கதையாசிரியர் தொகுப்பு: தேவகாந்தன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

சகுனியின் சிரம்

 

 1 கிருஷ்ணனால் தூங்க முடியவில்லை. அன்று மாலை முடிவுற்றிருந்த முதலாம் நாள் பாரதப் போரின் அவலங்களெல்லாம் மீள மீளவெழுந்து அவன் மனத்தை உலுப்பிக்கொண்டிருந்தன. கையிழந்த காலிழந்த மெய்பிளந்த மனிதர்கள் எழுப்பிய வதைப்பாட்டின் பெருவோலம், குலைந்த சுருளின் விசையுடன் விரிந்தெழுந்துகொண்டு இருந்தது. போலவே, சரங்களைத் தம் தொண்டைக் குழிகளிலும் பழுவிலும் வயிற்றிலும் தாங்கிய யானை குதிரை ஆதியாம் படை மிருகங்களின் பெருந்தொனி அவனால் தாங்கமுடியாததாய் இருந்தது. அர்ச்சுனனுக்கான சாரதியத்தைச் செலுத்தியபொழுதிலும் கிருஷ்ணன் கவனம் கள நிகழ்வுகளில் பிசகாதேயிருந்தது. அந்த


முற்றுத் தரிப்பு

 

 காலம் என் நினைவின் தடங்களை இரண்டு தடவைகள் மீள மீளப் பதித்துச் சென்ற இடம் இதுதான். தேச வரைபடத்தில் அதனாலேயே இந்த இடம் பெரும் வரலாற்று முக்கியவத்துவம் கொள்கிறதெனச் சொல்லமாட்டேன். என்றாலும், இங்கே தகர்ந்திருப்பது என் வாழ்வின் இறுதி நம்பிக்கையாக இருக்கிறவகையில், இது என்னளவில் பெரும் முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது. இதே இடத்தில்தான் சமாதானம் நிலவிய அந்த 2003ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் ஒரு நீண்டகாலத்தின் பின்னால் அவளை நான் சந்தித்தேன். அப்போது அவளுடைய அகன்ற நெற்றியிலே குங்குமப்