கதையாசிரியர் தொகுப்பு: நடராஜன் பிரபாகரன்

1 கதை கிடைத்துள்ளன.

காத்திருப்பு

 

 ஊரிலிருந்து அப்பா வருவதாக அலைபேசியில் அவர் சொல்லக் கேட்டவுடன் சந்திர மோகனுக்கு எதிர்ப்பார்பு ஆரம்பித்துவிட்டது. இந்த முறை எப்படியும் ஷன்முகப்ப்ரியாவைப் பற்றி சொல்லி விட வேண்டும். சென்ற முறை ஊருக்கு சென்ற போது பிரியா குறித்து பேச எத்தனித்த போதெல்லாம் ஏதோ வேறு விஷயம் வந்து விட, எடுத்துச் சொல்ல சரியான தருணம் அமையவில்லை. எப்படி ஆரம்பித்தது என்று மோகனுக்கே தெரியாமல்தான் ஷன்முகப்ப்ரியாவை அவன் வாழ்க்கையில் ஒரு பங்காக உணரத் தொடங்கினான். அவள் குறித்து அவ்வளவு தீவிரமாக