கதையாசிரியர் தொகுப்பு: தியா

4 கதைகள் கிடைத்துள்ளன.

கனவுகள் வாழ்கின்றன

 

 வாழ்க்கை – 1 தென்றல்காற்று முகத்தில் பட்டுத்தெறித்தது. கண்ணில் பட்ட இடமெங்கும் வெட்டவெளியாக வயல்வெளி பரவிக்கிடந்தது. தென்றலின் இனிய வாசத்தை அள்ளிச் சுவைத்தபடி மூக்கின்வழியே இழுத்து ஆசைதீர வாய்வழியே விட்டு வெளியனுப்பி அனுபவித்தேன். இதமான காலைப்பொழுதில் குளக்கட்டின் வழியே பொங்கிப் பிரவாகிக்கும் வயற்காற்று மருதமர இலைகளை அசைத்து நடனம் பயிற்றிக்கொண்டிருந்தது. நிறைமாதமாய் தளதளத்து முட்டிமோதியது குளத்துநீர். வான் பாய்ந்து அடங்கியதற்கான ஆதாரங்கள் அங்குமிங்குமாக உருக்குலைந்திருந்தன. மூன்றாண்டுகளின்பின் என் சொந்த மண்ணில்… நான் பிறந்து ஓடியுலாவிய என் சொர்க்கபூமியில்


நான் கதை எழுதின கதை

 

 “என்னதான் மனிச வாழ்க்கை சுத்திச் சுழண்டாலும் மனிசன் என்பவன் கனவுகளைச் சுமக்கும் கூடம்தானே” என்று சொன்ன சிக்மன் பிராய்ட்டின் கருத்து உண்மைதான் போலிருக்கிறது. ஏனக்கு சிக்மன் பிராய்டு என்றால் தனியொரு ஈடுபாடு. மனிதர்கள் கனவுகளைச் சுமந்தலையும் ஜடங்கள்தானே. அவர்கள் தங்களால் கூற முடியாததை தம் ஆழ் மனதில் புதைத்து விடுகின்றனர். அது இன்று என் மனதை குடைந்து குடைந்து உறங்கவும் விடாமல் உண்ணவும் விடாமல் பெரும் பூதமாக அச்சுறுத்திக் கொண்டிருந்தது. உண்மையில் என்னால் என்னதான் செய்ய முடிகிறது.


காலத்துயர்

 

 காலத்தைச் சபித்தபடி அதைக் கட்டித் தழுவினாலும் அது நகர்ந்து கொண்டேதானிருக்கும். ஏனோதான் அவன் பிரிந்த நேரம் அவனுக்குள் அப்படியே நிலைத்து நின்றுவிட்டது. தனிமை உணர்வைச் சதா புதுப்பித்துக்கொண்டே இருந்தது… உலகின் ஏதோ ஒரு மூலையில்… எங்கோ ஒரு நாட்டில்… தன்னுடைய வாழ்வு இப்படிப் போகுமென்று அவன் கனவு கூடக் கண்டதில்லை. ஒரு காகத்தின் கரைதல்… சேவலின் கூவல்… குருவிகளின் சங்கீத ஓசை… குயில்களின் இனிய பாடல் எதுவுமேயற்ற ஒரு பாலைவனச் சிறையில் அவனுடைய வாழ்வு… வெளிச்சமென்றால் என்னவென்று


பதுங்குகுழி வாழ்வு

 

 எங்களுக்கு மட்டும் ஏன் இந்தக் கொடூர வாழ்க்கை. அவள் மீண்டும் விம்மி விம்மி அழத் தொடங்கினாள். “அழாதையம்மா! கண்ணைத் துடை. என்ன செய்யிறது? தமிழராய்ப் பிறந்து தொலைச்சிட்டோம் அதுதான்.” “அதுக்கு கடவுளுக்குக் கூடக் கண்ணில்லையா?” என்றபடி அவள் மேலும் விம்மத் தொடங்கினாள். பதுங்கு குழிக்குள் இருந்து இன்றுடன் வெளியுலகு பார்த்து மூன்று நாட்கள் ஆகி விட்டிருந்தது. நேற்றும் முந்தாநாளும் பிள்ளைகள் நித்திரை கூடக் கொள்ளவில்லை. ஒரே செல்லடி. இன்றுதான் செல்லடி கொஞ்சம் குறைந்து பிள்ளைகள் நித்திரை கொள்கிறார்கள்.