கதையாசிரியர் தொகுப்பு: தீபச்செல்வன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

காவலன்

 

 பின் மாலையில் நகரமெங்கும் பனித் தூற்றலடிக்க, கிளிநொச்சி கந்தசுவாமி கோயிலின் மணியோசை ஒரு மெல்லிய இசையாய் படர்ந்தது. சாலை முழுதுமாய், விலத்தமுடியாதபடி நிறைக்கப்பட்ட வாகனங்கள். கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்குமாய், கிணற்றுக் கட்டிலில் பிள்ளையை கிடத்தி வந்த அவசரத்தோடு விரைந்தன. தோளிலொரு ஆட்டுக்குட்டி. சட்டை முழுவதும் குருதி. ஒரு சின்ன இடைவெளியெடுத்து, சைக்கிளை சாலையில் நுழைத்தான் மணியரசன். வேகமெடுத்து விளக்கொன்று எரிந்தணைவதுபோல், பொழுது பட்டுச் செல்கிறது. ஏன் இந்த அவசரம்? எனுமாற் போல் மரங்களுக்குப் பின்னால் ஒளித்திருக்கும் சூரியனை ஒருமுறை


ஆமிக்காரி

 

 பரந்தன் முல்லை வீதியில் ஊர்ந்தது அந்தப் பேருந்து. இருபுறமும் சிறகுகளைப்போல் பச்சைப் பசேரென்ற வயல். பாடசாலை செல்லும் மாணவர்களும் விசுவமடு இராணுவப் பண்ணைக்குச் செல்லும் தமிழ் இராணுவச் சிப்பாய்களுமாய் நிறைந்திருந்தது அப்பேருந்து. சத்தியாவுக்குப் பக்கத்திலிருந்த வயதான ஒரு முதியவர், திடீரென எழுந்து சற்றுத் தள்ளி அமர்ந்து, அவளையொரு வேற்றுக் கிரகவாசியைப்போலப் பார்த்தார். அத்தகைய பார்வைகள் வழமை என்றபோதும் அவளுக்கு இன்னுமொருமுறை உடல் கூசியது. மேலும் சில கண்கள் அவளுடைய சீருடையைத் திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டிருந்தன. தன்னால் மறக்க