கதையாசிரியர் தொகுப்பு: நாகா

2 கதைகள் கிடைத்துள்ளன.

அந்த ஒரு நாள்

 

 “சார், கொஞ்சம் wait பண்ணுங்க. வயசானவங்களுக்கு மொதல்ல பண்ணிடறோம். காலைல இருந்து சாப்பிடாம வந்துருப்பாங்க. சுகர் பேஷண்ட்ஸ் வேற. அதுக்கப்பறம் உங்களுக்கு டெஸ்ட் பண்ணறோம். ஓகே-வா?” என அந்த மலையாள நர்ஸ் சொன்னபோது மறுப்பேதும் சொல்ல மனம் வரவில்லை. அழகிகள் என்ன சொன்னாலும் அதை மறுப்பேதுமின்றி கேட்டுக்கொள்கிற இயல்புடையவன் என்பதால். இன்னும் ஒரு மாதத்தில் அந்நிறுவனத்தில் வேலைக்கு சேர வேண்டும். அதன் பொருட்டு அவர்கள் தந்த மருத்துவமனைப் பட்டியலில் இருக்கும் ஏதோவொன்றில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமாதலால் காலை


பதற்றம்

 

 காலை எழுந்ததிலிருந்தே ரம்யா பதற்றமாக இருந்தாள். தான் பணிபுரியும் ப்ராஜெக்ட் இறுதி நிலையில் இருப்பதினாலும், அந்த IT நிறுவனத்தின் நற்பெயரை தக்கவைப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கக்கூடிய தருணமாகவும் இருந்ததினால் இரவு-பகல் பாகுபாடின்றி உழைத்துக் கொண்டிருந்தான் அவளது கணவன் ரமேஷ் கடந்த மூன்று மாதங்களாகவே. அவ்வகையில் அன்று வீட்டிலிருந்தவாறே நைட் ஷிப்ட் பார்த்துவிட்டு அதிகாலை ஐந்து மணிக்குதான் உறங்கச் சென்றிருந்தான். எப்போதும் ரமேஷ் உறங்கச் செல்லும்முன் ரம்யா எழுந்து அவனுக்கு காலை உணவாக இட்லியோ, தோசையோ தயார்