெதுவாக டீயில் நனைத்துத் தின்று கொண்டே பேசினான். சாமியார் மாதிரி பேச்சு-உலகத்தின் எந்தப் கஷ்டமும் இனி அவனை எதுவும் செய்து விட முடியாதது போல! திரும்பவும் – மறந்து போன மாதிரி கேட்டேன்: “ஆமா உம் பேரென்ன சொன்னே? நிமிர்ந்து ஒரு தரம் தலையைச் சாய்த்துப் பார்த்துவிட்டுச் சொன்னான்: “ராமுக்கண்ணு எம்.பி.பி.எஸ்.” நனைந்த


குஞ்சானியின் டாட்டா

 

 “பஸ் கிளம்பிரிச்சு! நீ ஏறிக்க. குஞ்சானீ! நான் சொன்னதெல்லாம் ஞாபகம் வச்சிக்க…ஙொம்மா எதையாச்சும் சொல்லிக்கிட்டுத்தான் இருப்பா…தைரியமாப் போ…என்ன…நா வரட்டுமா?” கடைக்காரத் தாத்தா கையை அசைத்து விட்டுக் கிளம்பிவிட்டார். குஞ்சானியும் கையை ஆட்டிவிட்டுப் போனதும், முன்பொரு சமயம் ‘டாட்டா’ சொல்லப் போய் தனக்கு விழுந்த அடியை நினைத்துக் கொண்டான் குஞ்சானி. முதுகு ஒருமுறை சிலிர்த்து அடங்கியது. பஸ்ஸில் இரைச்சல் கலவையாயிருந்தது. ‘எத்தனை பஸ் ஓடினாலும் திருவையாற்றிலிருந்து தஞ்சாவூருக்கு மட்டும் எப்பவும் கூட்டம் நெருக்கியச்சுக்கிட்டுத்தானிருக்கும்.’ சட்டைப் பையைத் தடவிப் பார்த்துக்