கதையாசிரியர் தொகுப்பு: நா.கிருஷ்ணமூர்த்தி

4 கதைகள் கிடைத்துள்ளன.

வாடகை வீடு!

 

 நான் சொந்த வீட்டில் வருடக்கணக்கில் இருந்தேன். அல்லல்பட்டு,கடன்பட்டு ஒரு வழியாக கட்டிய வீடு, கடன் பட்டதில் மனைவியின் பங்கும் கணிசமானது. வீட்டைப் பராமரிப்பதில் உள்ள சிரமங்கள் வீடு கட்டிய பின் நன்றாகவே தெரிந்தது. வீட்டின் வெளியே நீரின்றி அசுர வேகத்தில் வளரும் வேலிக் கருவேலம், எருக்கன் செடிகளை அகற்றுவதிலேயே சோர்ந்து போய் விடுவேன். அடுத்த ப்ராப்ளம் மழை பெய்தால் வீட்டினுள் எப்போது தண்ணீர் எட்டிப் பார்க்கும் என்பதுதான். ஒருநாள் மழையிலேயே தவளைகள் ” கெக்கபிக்கே’ என்று கச்சேரியை


இரு முகங்கள்!

 

 மகாதேவன் என்னுடைய நண்பன். நான் மதுரையில். அவன் சென்னையில், மேற்கு மாம்பல வாசி. சமீபத்தில் கண்புரைக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டான். வலது கண், சர்க்கரை நோய் இல்லை என்பது ப்ளஸ் பாயிண்ட். கண்களை இடுக்கிக் கொண்டுதான் சிஸ்டத்தில் வேலை செய்வான். நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கியில் உதவி மேனேஜர். கை நிறைய சம்பளம். அதற்கு ஏற்றாற்போல அசுர வேலை. காலையில் வங்கி தொடங்குவதற்கு அரைமணி நேரம் முன்பே செல்ல வேண்டும். வங்கியைச் சுத்தம் செய்து, குடிநீர் பிடித்து வைத்து,


வேர்விடும் உறவுகள்

 

 கல்யாணம் நல்லபடியாக நடந்து மருமகள் லக்ஷ்மியோடு வீடு திரும்பிய சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருந்தார் ராமச்சந்திரன். மதுராம்பாளுக்கு சர்க்கரை உச்சம். இன்சுலின் போட்டு ஓரளவு கட்டுப்பாட்டில் இருந்தது. கல்யாண முகூர்த்தம் சுபமாக முடிய வேண்டுமென குலதெய்வத்தைப் பிரார்த்தனை செய்தபடியே இருந்தார். சம்பந்தி வீட்டில் கல்யாணத்தை நிறைவாகச் செய்தார்கள். எந்த ஒரு சம்பிரதாயத்தையும் விட்டுவிடாது பார்த்துப் பார்த்து செய்தார்கள். தஞ்சாவூர் பக்கத்து சமையல்காரர்கள், அப்படியொரு கை மணம். கிராம்பு ரசம் ஹைலைட். சாப்பாட்டு ஹாலே மணத்தது. லக்ஷ்மி ஒரே பெண்.


நண்பன் தங்கராசு

 

 துபாயிலிருந்து சகாதேவன் சென்னை வந்து மூன்று நாட்களாகிவிட்டன. கை நிறையச் சம்பளம் என்றதும் ஜனனியும் அவன் துபாய் செல்ல ஓ.கே. சொல்லிவிட்டாள். வருடத்திற்கு ஒருமுறை எப்படியும் வந்து விடுவான். பத்து நாள் லீவில் வந்தாலும் போதாது போலவே இருக்கும். வந்து முதல் மூன்று, நான்கு நாட்கள் சென்னையில் மனைவி குழந்தையோடு இருந்துவிட்டு மறுநாள் கிராமத்திற்கு அப்பா அம்மாவைப் பார்க்கச் செல்வான். சகாதேவனின் பெற்றோர் கோகூர் கிராமத்தில் தனியாக இருந்தார்கள். கொஞ்சம் நிலபுலன்கள். பூர்வீகச் சொத்து. காவிரி நீர்